."ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Sunday, 5 July 2009

கரும்புலிகள் நினைவு நாள் - யூலை 5

உயிரையே ஆயுதமாக்கி எமக்காக விதையாக வீழ்ந்த வீரர்கள்.

பகைவருக்குள் வாழ்ந்து,
அவர்கள் உயிர் சாய்த்து,
உயிர் எறிந்த உறவாய்,
முகம் மறைத்த புலியாய்,
உணர்வுகள் புதிராய்,
வாழாது வாழ்கின்ற இவர்களை
நினைவு கூருவோம்.கரும்புலிகள் நாள் - யூலை 5

R.I.P ALL FALLEN SELFLESS HEROES


உயிரையே ஆயுதமாக்கி எமக்காக விதையாக வீழ்ந்த வீரர்களை நினைவு கூர்ந்து அவர்கள் கனவு மெய்ப்பட ஒன்றுபட்டு உழைப்போம் எனச் சத்தியம் செய்வோம்.


இதயத்தில் ஈரம் உள்ளவனே தன்னுயிரையும் ஈகம் செய்யும் ஆற்றல் படைத்த வீரனாகலாம்.

A tribute & salute to black tigers - July 5th.“பலவீனமான எமது இனத்தின் பலமான ஆயுதமாகவே நான் கரும்புலிகளை உருவாக்கினேன்” என்று கூறினார் தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள்.

இன்று கரும்புலிகள் நாள்!

தமிழீழ விடுதலைப் போராட்டத் தேரின் நகர்வுப் பாதையில் – இறுமாப்போடு எழுந்து நின்ற தடைகளை எல்லாம் தகர்த்து எறிந்தவர்களுக்கான நாள்.

எம்மை விழுங்கக் காத்திருந்த விசப் பூதங்களை எல்லாம் அகற்றி எமது விடுதலைப் பாதையினைச் செப்பனிட்டுத் தந்தவர்களுக்கான நாள்.

தரை, கடல், வானம், தமிழீழத்திற்கு உள்ளே, தமிழீழத்திற்கு வெளியே என எங்கெங்கு எல்லாம் எமது பகைவர்கள் வீற்றிருந்தார்களோ – அங்கங்கு வைத்தே அவர்களின் ஆணிவேர்களைப் பிடுங்கியவர்களுக்கான நாள்.

தமிழரது அரசியல் தாகத்தை இந்த உலகின் முற்றத்தில் முரசறைந்து சொன்னவர்களுக்கான நாள்.

எமது இனத்தின் அதிசயங்கள் அவர்கள்; எமது திமிரின் அடையாளங்கள் அவர்கள்.

நியாயபூர்வமான எமது இனத்தின் அரசியல் வேட்கையினது குறியீடுகள் அவர்கள்.

அரசியல் விடுதலையை வென்றெடுப்பதில் எமது இனத்திற்கு இருக்கும் உறுதிப்பாட்டினதும், அர்ப்பண உணர்வினதும் வெளிப்பாடு அவர்கள்.

அவர்கள் இல்லாமல் போனவர்கள் அல்ல; எம்முன் எல்லாமுமாய் நிறைந்தவர்கள்.

நேற்று வரை மட்டுமல்ல; இன்று முதலும், எமது விடுதலையை நாம் வென்றெடுக்கும் வரையும்… அதற்கும் அப்பாலும் அவர்களே எங்கள் நெஞ்சுரம்.

யாழ்ப்பாணம் நெல்லியடியில் 1987, ஜூலை 5 ஆம் நாள் – கரும்புலி கப்டன் மில்லர் தொடக்கி வைத்த இந்த வரலாறு, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு தனியான – தனித்துவமான – அத்தியாயமாகப் பதிவாகிவிட்டது.

அன்று முதல் – கடந்த 22 வருடங்களில் – உரிமை கோரியும் உரிமை கோராமலும், தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களில் – 700 வரையான கரும்புலி மாவீரர்கள் தமிழீழம் என்ற எங்கள் ஆன்ம தாகத்தின் வெளிப்பாடாக தமது உயிர்களைத் தந்தார்கள்.

தேசியத் தலைவர் அவர்கள் கூறியதனைப் போல – “அடுத்தவர்கள் இன்புற்று இருப்பதற்காக தம்மை இல்லாது அழித்த தெய்வீகத் துறவிகள் அவர்கள்.”

அந்த தெய்வீகத் துறவிகளின் நினைவுடன்… அவர்கள் தந்து சென்றிருக்கும் துணிவுடன்… அவர்கள் ஊட்டிச் சென்றிருக்கும் உறுதியுடன்… – அவர்கள் செப்பனிட்டுச் சென்றிருக்கும் பாதை வழியே… – எல்லோரும் வாருங்கள்… போராட்டத் தேரை இழுத்து எங்கள் தேசத்தை விடுவிப்போம்.

முதல் கரும்புலி கப்டன்.மில்லர்

http://www.vakthaa.tv/play.php?vid=4613ஈரமும் வீரமும்...

http://www.vakthaa.tv/play.php?vid=4618

முதல் பெண் தரைக்கரும்புலியின் வாழ்வியல் பதிவுகள்...

http://www.vakthaa.tv/play.php?vid=4614புதிய திசையொன்றின் புலர்வுதினம் - புதுவை இரத்தினதுரை கரும்புலிகள்நாள்

http://www.vakthaa.tv/play.php?vid=4617நினைந்துருகி - பாடல் சங்கமம் கரும்புலிகள் நாள்

http://www.vakthaa.tv/play.php?vid=4615

பாடல் - பாடும் அலையே... யூலை -5 கரும்புலிகள் நாள்

http://www.vakthaa.tv/play.php?vid=4616


யார் இவள் - முகமறியா பெண்கரும்புலி

http://www.vakthaa.tv/play.php?vid=4619

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் HolykuralKural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis