.



"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Friday, 30 October 2009

VIDEO: Tamils get no mercy at the hands of SIN-HELL-A police



A policeman attached to the Bambalapitiya Police who was wanted in connection with the forced drowning of a youth at the Bambalapitiya beach yesterday surrendered to the Bambalapitiya police this afternoon, police said. The Colombo Crime Division (CCD) has taken custody of the policeman and is carrying out further investigations over the incident

பம்பலப்பிட்டி கடலில் மூழ்கி மரணமான இளைஞர் தமிழர் என அடையாளம்: பொலிஸ் உத்தியோகத்தர் கைது

நேற்று பம்பலப்பிட்டி கடலுக்குள் குதித்தபோது தாக்கப்பட்டு உயிரிழந்த தமிழ் இளைஞரின் சடலம் சற்று நேரத்திற்கு முன்னர் கரை ஒதுங்கியது. இத் தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிமல் மெதிவக்க தெரிவித்தார். சற்று முன்கிடைத்த செய்தியின்படி இந்த இளைஞரைத் தாக்கியதாகக் கருதப்படும் பொலிஸ் உத்தியோகத்தரை விசேட பொலிஸ் குழு கைது செய்துள்ளது.

சடலம் கரையொதுங்கிய இடத்திற்குச் சென்ற இவ்விளைஞரின் சகோதரர் சடலத்தை அடையாளங் காட்டினார்.

இவ்விளைஞரைத் தாக்கியதாகக் கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தரைக் கைது செய்வதற்கும் ஏனையோரை அடையாளம் காண்பதற்கும் விசாரணைகள் நடத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

சற்று முன்கிடைத்த செய்தி

சற்று முன்கிடைத்த செய்தியின்படி இந்த இளைஞரைத் தாக்கியதாகக் கருதப்படும் பொலிஸ் உத்தியோகத்தரை விசேட பொலிஸ் குழு கைது செய்துள்ளது.

கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசேட பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொண்ட குழு, இவரை பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் வைத்துக் கைது செய்ததாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் இடம்பெற்றபோது கடற்கரைக்குச் சென்றதாகக் கூறப்படும் 6 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட 10 பேரிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

பம்பலப்பிட்டி கடலில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்ட இளைஞர் தமிழர் என அடையாளம் காணப்பட்டுள்ளது

பம்பலப்பிட்டியில் நேற்று கடலில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்ட, இளைஞர் தமிழர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் ரத்மலானையை சேர்ந்த 26 வயதான பாலவண்ணன் சிவக்குமார் என அவரது சகோதரர் அடையாளம் காட்டியுள்ளார்.

இவர் ஒரு மனநோயாளி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்கண்ட சாட்சியின்படி குறித்த இளைஞர் பம்பலப்பிட்டி கரையோர பிரதான வீதியில் நின்று வாகனங்களுக்கு கல்லெறிந்துள்ளார்.

இதன் போது வீதியில் சென்ற இராணுவ வாகனத்திற்கும் அவர் கல்லெறிந்துள்ளார். இந்தநிலையில் இராணுவ வாகனம் நிறுத்தப்படவே, அவர்,அருகில் உள்ள புகையிரத கடவைக்கு பாய்ந்து சென்றுள்ளார்.

இதன்போது, புகையிரதம் ஒன்று வரவே, அதற்கும் அவர் கல்லெறிந்துள்ளார்.உடனடியாக புகையிரம் நிறுத்தப்பட்டபோது இளைஞர் கடலில் குதித்துள்ளார்.

இந்தநிலையிலேயே பொதுமக்களில் இருவரும் பொலிஸ்காரர் ஒருவரும் கடலில் இறங்கி அவரை தாக்க முனைந்துள்ளனர். பொதுமக்களில் இருவர் குறித்த தமிழ் இளைஞரை பலமாக தாக்கியமையை தொலைக்காட்சி கமாரவின் மூலம் காணமுடிகிறது.

இளைஞர் தம்மை தாக்கவேண்டாம் என கும்பிட்டு கேட்டுக்கொண்டபோதும் அவரை கரைக்கு வரவிடாமல் பொதுமக்கள் இருவரும் தடிகளால் தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து தாக்குதலை சமாளிக்கமுடியாத இளைஞர் கடல் அலைக்கு மத்தியில் பின்னால் சென்ற போது அலை அவரை இழுத்துச் சென்றுள்ளது.

இந்தநிலையிலேயே அவர் மரணமாகியுள்ளார். இந்த மரணம் பலவந்தத்தினால் இடம்பெற்றதன் காரணமாக இதனை கொலை எனவே கருதவேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் Holykural



Kural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis