Sources from the Menik Farm IDP camp told Lanka News Web that President Mahinda Rajapakse’s eldest son, Namal Rajapakse, was received by a shower of stones when he visited the Menik Farm camp along with representatives of several media institutions.
Namal had visited the camp as the head of the NGO formed by him, Tharunyata Hetak, to inquire into how best they could assist the displaced persons in the camp.
Although the attack on Namal by residents in the camp was recorded on tape by the media crew that accompanied him, he had ensured that all recordings were deleted before they left the camp.

Mahiter Rajapakse
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் கைது செய்யப்பட்ட பின்னர் எவ்வாறு படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி வெளிவந்த "லங்கா நியூஸ்" சிங்கள இணையம் இலங்கை அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், செட்டிகுளம் மெனிக் முகாமில் ஆத்திரத்திற்குள்ளான இடம் பெயர்ந்த மக்கள் அங்கு விஜயம் செய்த ஜனாதிபதியின் மூத்த மகன் நாமல் ராஜபக்சவுக்கு கற்களால் எறிந்து, சேற்றைத் தூரி வாற்றிய சம்பவம் பற்றி படங்களுடன் விளக்கியிருந்தது.
அரசாங்கத்திடமிருந்து விடுக்கப்பட்ட வேண்டுகோளை அடுத்து இலங்கையில் இணைய சேவை வழங்குனர்களான இலங்கை ரெலிகொம் நிறுவனமும் ஏனைய இரண்டு தனியார் இணைய சேவை வழங்குனர்களும் உடனடியாகவே நடைமுறைக்கு வரும் வகையில் இணையத்தள இணைப்பை வழங்குவதை நிறுத்தியுள்ளன.
இணையத்தளத்தின் மீதான தடை இலங்கையில் நீண்டகாலமாக ஊடகங்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் ஒடுக்குமுறையின் இன்னொரு சம்பவம் எனலாம்.
பிரதான பத்திரிகை ஒன்றின் ஆசிரியர் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்தும், ஊடகவியலாளர்கள் இனம் தெரியாதவர்களால் அச்சுறுத்தப்படும் சம்பவங்கள் ஆற்று வெள்ளம் போல் பெருகி வருவதை அடுத்தும் மாற்றுக்கருத்துக்கள் மீதான சகிப்புத்தன்மை இன்மை காரணமாக இலங்கையின் ஊடகத்துறையின் எதிர்காலம் அச்சத்துக்குள்ளாகியுள்ளது.
இணையத்தளம் வெளியிட்ட இவ்விரண்டு செய்திகளும் தவறானவை என் நிரூபிக்க முடியாததால் தான் அரசாங்கம் மீது சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்றும், மறைமுகமாக மேலும் இவ்வாறான உண்மைகள் வெளிவராத வகையில் அந்த உண்மைகள் மக்களைச் சென்றடையாத வகையில் மறைமுகமாக அதனை முடக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கொழும்பிலுள்ள ஊடகச் செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அரசாங்கத்தின் மனித உரிமைகளை மீறும் சம்பவங்களையும் ஊடக உரிமைகளை ஒடுக்கும் சம்பவங்களையும் சுட்டிக்காட்டும் விமர்சிக்கும் ஊடகவியலாளர்களையும் ஊடகங்களையும் புலிப்பினாமிகள் என அரசாங்கம் நேரடியாகவும், தனது பினாமி ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்களூடாகவும் முத்திரை குத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர் அவர் ஜனாதிபதியாலும், அமைச்சர்களாலும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களாலும் புலிப்பினாமி எனக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.
புலம் பெயர் நாடுகளில் உள்ள இலங்கையின் தூதுவராலயங்கள் மூலமாக வாரியிறைக்கப்படும் பணத்தைக் கொண்டு புற்றீசல் போலக் கிளம்பியிருக்கும் இணையத்தளங்களும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சிப்பவர்களை இவ்வாறு புலிப்பினாமி எனக் குற்றஞ்சாட்டத் தவறவில்லை.
மாற்றுக்கருத்தின் பெயராலும், மார்க்சியத்தின் பெயராலும் அரசாங்கத்தின் உரிமை மீறல் நடவடிக்கைகளை விமர்சிப்பவர்களை புலிப்பினாமிகள் எனக் குற்றஞ்சாட்டும் இந்த ஊடகங்கள் தாம் நேரடியாகவோ அன்றி மறைமுகமாகவோ அரசாங்கத்தின் நடவடிக்கைகளை ஆதரிப்பதைப் பற்றி அக்கறைப்படுவதில்லை.
மக்களுடைய உரிமைகளை மறுப்பதற்கு ஒடுக்குமுறையாளர்கள் எந்த வழிமுறையையும் பாவிப்பதற்குத் தயங்குவதில்லை என்பதை இலங்கையின் வரலாற்றை அறிந்தவர் அறிவர்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.