."ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Friday, 25 December 2009

மீண்டும் எழுச்சி கொள்ளும் பிரித்தானியத் தமிழ் மாணவர்கள்

மயூரன்

பொதுவாக புலம்பெயர் நாடுகளில் எந்தவொரு செயற்பாடுகள் நடந்தாலும் அதில் பிரித்தானிய வாழ் மாணவர்களிள் பங்கு முக்கியமானதாக உள்ளது. அதாவது எந்தவொரு செயற்பாடுகள் நடந்தாலும் அதனை ஆரம்பித்து வைப்பது லண்டனிலிருந்தே. ஆரம்பத்தில் 31.01.09 அன்று நடந்த பேரணியின் போது வெஸ்மினிஸ்ரர் பாலத்தை மறித்திலிருந்து இன்று வரை சில செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். அந்தவகையில் லண்டன் குயின்; மேரீஸ் பல்கலைக்கழகத்தில் கடந்த 17.12.09 இனப்படுகொலைக் கெதிரான வாக்குக் கணிப்பு ஒன்று இடம் பெற்றது.

சர்வதேச மன்னிப்புச் சபையின் மாணவர் குழுவும் Amnesty International Student Groups) தமிழர் இனப்படுகொலைக் கெதிரான மாணவர் அமைப்பும் (சக்ரி) SAGT (Student Against Genocide of Tamil) இணைந்து லண்டன் குயின்; மேரிஸ் பல்கலைக்கழக அனைத்து மாணவர் அமைப்பின் ஆதரவுடன் கடந்த 17 ஆம் திகதி சில கோரிக்கைகளின் அடிப்படையில் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினார்கள்.

அதற்கு முன்பாக மாணவர் சமூகத்திடமும் பல்கலைக்கழக நிர்வாகத்திடமும் சில வாக்குறுதிகளைப் பெற்று கையெழுத்துப் பிரதிகளையும் பெற்றுக் கொண்டனர். அதாவது நீங்கள் இந்தப் பல்கலைக்கழகத்தில் ஒரு சுயாதீனமான கருத்துக்கணிப்பு வாக்ககெடுப்பை நடத்தி அதில் நீங்கள் வெற்றியடைந்தால் நாங்கள் இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான் என்பதையும், அப்போது நடந்த போர்க்குற்றத்திற் கெதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாங்கள் கம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவிப்போம் என்பதுதான் குயின் மேரீஸ் பல்கலைக்கழகம் கொடுத்த வாக்குறுதி. அந்த வகையில் SAGT அமைப்பும் சில தீர்மானங்களை முன்வைத்தே ஒரு கருத்துக்கணிப்பை மேற்கொண்டது. அந்தத் தீர்மானங்களாவன.

1) பல்கலைக்கழக மாணவர்களுக்கு எமது பிரச்சனைகள் பற்றியதான தெளிவூட்டல்களை வழங்குதல் (1948 ௨009

2) தமிழ் மக்கள் 60 வருட காலமாக தாழ்த்தப்பட்டு இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டனர். ஆகவே அவர்கள் சுய நிர்ணயத்தின் அடிப்படையில் தமது அரசியலை தாமே தெரிவு செய்தல்

3) ஐ.நா.வின் சட்டதிட்டத்திற்கமைய கொசோவோ, கிழக்குத் தீமோர் போல் தமிழ் மக்களும் தாமே தமது அரசியலை தீர்மானித்தல்

4) குயின் மேரீஸ் பல்கலைக்கழகம் பிரித்தானிய அரசு இலங்கைக்கு 13.7 மில்லியன் பெறுமதியான ஆயுதங்கள் வழங்கியமையைக் கண்டிக்க வேண்டும்.

5) அணிசேரா நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கையை நீக்க குயின் மேரீஸ் பல்கலைக்கழகம் பரிந்துரை செய்ய வேண்டும்.

6) 2010 ஆம் ஆண்டு இடம் பெற இருக்கும் பிரித்தானிய அனைத்து பல்கலைக்கழக மாணவர் சமுதாய அமைப்பு National Union of Student மாநாட்டில் குயின் மேரீஸ் பல்கலைக்கழக மாணவர் சமுதாயம் தமிழர் பிரச்சனையை கதைத்து அவர்களுக்கு ஆதரவாக செயற்பட வேண்டும்.

7) ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானிய அரசு, பிரித்தானிய வர்த்த வாணிப சங்கம் (British Retail Consortium), மாக்ஸ் அன் ஸ்பென்சர் (M&S), முதலானவற்றிற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

8) மனித உரிமை மீறல், போர்க்குற்ற மீறல் யாரால் நடத்தப்பட்டிருந்தாலும் அவர்கள் சர்வதேச நீதிமன்றத்திற்கு முன் நிறுத்தப்பட வேண்டும்.

9) முகாம்களில் உள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். அத்துமீறிய சிங்களக் குடிறே;றங்களை நிறுத்த வேண்டும்.

10) குயின் மேரீஸ் பல்கலைக்கழக நிர்வாகம் இலங்கையில் இனப்படுகொலை தொடர்பான ஆய்வை நடாத்தி அதனை கல்வித் திட்டத்திடத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும்.


ஆகிய தீர்மானங்களின் அடிப்படையில் இந்த கருத்துக்கணிப்பு இடம்பெற்றது. இந்த வாக்கெடுப்பில் 71.51 வீதத்தினர் இந்தத் தீர்மானங்களை ஏற்றுக் கொண்டுள்ளனர். இதனால் பல்கலைக்கழக நிர்வாகம் முன்னர் ஏற்றுக் கொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் கண்டனங்களை வெளியிட முன்வந்துள்ளது. இவ் அறிக்கைகளை விரைவில் பல்கலைக்கழகத்திடமிருந்து எதிர்பார்க்கலாம்.

அதில் குயின் மேரீஸ் சமுதாயம் தமிழர் இனப்படுகொலைக்கு எதிராக பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆதரவளிக்கவும் முன்வந்துள்ளது என்பது மாணவர் அமைப்பின் மிகப்பெரிய வெற்றியே. அத்துடன் இந்த கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புப் போல் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இடம்பெற வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம். இது குறித்து அவர்களிடம் கேட்டபோது எமது தேசியத்தலைவரின் வார்த்தைகளையே எனக்கும் கூறினார்கள் அதாவது சொல்லுக்கும் செயல் இருக்கவேண்டும் என விரும்புகிறோம் என்றனர்.

பொதுவாக இனப்படுகொலைக்கோ போர்க் குற்றங்களுக்கோ தனிப்பட்ட ரீதியில் வழக்குத் தொடர முடியாது. அதை ஒரு நாடே செய்ய வேண்டும் இதனால் தான் இந்த SAGT அமைப்பு பிரித்தானியாவில் கல்வி கற்கின்ற மாணவர்களை அணிதிரட்டி இதன்மூலம் பல்கலைக்கழகங்களினூடாக அந்த நாட்டிற்கு அழுத்தத்தைக் கொடுக்க முன்வந்துள்ளனர்.

அத்தோடு கடந்த தை மாதம் முதல் ஆரம்பமாகி இயங்கிக் கொண்டிருக்கின்ற சக்ரி அமைப்பு பிரித்தானியாவில் இடம் பெற்ற முதலாவது வீதி மறியல்ப் போராட்டம் முதல்க் கொண்டு ஆர்ப்பாட்டங்கள், மற்றும் தொழிற்சங்கங்கள், முதலானவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்துதல், மாக்ஸ் அன் ஸ்பென்சர் நிறுவனம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துதல் என்று தொடர்ந்து இன்று பல்கலைக்கழகங்கள் வரை தமிழர் பிரச்சனைகளைக் கொண்டு சென்றுள்ளனர். வெறும் தேர்தல் மட்டும் நடத்திவிட்டு ஓய்ந்து விடாமல் அதனுடன் இணைந்து தொடர்ச்சியாக குரல் கொடுத்தும் வருகின்றனர்.

ஆகவே ஒட்டுமொத்தமாக நோக்குகின்ற போது எல்லாத் தரத்திலுமுள்ள தமிழ் மாணவர்களை ஒருங்கிணைத்து அதன்மூலம் பிரி;த்தானியாவில் உள்ள அனைத்து மாணவர்களிடமும் எமது பிரச்சனைகளைக் கொண்டு சென்று அதை ஒரு நிறுவன ரீதியாக ஒருங்கிணைத்து அதனூடாக பெரிய தமிழ் எழுச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த சக்ரி அமைப்பினர் எனவே லண்டனில் மட்டுமல்ல எல்லா நாடுகளிலும் உள்ள பல்கலைக்கழகங்களிலும் இது போன்ற கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பை நடாத்தி அதன்மூலம் இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கும் போர்க்குற்றங்களுக்கும் நீதி சர்வதேசத்தில் நீதி கேட்டு தமிழர் சுயநிர்ணயத்திற்கான நீண்ட வரலாற்றுப் பயணத்தில் நீங்களும் உங்கள் பங்கினை மேற்கொள்ளுங்கள்.


நன்றி:
ஈழமுரசு.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் HolykuralKural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis