
இப்படித் தீய செயல்களில் ஈடுபடுவர் சிறுதொகையினர் என்றாலும் நாம் உதாசீனமாக இருந்துவிட முடியாது. தமிழன் என்றால் கடின உழைப்பிற்கும், கல்விக்கும், பண்பாட்டிற்கும், ஒழுக்கத்திற்கும் பெயர் போன இனம். இன்று இப்படித் தாழ்ந்து போவது வருத்தைத்தருவதோடு மட்டுமல்லாது புற்றுநோய் போல் தீயவர்கள் எம்மத்தியில் வளர்ந்து வருவதைக் கோடிட்டுக் காட்டுகிறது.
இதை மாற்றியமைக்க ஒட்டுமொத்தத் தமிழினமும் முன்வரவேண்டும். 'திருடனாகத் திருந்தா விட்டால் திருட்டையழிக்க முடியாது”. நாம் மனம் வைச்சால்தான் எம்மினத்தின் மத்தியில் உருவெடுத்துள்ள இந்த சமூகவிரோதிகளைக் களையெடுக்க முடியும். இவ்வாறு குற்றச்செயலில் ஈடுபடுவர்களை அந்தந்த நாட்டுக் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் எங்கள் சமூகத்தின் மேல் வீழ்ந்துள்ள கறையை அகற்ற அனைவரும் அர்ப்பணிப்புடன் முன்வரல் வேண்டும்.
மேலும் அறிய...
How Fraudsters Work
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.