காமக் களியாட்ட அமைச்சர் கருணாவால் வெளியிடப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் துண்டுப்பிரசுரம்.
அன்பார்ந்த தமிழ் பேசும் மக்களே

எமக்குரிய கடமை ஜனாதிபதியை பலப்படுத்தி எமது பிரதேச அபிவிருத்தியை, கல்வி அபிவிருத்தியை, பொருளாதார அபிவிருத்தியை, நிம்மதியை ஏற்படுத்த வேண்டும் என்பதாகும். இது எப்படி இருந்தாலும் எமது ஜனாதிபதி அவர்களே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருப்பதால் நாம் எதிர் காலத்தில் துஉர நோக்குப்பார்வையுடன் நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்துவது அவசியமானதாகும். எமது விசுவாசத்தையும், நட்பையும் இந்த ஜனாதிபதி தேர்தலிலே காட்டி இருப்போமானால் எமது தமிழ் மக்களின் மக்களின் நிலையம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பெருமையும் எங்கோ சென்றிருக்குமல்லவா...
பல்லாயிரக்கணக்கான் எமது இளைய சந்ததியினர் போர்க்களத்திலே பலிக்கடாக்களாக இன்னும் அழிவதுதான் உங்களுக்கு வேண்டுமா...? எமக்கு மீண்டும் கைதுகள், காணாமல் போதல், உயிரிழப்புகள், சொத்தளிப்புக்கள், நிம்மதியற்ற வாழ்வு என்பன தேவையா....? யுத்தமே வேண்டாம் காலத்துக்கு காலம் எம்மை தமிழ் வார்த்தைகளால் உசுப்பேற்றி எமது நிம்மதியை அளிக்கும் தமிழ் தேசியகஊட்டமைப்பு வேண்டவே வேண்டாம் இவர்கள் மூலம் தமிழ் மக்களின் வாழ்வு சிறப்படையுமா...? பலகோடி அபிவிருத்தியை செய்ய முடியுமா....? சீருடைக்காரருக்கு வாக்களித்து எமது பேரம் பேசிய சக்தியையும் பேரம் பேசிக்கொண்டிருக்கும் சக்தியையும் எதிர் காலத்தில் இழந்து விடுவதா...?
தொடர்ந்து தவறுகள் செய்து, செய்து மன்னிக்க முடியாத சமுதாயமாக நாம் இருக்காமல் எம்மை திருத்துவோம். அழைத்தவுடன் வரக்கூடிய நாம் சொல்வதை செய்யக்கூடிய, நம்பிக்கையாக எம் கோரிக்கைகளை நிறைவேற்றக்குடியவரை என்றும் எமது ஜனாதிபதியாக வைத்திருப்போம். இனிமேலாவது வெற்றியின் சின்னமான வெற்றிலை சின்னத்தின் பின் அணி திரள்வோம். நமக்கு நன்மை தரும் வகையில் செயத் படுவோம். வாழ்வை வளப்படுத்துவோம்.
என்றும் உங்கள் தலைவர்
கருணா அம்மான்
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.