.



"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Monday, 12 April 2010

பேர்லின் பேரணி! 20.04.2010 அனைவரும் வருக!!

தமிழ் மானிடத்தின் குரல்!!


எல்லாம் முடிந்துவிட்டதென்று ஒப்பாரி வைத்துக் கொண்டிருப்பதற்கான தருணமல்ல இது!!! இடிகளைத் தலைமீது தாங்குவது ஈழத்தமிழினத்துக்கு இஃதொன்றும் முதன்முறையும் அல்ல! யாருடைய மக்கள் நாம்?

அன்பான உறவுகளே !! எமது மக்களின் கண்களில் கண்ணீர் இருக்கும்வரை அதைத்துடைப்பதற்கான எமது கடமைக்கும் ஓய்வு கிடையாது !

சிங்களப்பேரினவாதத்தின் ஜனநாயகவிரோத - தமிழர் விரோதப்போக்கை இப்போதுதான் மேலைநாடுகள் நேருக்குநேரே அறியத்தொடங்கியுள்ளன. தனது சிங்களமக்களுக்கான அரசாக விளங்கக்கூடிய தகுதியே இல்லாத ஸ்ரீலங்காவின் அதிகாரபீடம், எப்படி தமிழ்மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்து ஜனநாயகத்தைப் பேணிக்கொள்ளப்போகின்றது என்ற சந்தேகம் முன்னணி நாடுகளிடம் வலுக்கத்தொடங்கியுள்ளது. போர்க்காலங்களில் ஸ்ரீலங்கா மேற்கொண்ட மனித உரிமைமீறலுக்கான சட்சியங்கள் வெளிவரத்தொடங்கியுள்ளன.

"பயங்கரவாதத்துக்கெதிரான போர்" என்ற முலாம் பூசப்பட்டு மிகக்கவனமாக சர்வதேசநாடுகள் மத்தியில் ஸ்ரீலங்காவானது மேற்கொண்டிருந்த பொய்ப்பரப்புரையின் முகத்திரை நாளுக்குநாள் கிழிந்துகொண்டேவருகிறது. இது வெற்றியின் பின்னரான பலவீனம். மமதையின் உச்சியில் நின்றுகொண்டு “ நீயும் பயங்கரவாதிதான் !” என ஐரோப்பிய நாடுகளை, ஸ்ரீலங்கா அதிகாரவர்க்கத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர். உண்மையை உலகம் உணரத்தொடங்கிவிட்டது.

* நமதுமக்கள் தத்தம்வாழ்விடங்களில் வாழக்கூடிய இயல்பானநிலைமை உடனடியாகத்தோற்றுவிக்கப்படவேண்டும்!!!!

* தடுப்புமுகாங்களில் எந்தவொருவிசாரணையுமின்றித் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் ஐரோப்பியஒன்றியத்தின் முழுமையான மேற்பார்வைக்குள் கொண்டுவரப்பட்டு, தத்தம் குடும்பங்களுடன்வாழ அனுமதிக்கப்படவேண்டும்.

* சிங்கள ஆட்சியாளர்களால் ,தமிழ்மக்கள்மீது, கடந்தகாலங்களில் மேற்கொள்ளப்பட்ட மனிதஉரிமை மீறல்கள், ஐ.நா. பொதுமன்றில் விசாரிக்கப்படவேண்டும்.

* இலங்கைத்தீவிலே, தமிழ்மக்களின் இனஉரிமைகள் மதிக்கப்பட்டு, கௌரவமான வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதுவாக, தமிழ்மக்களின் அபிலாஷைகளுக்கமைவான தீர்வு எட்டப்படவேண்டும்.

ஆகிய கோரிக்கைகளைமுன்வைத்து, யேர்மனியத் தலைநகர் பேர்லினில் மாபெரும் பேரணி !!!!!!

படுகொலைசெய்யப்பட்ட எம் ஆயிரமாயிரம் மக்களையும் , அவர்களைக்காப்பதற்காய் தமதின்னுயிரை அர்ப்பணித்த மாவீரர்களின் கடைசிக்கணங்களையும், தீயாய் நெஞ்சங்களில் சுமந்து வீறுகொண்டெழுவோம் !!!!


இடம் : Klinggelhöferstr. 1 தொடர்புகளுக்கு : குமரன் 0175 - 77 24 357 0175 - 77 24 357
10785 Berlin( Norway Botschaft)
காலம் : 20.04.2010
காலை 10:30 மணியிலிருந்து
மாலை 15:00 மணிவரை.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் Holykural



Kural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis