தேசியத் தலைவர் பிரபாகரன் 2012ல் தமிழீழத்தின் அதிபர் ஆகிறார்! அசத்தலான ரகசியம்.
தமிழீழ விடுதலை இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களின் உண்மையான ஜாதக அடிப்படையில் கிரக நிலைகளை ஆராய்ந்தபோது கிடைத்த உண்மைகளை இங்கே கூறுகிறோம்.
பிறந்தநாள் : 26-11-1954.
பிறந்த நேரம் : பகல் 12.00 மணி 02 நிமிடம்.
பிறந்த இடம் : யாழ்ப்பாணம் அருகிலுள்ள கிராமம்.
ஜென்ம லக்னம் : கும்பம்.
ஜென்ம ராசி: விருச்சிகம்.
ஜென்ம நட்சத்திரம் : கேட்டை 1-ஆம் பாதம்.
திதி: பிரதமை திதி.
ஜெயவருடம் கார்த்திகை மாதம் 11-ஆம் தேதி வெள்ளிக்கிழமை.
பாதசார விவரம்
அனுஷம் 3-ல் சூரியன்.
கேட்டை 1-ல் சந்திரன்.
அவிட்டம் 3-ல் செவ்வாய்.
விசாகம் 2-ல் புதன்.
பூசம் 2-ல் குரு (வக்ரம்).
விசாகம் 2-ல் சுக்கிரன் (வக்ரம்).
விசாகம் 1-ல் சனி.
பூராடம் 1-ல் ராகு.
திருவாதிரை 3-ல் கேது.
மூலம் 3-ல் மாந்தி.
அவிட்டம் 3-ல் லக்னம்.
ஜனன கால மகாதசை – புதன் மகாதசை இருப்பு: 14 வருடம் 07 மாதம் 13 நாட்கள்.
இந்தக் கணிப்பை எழுதிய நாள்: 21-05-2009. அன்று பிரபாகரன் வயது 54 ஐந்து மாதம் 25 நாள்.
தற்போது சந்திரன் மகாதசை- 07-07-2002 முதல் 07-07-2012 வரை நடக்கிறது.
இன்னும் மூன்று வருடம் ஒரு மாதம் 18 நாட்கள் சந்திர தசை பாக்கி உள்ளது.
சந்திர தசையில் புதன் புக்தி: 07-05-2008 முதல் 07-10-2009 வரை.
கேது புக்தி: 07-10-2009 முதல் 07-05-2010 வரை.
சுக்கிரன் புக்தி: 07-05-2010 முதல் 07-01-2012 வரை.
சூரியன் புக்தி: 07-01-2012 முதல் 07-07-2012 வரை.
07-07-2012-ல் சந்திர தசை முடிகிறது.
சந்திர தசையில் புதன் புக்தியில் அந்தரங்கள் முறையே-
08-05-2009 முதல் 17-07-2009 வரை குரு அந்தரம்.
17-07-2009 முதல் 07-10-2009 வரை சனி அந்தரம்.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் 26-11-1954 என்பதும்; அவருக்கு கேட்டை நட்சத்திரம் என்பதும் நூறு சதவிகிதம் உண்மையானது!
கனடா நாட்டில் வசிக்கும் அவருடைய சகோதரி ஒரு தமிழ் வார இதழுக்கு அளித்த பேட்டியில்- பிரபாகரனின் பிறந்தநாள் 26-11-1954 பகல் 12.00 மணி 02 நிமிடம் என்றும்; பிரபா கரனின் நட்சத்திரம் கேட்டை விருச்சிக ராசி யாழ்ப்பாணம் அருகில் பிறந்தார் என்றும் சொல்லியிருந்தார். இந்த விவரங் களைக் கொண்டு சரியான விவரம் தானா என்று உறுதி செய்து கொண்டு தெளிவாகக் கணிக்கப் பட்ட ஜாதகம் இது.
பிரபாகரனின் ஜாதகப்படி ஆயுள்காரகன் சனி உச்சம். லக்னாதிபதி- உயிர்காரகன் சனி உச்சம். ஆயுள் ஸ்தானாதிபதி புதன் பாக்ய ஸ்தானத்தில் சுக்கிரன் சனியுடன் சேர்க்கை பெற்றுள்ளார். இந்த ஜாதக அமைப்பின்படி எண்பது வயதுவரை பிரபாகரனுக்கு மரணம் கிடையாது!
இந்த உண்மையான ஜாதகப்படி பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்!
பிரபாகரன் எண்பது வயதுவரை நீண்ட ஆயுளுடன் வாழ்வார். பிரபாகரன் ஜாதகம் உலகப் புகழ்பெற்ற – மிகவும் விசேஷமான ஜாதகம்!
பிரபாகரன் தன் லட்சியத்தைக் கண்டிப்பாக அடைந்தே தீருவார். 07-07-2012 முதல் 07-07-2013-க்குள் “தனித் தமிழீழம்’ என்ற உயர்ந்த லட்சியத்தைக் கண்டிப்பாக அடைவார்.
பிரபாகரன் 07-07-2012-க்குமேல் தனித் தமிழீழத்தின் தளபதியாக பல வருடங்கள் ஆட்சி செய்து உலகப் புகழுடன் வாழ்வார். பிரபாகரன் ஜாதகப்படி 07-07-2012 முதல் அவருடைய ஆயுள்காலம் வரை தனித் தமிழீழத்தின் அதிபராக ஆட்சி செய்வார்.
07-07-2012 முதல் 07-07-2013-க் குள் செவ்வாய் தசையில் ராகு புக்தியில் தனித் தமிழீழ ம் மலரும். செவ்வாய் கிரகம் வலுவாக லக்னத்தில் நின்றதைக் காண்க. அவிட்டம் 3-ல் செவ்வாய் நின்ற தையும் காண்க. செவ்வாய் கிரகம் போர்க்கிரகம்; பூமிகாரகன். செவ்வாய் தைரிய- வீர- பராக்கி ரம ஸ்தானத்துக்கு அதிபதி. செவ்வாய் ராஜ கிரகம். செவ்வாய் சொந்த சாரம் பெற்று வலுவாக லக்னத்தில் நின்றதால் 07-07-2012-க்குமேல் செவ்வாய் தசையில் பிரபாகரன் ஈழ நாட் டின் அதிபதியாவார். செவ்வாய் கிரகத்தின் பூமியே தனித் தமிழ் ஈழம்தான். தனித் தமிழீழத்தின் அதிபதியே செவ்வாய் கிரகம்தான்.
நன்றி:
http://kuraltv.com/tamil2_14-06-10.html
Subscribe to:
Post Comments (Atom)
Thirukkural திருக்குறள் Holykural
Kural குறள் - 533
பொருட்பால் - பொச்சாவாமை
எப்பால் நூலோர்க்கும் துணிவு.
Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.
Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
எனக்கு இதிலெல்லாம் ஆர்வமோ, நம்பிக்கையோ கிடையாது....
ReplyDeleteஅண்ணனுக்கும் தான்.
ஆனால்,
உங்கள் ' ஜாதக ' கணிப்பின் படி பார்த்தால்,
எனக்கும் விருச்சிக ஜென்ம ராசி, கும்ப லக்னம் தான்.
என்னுடைய அதிபதி ' செவ்வாய் ' கிரகம்.
அதனால்தான் என்னவோ , என்னை மிகவும் ஆட்டுவிக்கிறார், தனி ஈழம் கிட்டாத, அண்ணனை பிரிந்த துயரத்தில் போலும்.
உங்களுடைய கணிப்பின் படி பார்த்தால்,
அண்ணனுடன் இணைந்து, ஈழம் காண என்னுடைய பங்கும் அளப்பரியாது இருக்கும் ... கோள்களின் கணிப்பை விட.....
5 இல் கேது புத்திர நாசம் இருக்க வாய்ப்பு இருக்கு,அது உண்மை தான்.தட் பொது இறந்த நாளாக சொல்லப்பட்ட நாட்களில் சந்திர திசை புதன் புத்தி.சந்திரன் நீசம் ,அதனால் அது மிக பெரிய ஒரு கண்ட காலமாக இருந்து இருக்கலாம்.சந்திரம் ஆறாம் அதிபதி ,6ஆம் வீடு எதிரிகளுக்கான வீடு ,இதனால் எதிரிகள் மூலம் கண்டம் ஏற்பட்டு,அந்நியதேசத்தில் மறைந்து வாழ வாய்ப்புகள் உண்டு.எனவே சந்திர திசை முடிய இவ்வாழ்க்கை முடிந்து வெளிப்பட வாய்ப்புகள் உண்டு.2012இல் நிறைய மாறுதல்களை உலகம் சந்திக்க இருப்பதாக கூறப்படுகின்றது .நாம் அதை நமக்கு சாதகம் ஆக நினைத்து நம்மால் ஆன பங்களிப்பை செய்ய வேண்டும் !!!
ReplyDelete