தமிழ் தந்து கோடி யுகங்கள் தாண்டியும் இன்றும் யோதிவடிவாக வாழ்கிறார்கள் சித்தர்கள். சித்தர்கள் மொழியே தமிழ்மொழி. சித்தர்கள் கோடியுகம் வாழ்ந்தால் தமிழும் கோடியுகங்கள் வாழ்வதாகக் கருதமுடியும். இது பலரதும் புருவத்தை நம்பமுடியாமல் உயர்த்தவே செய்யும். தமிழ் பேசவல்ல சித்தர்கள் ௯(9) கோடி இருப்பதாக சித்தநூல்களில் கூறப்பட்டுள்ளது. சித்தர்கள் தந்த தமழில் இல்லாதது ஒன்றுமில்லை. விளையாட்டாக வெளிநாட்டவர் ஒருவர் அப்ப மயிர்பற்றி சித்தர்கள் தமிழில் உள்ளதா எனக்கேட்க, உண்டெனக் கூறி தமிழறிஞர்கள் ஆயிரம் உதாரணம் காட்ட அசந்துவிட்டதாகக் கூறப்படுகிறது
உதாரணத்திற்கு:-
தலை முடி கறுக்க:
"எண்ணெய் இட்டு முழுகும் பொது
நெல்லிமுள்ளி யெடுத்து பாலில் ஊறவைத்து
அரையப்பா அரைத்து போட்டு முழுகு"
நெல்லிமுள்ளியை எடுத்து பாலில் ஊறவைத்து அரைத்து எடுத்துஇ எண்ணெய் தேய்த்து முழுகும் போது தலையில் தேய்த்து முழுகினால் தலை முடிகறுக்கும்.
"தலை நரைக்கு மாத்து பொன்பருத்தி
யிலைச் சாறு தேச்சு முழுவு கறுப்பாம்".
பொன்பருத்தியிலைச் சாறெடுத்து தலையில் பூசி முழுக நரை முடி கறுக்குமாம்.
சித்தர்கள் அறிந்திராத கலையெதுவுமில்லை. 64 கலைகளையும் தாண்டி 65வது கலையாகிய சாகாக்கலையையும் அறிந்திருந்தனர். இன்றும் இவர்கள் யோதிவடிவாக வாழ்கிறார்கள் என நம்பப்படுகிறது. அகத்தியர், திருவள்ளுவார், 150 வருடங்களுக்கு முன் வாழ்ந்த வடலூர் வள்ளலார் வரை அனைவரும் சித்தர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் திருக்குறளை மட்டும் அருளவில்லை. அய்யன் வள்ளுவப்பெருமான் அருளிய நூல்கள் எண்ணற்றவை. இனி வரும் ஞானச்சித்தர் காலத்தில் இவை மக்கள் பயன்பாட்டிற்கு வரும். அய்யன் வள்ளுவப்பெருமான் அருளிய நூல்களில் சில :
1. ஞானவெட்டியான் - 1500
2. திருக்குறள் - 1330
3. ரத்தினசிந்தாமணி - 800
4. பஞ்சரத்தனம் - 500
5. கற்பம் - 300
6. நாதாந்த சாரம் - 100
7. நாதாந்த திறவுகோல - 100
8. வைத்திய சூத்திரம் - 100
9. கற்ப குருநூல் - 50
10. முப்பு சூத்திரம் - 30
11. வாத சூத்திரம் - 16
12. முப்புக்குரு - 11
13. கவுன மணி - 100
14. ஏணி ஏற்றம் - 100
15. குருநூல் - 51
(இவர்கள் அருளிய நூல்கள் இன்னும் இருக்கலாம்)
அய்யன் வள்ளுவர் அருளிய திருக்குறளில் துறவறவியல் பகுதியில் அருளுடைமை, புலால் மறுத்தல், தவம், கூடா ஒழுக்கம், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை, நிலையாமை, துறவு, மெய்யுணர்தல், அவாவறுத்தல் ஆகிய 13 அதிகாரங்களில் ஞானக்கருத்துக்கள் உள்ளன. அதிலொரு சில குறள்கள் மட்டும் எடுத்துக்காட்டுகிறோம்.
(எ.கா)
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பு அறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை. (குறள் : 345-துறவு)
ஓர்த்துஉள்ளம் உள்ளது உணரின் ஒரு தலையாப்
பேர்த்துஉள்ள வேண்டா பிறப்பு. (குறள் : 357-மெய்யுணர்தல்)
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு. (குறள் : 358-மெய்யுணர்தல்)
சார்புஉணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றுஅழித்துச்
சார்தரா சார்தரும் நோய். (குறள் : 359-மெய்யுணர்தல்)
திருவள்ளுவர் Thiruvalluvar Facebook Group Facebook Group |
-தொடரும்-
என் அன்பிற்கினிய உறவுகளே! அடியேனும் தமிழ்த் தேடலின் போது கிடைக்கப்பெறும் தகவலைத் தொடர்ந்து பகிர்கிறேன். என் மொழி என்பதால் சொல்லவில்லை. எங்கள் மொழி 1000/2000/5000 ஆண்டுகள் பழமை வாயந்ததல்ல. கோடி யுகங்கள் பழமை வாய்ந்தது. அதற்குரிய ஆதாரங்களைத் தேடுவதே என் பிறப்பின் பணியாக ஏற்றுத் தேடலில் இறங்கியுள்ளேன். உங்கள் ஆதரவையும் வேண்டி நிற்கிறேன். நன்றி.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.