
பிரித்தானிய மகாராணியின் பிறந்த தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் அருள் குமரனின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
மகளிர் நல மருத்துவம் குறிப்பாக மகப்பேற்று மருத்துவ சிகிச்சை முறைமைகளுக்கு வைத்திய ரீதியாக ஆற்றிய அளப்பரிய பங்களிப்பினை கௌரவிக்கும் வகையில் இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
லண்டன் சென் ஜோர்ஜ் பல்கலைக மகப்பேற்று பிரிவு தலைவராகவும், சென் ஜோர்ஜ் வைத்தியசாலையின் மகப்பேற்று பிரிவு மேலாளராகவும் அருள்குமரன் கடமையாற்றி வருகின்றார்.
பிரித்தானிய அரசாங்கம் இவ்வாறான ஓர் கௌரவத்தை வழங்கும் என தாம் எதிர்பார்க்கவில்லை எனவும், நைட் பட்டம் வழங்கப்பட்டமை மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் அருள்குமரன் தெரிவித்துள்ளார்.
61 வயதான சபாரத்தினம் அருள்குமரன், யாழ்ப்பாணம் கந்தர்மடத்தை பிறப்பிடமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அருள்குமரன் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் மஹஜன கல்லூரியில் தமது பாடசாலைக் கல்வியைத் தொடர்ந்து பின்னர் கொழும்பு மருத்துவ கல்லூரியில் மருத்துவ மாணி பட்டம் பெற்றுக் கொண்டார்.
http://www.elsevier.com/wps/find/editorshome.editors/arulkumaran
http://www.hospitaldr.co.uk/features/interview-prof-sir-sabaratnam-arulkumaran
http://news.sma.org.sg/4108/Feature.pdf
http://www.lankanewspapers.com/news/2007/4/14249_3.html
http://www.obgyn.net/displayarticle.asp?page=%2Fbibliography%2Farulkumaran
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.