
இதனால் கடினமான சொற் களால் அமைந்த அறிவியல் சொற்கள் உயர் கல்வி அறிவியலில் மாணவர்களைக் கவரவில்லை.
கல்லூரிகளில் அறிவியலை தமிழில் படிப்பதை விட, ஆங்கிலத்தில் படிப்பது எளிதாக உள்ளது என மாணவர்கள் கூறும் அளவுக்கு பாடப்புத்தகங்கள் இருந்தன. இரண்டாவதாக அறிவியல் பாடங்களை தமிழிலும் படிக்கலாம், தேர்வுகள் எழுதலாம் என்ற நிலை வந்தாலும் அதற்கேற்ற "அறிவியல் தமிழ்' சூழல் கல்லூரிகளில் இல்லை. பள்ளிகளைப் பொறுத்தவரை, மாணவர்கள் ஆங்கிலத்தை பாட மொழியாகக் கொண்டு அறிவியலைக் கற்கும் போது, அறிவியலை விட ஆங்கிலத்தைப் புரிந்து கொள்வதற்கே அதிக நேரம் ஆகிறது.
ஆங்கில வழி அறிவியல் கல்வி, தாய் மொழி அறிவியல் கல்வியைப் போல சிந்தனையைத் தூண்டுவதில்லை. மனப்பாட இயந்திரங்களாகவே மாணவர்கள் உள்ளனர்.
இதனால் தான் பிளஸ்2வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், அகில இந்திய நுழைவுத் தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்களை பெறும் நிலை உள்ளது. இந்த நிலையை இப்போது தான் பெற்றோர்கள் உணர்கின்றனர். பெற்றோர் களின் சி.பி.எஸ்.இ., மோகத் திற்கு இந்த உணர்தலே காரணம்.
இன்றைய பேராசிரியர்களுக்கு, அவர்கள் பாடத்தை ஆங்கிலத்தில் விளக்கிக் கூறும் அளவுக்கு, தமிழில் விளக்கிக் கூற முடியாது. கிராமப்புற மாணவர்கள் இன்ஜினியரிங் கல்லூரிகளில் முதல் ஆண்டில் மிரண்டு நிற்பதற்கு இதுதான் காரணமாகும்.
தமிழ் மொழி பேராசிரியர் களுக்கு தடையாக இருப்பதால் கல்லூரிச் சுவர்களைத் தாண்டி மக்களிடம் அறிவியலைக் கொண்டு செல்வதும் இயலாத செயலாக உள்ளது.
அறிவியல் தமிழை வளர்க்க, மக்கள் அதிகம் கேட்கும் எப்.எம்., ரேடியோக்களும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அரசு சார்பில் நடத்தும் ரேடியோ, அறிவியல் தமிழை வளர்க்க நடத்தும் "அறிவியல் சுரங்கம்' போன்ற நிகழ்ச்சிகளுக்கு வரும் பேராசிரியர்கள் தமிழில் விளக்கிக் கூற முடியாமல், தொகுப்பாளர்களின் கேள்விகளுக்கு விடை தெரிந்தும் திணறுகின்றனர்.
ஜப்பானில் ஒரு ஆங்கில வார்த்தை கூட தெரியாமல், ஒருவர் விஞ்ஞானி ஆக வர முடியும். இந்தியாவில் அந்நிலை வந்தால் தான் அறிவியலில் உண்மையான வளர்ச்சி ஏற்படும்.
கலை, இலக்கியமாக மட்டுமின்றி அறிவியல், தொழில்நுட்பம், அன்றாடம் பயன்பாட்டுக்கு ஏற்ற மொழியாக, எந்த மொழி வளர்கிறதோ அந்த மொழி தான் காலத்தைக் கடந்து நிற்கும். செம்மொழி தமிழ் அந்த உயரிய நிலையை அடைய வேண்டும்.
நன்றி:
http://www.facebook.com/notes/tamil-tamil/cemmoliyum-ariviyalum-/403680274709
காணொளி: செம்மொழியான தமிழ் மொழியாம்
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.