.



"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Monday 7 June 2010

பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா?

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்றுதான் பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள்...பிரபாகரன் ஒரு தெய்வப் பிறவி… என்று பிரபாகரனின் தாயாருக்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியக் கலாநிதி மயிலேறும் பெருமாள் ஜூனியர் விகடனுக்கு பேட்டியளித்துள்ளார்.

அப்பேட்டியின் விபரம் வருமாறு:

பார்வதி அம்மாளுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடிகிறதா… தேவையான வசதிகள் இருக்கின்றனவா?

” இது இலங்கை அரசாங்கம் நடத்தும் மாவட்ட மருத்துவமனை. தேவையைவிட இங்கே ஆட்கள் குறைவுதான். 87 படுக்கைகள் இருக்கின்றன. ஆண்கள், பெண்களுக்குத் தனித்தனியாகவும் பிரசவத்துக்குத் தனியாகவும் விடுதிகள் உள்ளன. சிறிய அளவில் அறுவை சிகிச்சைகளையும் செய்கிறோம். 22 மருத்துவர்கள் தேவைப்படும் இடத்தில், நான்கு மருத்துவர்கள்தான் இருக்கிறோம். ஒரு பல் மருத்துவர், 30 செவிலியர்களும் பணியாற்றுகின்றனர். இருந்தும் பார்வதி அம்மாளுக்குச் சிறப்பான சிகிச்சையை அளித்துவருகிறோம்.

இப்போது எப்படி இருக்கிறார்?


மோசம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். வலது பக்கம் முழுவதும் பாரிச வாயு தாக்கியுள்ளது. மூன்று வேளைகளும் நான் அவரைப் பார்த்துச் சோதிக்கிறேன். மற்ற மருத்துவர்களும் கவனிக்கிறார்கள். காலையில் ஆப்பம், மதியம் சிறிதளவு சாப்பாடு, இரவு பால் ஆப்பம் அல்லது முட்டை ஆப்பம் சாப்பிடுகிறார். இடையிடையே வாழை, ஆரஞ்சுப் பழங்கள் தருகிறோம்… தானாகச் சாப்பிட முடியவில்லை. ஊட்டி விடுகிறோம். உளுத்தம் களி, புட்டும் தொட்டுக்கொள்ள தேங்காய்ச் சம்பலும் கேட்பார்.

வீட்டில் இருந்து எடுத்து வந்துதான் தருவோம். இயல்பாகப் பேசுகிறாரா? பிரபாகரன் குடும்பத்தினர் யாரும் தொடர்பில் உள்ளனரா?

எங்களிடம் நன்றாகக் கதைப்பார். நான் அவரிடம், ‘நீங்கள் கேட்கும் உணவுப் பதார்த்தங்களை எடுத்து வந்தால், என் மனைவி என்னை அடிக்க வருகிறாள்’ என்பேன் விளையாட்டாய். அவர், ‘அப்படியா, நல்லா அடிக்கட்டும் என்பார் கஷ்டப்பட்டுச் சிரித்தபடி. கனடாவில் இருந்து பிரபாகரனின் சகோதரி விநோதினியோ, டென்மார்க்கில் இருக்கும் பிரபாகரனின் அண்ணன் மனோகரனோ, அமெரிக்காவில் இருக்கும் விநோதினியின் மகளோ… யாராவது தினமும் பார்வதி அம்மாளிடம் பேசி விடுவார்கள். சுற்றியுள்ள அவருடைய உறவினர்களும் தினமும் வந்து பார்த்துவிட்டுச் செல்கின்றனர். ஆனால், வரும் எல்லோருக்கும் ‘ஆர்மி அல்லது போலீஸ் பார்த்துவிடுமோ’ என்ற பயம் அதிகம். சிறிது நேரம் இருப்பார்கள். அவருடன் யாராவது பேசிக்கொண்டே இருந்தால் அவருக்கு நல்லது. வயோதிகத்தால் ஞாபக மறதி கூடிவிட்டது. சில சமயம் தாதியர்கள், ‘உங்கள் பேரன் பாலச்சந்திரன் எங்கிருக்கிறான்?’ என்று கேட்டால், ‘அவன் காட்டுக்குள்ள இருக்கிறான்’ என சொல்வார். உறவினர்கள் வந்து பேசப் பேச, பழையவற்றை ஞாபகப்படுத்திப் பேசுகிறார்.

பார்வதி அம்மாளைப் பார்க்க பார்வையாளர் கூட்டம் வருமா?

தமிழர்கள், சிங்களர்கள், செய்தியாளர்கள் எனப் பலரும் வருகிறார்கள். யாரையும் தடுப்பது இல்லை. வயோதிகமான ஒரு பெண்ணை விருப்பப்பட்டு பார்க்க வருவோரை மருத்துவன் என்ற முறையில் தடுக்க விரும்பவில்லை. தமிழ்நாட்டில்தான் ‘அவர் பார்க்கக் கூடாது, இவர் பார்க்கக் கூடாது’ என்று சொல்லிவிட்டார் கலைஞர் அய்யா. மருத்துவன் என்ற முறையில் சொல்கிறேன்… வயோதிக நோயாளிகளுக்கு அவர்கள் கேட்பதைக் கொடுப்பதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சி தருவதாகும். இல்லையென்றால், மனவருத்தம் அடைவார்கள்தானே… அப்படி வருத்தப்படவைத்து சிகிச்சை அளிப்பதில் அர்த்தம் இல்லை. அதே நேரம், பார்வதி அம்மாளைப் பார்க்க வருபவர்கள் அன்பு மிகுதியால் அவர் உடல் நலத்துக்கு ஒவ்வாத பலவிதமான உணவுப் பொருள்களைத் தந்து விடுகிறார்கள். அதைக் கட்டுப்படுத்தியே ஆகவேண்டும். ‘பார்வையாளர்கள் எந்தப் பொருளையும் அம்மாவுக்குக் கொண்டுவரக் கூடாது’ என உத்தரவிடப் போகிறேன்.

” பிரபாகரனின் அம்மாவுக்குச் சிகிச்சை அளிப்பதால், உங்களுக்கு பிரச்னைகள் ஏதும்..?

81 வயது நோயாளி அந்த அம்மா. நான் அவருடைய மருத்துவர். இதில் என்ன பிரச்னை? இனிமேல் என்ன பிரச்னை வந்துதான் என்ன? 70 வயதிலும் நான் இந்த வேலையில் இருக்கிறேன். தொழில் தர்மத்துடன் செயல்படுகிறேன். இப்போதைக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. முன்பு, நான்கு முறை துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பியிருக்கிறேன். ஒரே நேரத்தில் புலிப் போராளிகளுக்கும் ராணுவப் படையினருக்கும் சிகிச்சை அளித்துள்ளேன். அப்போது, அவர்களுக்குள் தாக்குதலும் நடந்துள்ளது. இப்போது அதையெல்லாம் கடந்து நெடுந்தூரம் வந்து விட்டோம்.

பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா… இல்லையா?

நான் மன்னாரில் மாவட்ட வைத்திய அதிகாரியாக இருந்தபோது, பிரபாகரனின் அப்பா வேலுப்பிள்ளை, மாவட்ட நில அதிகாரியாக இருந்தார். எனக்குத் தெரிந்தவரை போராட்டம் என்று கையில் ‘துவக்கு’ தூக்கிய பிறகு தன் குடும்பத்துடன் பிரபாகரனுக்குத் தொடர்பு இல்லை. சமாதானக் காலத்தில்தான் பெற்றோருடன் இணைந்திருந்தார். என்னைப் பொறுத்தவரை, அவர் ஒரு தெய்வப் பிறவி, அசாதாரணமான மனுஷன். ஆனால், அவர் எடுத்த வழிதான் வேறு. அவர் எங்கோ உயிருடன் இருப்பதாகவே இங்குள்ள பெரும்பாலான மக்கள் சொல்கிறார்கள்...

******************************************************************


read more...@
Hon. V. Prabhakaran : An Avathar for Thamils

1 comment:

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் Holykural



Kural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis