கோஷா முறையை ஆதரிக்கும் கற்றறிந்த முஸ்லிம் ஆண்கள் எவருமே இருக்கமாட்டார்கள். அப்படி எவரேனும் இரண்டொருவர் இருந்தால், முஸ்லிம் இளைஞர்கள் கூற வேண்டியது இதுதான். "தயவு செய்து நீங்கள் ஓராண்டுக்காவது முகமூடி போட்டு வீட்டிற்குள் இருந்து பாருங்கள்"
-[பெரியார், 29.11.1947]
பழைமை விரும்பிகளின் திருப்திக்காக மனித சமுதாயத்தைப் பலியிடுவது என்பது மதியீனம்.
-[பெரியார், 29.11.1947]
எந்த மனித சமுதாயம் பழைமையிலுள்ள தீமைகளைக் களைந்து புதுமையிலுள்ள நன்மைகளை ஏற்றுக்கொள்கிறதோ, அந்தச் சமுதாயந்தான் வாழ்க்கை ஏணியில் ஏறிச் செல்ல முடியும். மதம், மத ஆதாரம் என்பவையாவும் மனிதனுக்காக, மனிதனால் வகுக்கப்பட்டவை என்ற உண்மையை உணராத மக்கட்பிரிவு அறிவுத் துறையில் முன்னேறவே முடியாது.
-[பெரியார், 29.11.1947]
மனிதனால் வகுக்கப்பட்டவை என்ற உண்மையை உணராத மக்கட்பிரிவு அறிவுத் துறையில் முன்னேறவே முடியாது. மனிதன் மதத்திற்கு அடிமையாக இருத்தல் கூடாது. அது மனிதத் தன்மைக்கே இழுக்கு.
-[பெரியார், 29.11.1947]
கோஷா முறையினால் சூரிய வெளிச்சமும், நல்ல காற்று இல்லாமல் காசம் போன்ற நோய்கள் எளிதில் பரவுவதாக எல்லா டாக்டர்களும் கூறிவிட்டனர். இயற்கையாகக் கிடைக்க வேண்டிய வெளிச்சத்தையும், காற்றையும் மனித சமுதாயத்தின் சிறந்த பகுதியாகிய தாய்க் குலத்திற்கு மட்டும் கிடைக்காமல் தடுப்பது எவ்வளவு பெரிய அக்கிரமம் என்பதை ஆண்கள் ஆலோசித்துப் பார்க்க வேண்டுகிறோம். வட நாட்டு ஹிந்துக்களிடையே கூட இந்தக் கோஷா முறை இருந்து வருகிறது. இதுவும் விரைவில் ஒழிந்துவிடும் என்பதே நம் நம்பிக்கை.
-[பெரியார், 29.11.1947]
ஈரானின் முஸ்லிம் பெண்கள் முகமூடியில்லாமல் கடைகளுக்குச் செல்வதாகவும், அப்பேர்ப்பட்டவர்களுக்கு எந்தச் சாமானையும் கொடுக்கக்கூடாது என்று முஸ்லிம் வைதிகர்கள் கிளர்ச்சி செய்வதாகவும், சில நாட்களுக்கு முன்னர் ஒரு செய்தியைப் படித்தோம். பழைமை விரும்பிகளும், பாசி படர்ந்த மதியினரும், எந்த நாட்டிலும் எந்த மதத்திலும் உண்டு. கிருஸ்து மதத்திலும், கத்தோலிக்கக் குருமாரும், ஹிந்து மதத்தில் ஆரியரும், புத்த மதத்தில் பிட்சுகளும் இல்லையா?
-[பெரியார், 29.11.1947]
முஸ்லிம் பெண்களிடையே ஆயிரக்கணக்கான பெண் டாக்டர்கள், ஆசிரியைகள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், வக்கீல்கள், அரசியல்வாதிகள் தோன்ற வேண்டும். அப்படியானால், பெண்களை முகமூடியிட்டு அடக்கி வைத்திருப்பது நிறுத்தப்பட வேண்டும்.
-[பெரியார், 29.11.1947]
அரபியா நாடுகளிலே பெண்கள் அதிகமாக குடும்ப உறுப்பினர்களால் வன்புணர்ச்சிக்கு(incest) உட்படுத்தப்படுகின்றனர். இது ஏன்?!
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.