."ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Monday, 19 October 2009

சீலனின் மரபை வரித்துப் போரிட்ட தளபதிகள்

இறுதி நாளில் – உயிர் தப்பிய தளபதி

“”குருதிச்சுவடுகளில்பாதம் பதித்தபடி” என அக்கடிதத்திற்குத் தலைப்பிடப்பட்டிருந்தது. கடிதத்தின் நிறைவு வரிகளை மீண்டும் நினைவுபடுத்துதல்அர்த்தமுடைத்தது.


”கொண்ட இலட்சியம்

குன்றிடாதெங்களின்

கொள்கை வீரரின் காலடி மண்ணிலே

நின்று கொண்டொரு

போர்க்கொடி தூக்குவோம்

நிச்சயம் தமிழீழம் காணுவோம்”


இதோமே-17 கடைசி நாள் கடந்து மேலும் ஒரு நாள் களத்திலே நின்று உண்மையான தோர்புறநானூற்று வீரனின் கடிதப் பதிவு காலம் கடந்த கண்ணீர் வரலாறாய் இங்குவிரிகிறது:

எமது தாயகநிலத்தை அழித்து, பின் அபகரிக்க உலக நாடுகளின் உதவியோடு சிங்களப்பேரின வாதம் மேற்கொண்ட “இரத்தக் குளியல்’ நடவடிக்கையின் (Operation BloodBath) இறுதி நாட்கள் எம்மால் நினைத்துப் பார்க்க முடியாதவை.

அழுவதற்கும்அவகாசமின்றி அந்தரித்த மக்கள் திரள். அருகில், கண்முன்னே வெடித்துச்சிதறும் ஷெல் களால் துடித்துச் சாகும் உயிர்களின் கடைசிக் கதறல்கள்.நடந்து விட்டதை அறியும் ஒருகண அவகாசம் கூட இல் லாமல் பிணங்களாய்விழுந்தவரின் உருக் குலைந்த உடல்கள். கை, கால்கள் துண்டிக்கப்பட்டு உதவிகேட்கும் அவலக் குரல்கள். பங்கருக்குள் பதுங்கியபடியே பட்டினியில் மயங்கிஉயிர்பிரியப் போனவரின் அழுகிய உடல்களது வாடை. அகப்பட்டதை எடுத்துக் கொண்டுஉயிர்காக்க அங்குமிங்கும் ஓடிய லட்சக்கணக்கான மக்கள் திரளுக்குள்மிதிபட்டு இறந்த பிஞ்சுக் குழந்தைகள், கை கொடுக்க எவருமின்றி ஆங்காங்கேமல்லாக் காய் கிடந்த முதியோர்கள். ஆம், உலகின் மன சாட்சிக் கதவுகள் மூடிக்கிடக்க முள்ளிவாய்க் காலில் இனஅழித்தல் கோரத்தாண்டவம் அரங்கேறியது.


இப்பேரழிவிற்கும்நடுவில் “கடைசிவரை களமாடியே வீரமரணம் அடைவோம்’ என உறுமும்துப்பாக்கிகளுடன் எமது புலிவீரர் அணிகள். மே 12 முதல் சீலனின் மரபை எம்வீரர்கள் சுவீகரித்தனர். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முதல்தாக்குதல் தளபதியாய் இருந்த சீலன் அண்ணை சண்டைக்களத்தில் விழுப்புண்அடைந்தபோது, தன்னைச் சுட்டுவிட்டு ஆயுதத்தை எடுத்துச் சென்று தொடர்ந்துபோரிடு என அருண் என்ற சக போராளிக்கு உத்தரவிட்டார். அந்த மரபையே நாங்கள்சீலன் அண்ணை மரபு என்கிறோம். அவ்வாறே கடைசி நாட்களில் நாங்கள் களமாடினோம்.

விமானகுண்டுவீச்சு, பல்குழல் எறிகணை வீச்சு, டாங்குகளின் ராட்சத குண்டு வீச்சுயாவற்றையும் நேரடியாக எதிர்கொண்டபடி கடற் புலித் தளபதி சூசையோடு தளபதியர்கள் பானு, விடுதலை, புலவர், சிறீராம் அணிகள் இறுதிவரை போராடிமடியும் திட சங்கற்பம் பூண்டவர்களாய் அணிகளை வழிநடத்தினர்.

தேசியத்தலைவருடன் தளபதியர்கள் பொட்டம்மான், ஜெயம், குமரன் மற்றும் ரட்ணம்மாஸ்டரின் கரும்புலி அணி கள் களத்தில் ஆவேசம் எடுத்து ஆடின. மே 15 அன்றுஊடறுத்துத் தாக்குதல் நடத்தி காயமுற்றிருந்த சொர்ணம் அண்ணை தனது உடலைவெடிகுண்டு வைத்துத் தகர்க் கும்படி எமக்கு கட்டளையிட்டு எம் கண்முன்னாலேயே “”கடைசிவரை போராடுங்கோ. புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”என்று கூறியபடி தன் கழுத்தில் கிடந்த இரு சய னைட் குப்பிகளையும் கடித்துகண்கள் சொருக வீரமரணம் தழுவினார். சொர்ணம் அண்ணை கேட்டுக்கொண்டபடி, அவரின்திருவுடல் எதிரியின் கையில் கிடைத்து விடக்கூடா தென்ற அவரின் விருப்பத்தைநிறைவேற்ற அவரது உடலை குண்டு வைத்துத் தகர்த்துவிட்டு சூசை அண்ணையிடம்சென்றபோது ஐ.நா.பொதுச் செயலரின் தனிச்செயலர் நம்பியார் பேச்சுவார்த்தை நடத்த வரும்படி அரசியற்பிரிவு பொறுப்பாளர் நடேசண்ணையையும், புலித்தேவனையும் அறி வுறுத்தியதின்படி இருவரையும் முல்லைத்தீவு வட்டுவாகலுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறினார். வெள்ளைக் கொடியேந்திப் போனவர்களின்தொடர்பு வட்டுவாகல் சென்றபின் அறுந்தது.

நடேசன்,புலித்தேவன் அண்ணையர்களுக்குக் கிடைத்த துரோக மரணம் உலகம் நிச்சயம் எங்களைகாக்க வராது என்ற செய்தியை எமக்கு உறுதியாக்கியது. இந்நிலை யில் தலைவரைக்காப்பது ஒன்றே களத்தில் நின்ற எமது கடமையாகியது. களமுனையில் அவசரமாற்றங்கள் செய்யப் பட்டன. எமது ஆட்லறி பீரங்கிகள் யாவும் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டன. வாகனங்கள் எரிக்கப்பட்டன. கடற்புலி அணிகள் மட்டும்இடைமறிப்புத் தாக்குதல்களில் உக்கிரம் காட்டி நின்றன.

எஞ்சிநின்ற நூற்றுக்கும் குறைவான கடற்புலிகளை காயங்களோடு தளபதி விடுதலை நெறிசெய்தார். மே-16 இரவு நந்திக் கடற்கரை வழி முன்னேறிய ராணுவத்தினருக் கும்தளபதி புலவர் அணியினருக்கும் இடையே அதிகாலை வரை சமர் தொடர்ந்தது. ராணுவத்தின் 53-வது டிவிஷனது முழுப்பலத்துடனான முன்னெடுப்பை புலவரின் சிறு அணிமுறியடித்து பலநூறு ராணுவத்தினரை கொன்றழித்தது.

அதேநேரத்தில்இரட்டை வாய்க்கால் பகுதியிலிருந்து முன்னேறி வந்த 58-வது டிவிஷன்ராணுவத்தினருக்கு தளபதி விடுதலை யின் அணி மரண அடி கொடுத்தது. ஆத்திரம்கொண்ட சிங்கள ராணுவம் தன் வெறிக்கூத்தை அப்பாவி மக்கள் மீதுதிருப்பியபோதுதான் அலறியடித்த மக்கள் ராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்படுத்துப் படுத்து நகர்ந்தனர். சூசை அண்ணைக்குத் தொடர்பெடுத்து இதனைக்கூறினேன். தொடர்ந்து தலைவரின் நிலை என்ன என்று கேட்டபோது “”அதைப்பற்றிகவலைப்படாதீர்கள்” என்றார்.

மக்கள்இப்போது முழுமையாக வெளியேறத் தொடங்கியிருந்தனர். அதைப் பயன்படுத்திராணுவம் எமது நிலைகளை நோக்கி முன்னேறியது. எம்மால் எதிர்தாக்குதல் செய்யமுடியாத நிலை. எம்மை ராணுவம் கடந்து முன்னேறிவிட்டபோது சூசையண்ணைக்குமீண்டும் தொடர்பெடுத்து அதனைச் சொன் னேன். அதற்கு சூசையண்ணை, “”நான்ஜக்கத் அடிக்கப் போறேன், நீங்கள் கடைசிவரை சண்டையிடுங்கோ” என்றார்.”ஜக்கத்’ என்றால் வெடிமருந்து அங்கி அணிந்து எம்மையே தற்கொடையாக்கும்மரபு. அத்தோடு சூசையண்ணையோடான தொடர்பு அறுந்தது.

சூசையண்ணைஇருந்த புளியமரத்தடி எமது நிலையிலிருந்து 300 மீட்டர் தூரம்தான். அவர்இருந்த மண் அணையாலான காப்பரணுக்குள்தான் வெடிபொருட்களும், ஆயுதங்களும்இருந்தன. அப்பக்கம் பெரும் வெடிச்சத்தம் கேட்டது. கருந்திரளான புகை வான்நோக்கி எழுந்தது. கடலில் சரித்திரம் படைத்த எங் கள் சூசையண்ணை கடற்புலிகள்பிறந்து வளர்ந்த அதே முல்லைத்தீவு கரையில் காவியமானார்.

நெஞ்சுகனத்த வேதனையோடு மீண்டும் களமிறங்கினோம். காயமுற்றுத் துடித்தபடிஉறவினரால் கைவிடப்பட்ட மக்களின் கதறல்கள், முனகல்கள், சிதறிய பிணங்களின்அகோரங்கள், முண்டங்கள், தலைகள், சிதறிய உடைமைகள், எரியும் வாகனங்கள்இவற்றினூடே தவண்டு தவண்டு எதிரியின் அணிகளுக்குள் ஊடுருவி னோம். மே 17மாலை 7 மணி அளவில் ஐவர் ஐவராகப் பிரிந்து களமாட முடிவு செய்தோம்.எமக்கிடையே எஞ்சியிருந்த எல்லா தொடர்பு களையும் துண்டித்தோம்.இறந்துகிடந்த ராணுவத்தினரின் சீருடைகளை அகற்றி நாங்கள் அணிந்தோம்.அவர்களின் நிலைகள், காவலரண் களில் நின்றபடி இரவு முழுவதும் சமராடினோம்.எனது ஐவர் அணி மட்டுமே அன்றிரவு 50-க்கும் மேலான ராணுவத்தினரை அழித்தது.

குடிக்கத்தண்ணீரில்லை. மூன்று நாளுக்கு முன் கிடைத்த ஒரேயொரு மாவு உருண்டையைசாப்பிட்டுவிட்டு இரத்தக்கறை படிந்த உடலும் உடையுமாய், இரண்டு மாதமாய்உறங்காத கண்கள், குண்டுக் கீறல்களில் வழியும் ரத்தம், வலி எதையும்பொருட்படுத்தாது மோதிக் கொண்டிருந்தோம்.

உண்டியலடிச்சந்தியைக் கடந்து பிரதான வீதியில் வந்துகொண்டிருந்த கவச வாகனத்திற்குஆர்.பி.ஜி. அடித்து எரித்தோம். அதைத்தொடர்ந்து அப்பகுதியில் கடும் சண்டைஎழவே உள்ளுக்குள் புகுந்து 53-வது டிவிஷ னுக்கும் 58-வது டிவிஷ னுக்கும்இடையே சண்டையை மூட்டிவிட்டோம். நூற்றுக்கணக்கான ராணு வத்தினர்ஒருவரையொருவர் சுட்டுக் கொன்று கொண்டி ருந்தபோது நாங்கள் நந்திக்கடல்பக்கமாய் நகர்ந்தோம்.

எமதுஐவர் அணியில் இருவர் வீரமரணம் அடைய எஞ்சியிருந்த மூவரும் இரட்டைவாய்க்கால்பகுதிக்கு நகர்ந்து அங்கும் இரு ராணுவ அணிகளுக்கிடையே சண்டையை மூட்டினோம்.எமது அணி மட்டுமே அங்கு 200-க்கும் மேலான ராணுவத்தினரை சுட்டுக்கொன்றது.

மே18 நண்பகல் 12 மணியளவில் அதே ராணுவச் சீருடையுடன் ஒற்றைப்பனையடி நோக்கிநகர்ந்தோம். ராணுவ கவச வாகனம் ஒன்று வந்துகொண்டிருந்தது. எதிர் திசையில்ஆர்.பி.ஜி. உந்துணையோடு வேறொரு ராணுவ அணி வந்தது. நாங்கள் கவச வாகன அணிநோக்கி தாக்குதல் தொடுக்க அவர்களோ எதிர்திசை ஆர்.பி.ஜி. அணியோடு சண்டைதொடங்கினார்கள். நாங்கள் மீண்டும் நந்திக்கடல் பக்கமாய் முல்லை வீதியைகடக்க முற்பட்டோம். அங்கே காவலரணில் நின்ற மூன்று ராணுவத்தினர்சிங்களத்தில் எங்களைக் கூப்பிட சிக்கல் வெருமென்பதால் மூவரையும் சுட்டோம்.அங்கு சண்டை வெடித்தது. அருகிலுள்ள பனங்கூடலுக்குள் நுழைய முயன்றபோதுஎங்கிருந்தோ வந்த ஆர்.பி.ஜி. எறிகணை என் காலை பதம் பார்த்தது.தூக்கியெறியப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்தேன். எழ முயன்றேன்.முடியவில்லை. கண்கள் சுழன்றன. சாவதாய் நினைத்தேன். கண்கள் மூடின. ஆனால்மீண்டும் கண்விழித்தபோது நம்ப முடியவில் லை. உயிருடன் இருந்தேன். முள்ளிவாய்க்காலில் அல்ல. ஸ்ரீலங்காவின் இராணுவ மருத்துவமனையில். அங்கிருந்து எப்படித் தப்பினேன் என்பது இன்னொரு நெடிய கதை. உயிரோடிருந்தால் மீண்டும் உங்களுக்கு எழுதுவேன்.

ஆனால்ஒன்று : சுமார் 38000 மாவீரர்களின் தியாகங்களோடு நான்காம் ஈழப்போர்முற்றுப் பெற்றிருந்தாலும் அவர்களின் குருதிச் சுவடுகளில் பாதம் பதித்தபடிஐந்தாம் ஈழப்போர் தொடங்கும் -என்றேனும் ஒருநாள் தமிழீழம் வெல்லும்.புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்!

(நினைவுகள் சுழலும்)


courtesy:
tamilspy.com

1 comment:

  1. கஸ்பார் ஒரு கேவலமான பிறவி. எம் மக்களின் சாவை வைத்து கூத்தாடுகிறார். சூசையின் உடல் என்று சிறிலங்கா இராணுவம் ஒரு உடலை காட்டியது. இவர் குண்டு வைத்துகொண்டார் என்று சொல்கிறார். என்னவோ.

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் HolykuralKural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis