ஆக்கம்:
சூர்யா
இன்று பலரும் தம்மைத் தாமே அல்லது தாம் மட்டுமே தமிழின் உரித்திர்க்குரியவர்களாகவும் மற்றவர்களைத் தமிழர்களற்றவர்களாகும் வசைபாடுதலன்றித் தமிழுக்காகவும், மொழியின் வளர்ச்சிக்காகவும் வேறேதும் செய்வது கிடையாது. இதிலும் வேதனை என்னவென்றால் தம்மைத்தாமே சமூகநோய்களான சாதியம், ஆணாதிக்கம், மூடப்பழக்கம், மூடநம்பிக்கைகள் போன்றவற்றுக்குத் தீர்வு தரக்கூடிய பகுத்தறிவாளர்களாகவும் இவர்கள் இனம் காண்கின்றனர். அது வரவேற்கப்படக் கூடியதே. ஆனால், இவர்கள் எதையும் உண்மையாகவும் நீதியாகவும் பகுத்தறிய முன் வருவதில்லை.பகட்டுக்காகவும் புகழுக்காகவும் போலிப் பகுத்தறிவாளர்களாக மட்டுமே உள்ளனர் என்பதே உண்மை. தமிழச்சமூகத்தைப் பிரித்து தமது நோக்கங்களை நிறைவேற்றுகின்றனர். வேறுசிலரோ தோல் கறுப்பில்லாவிடில் அவன் தமிழனோ அல்லது திராவிடனோ அல்ல என்றும் வாதிக்கிறார்கள். இவ்வாறு பார்க்கும் போது இன்று திராவிட, தமிழ்த் தலைவர்களான பிரபாகரன், நெடுமாறன், கருணாநிதி, வீரமணி போன்றோரின் தமிழ் அடையாளம் கேள்விக்குரியதாகி விடும். இவர்கள் தோல் நிச்சயமாக முழுக்கறுப்பல்ல. அப்ப இவர்கள் "பார்ப்பன”க்கலவையா?! இல்லை "ஆரிய"க்கலவையா? இதை யாராவது பகுத்தறிவார்களா?!
இப்போதுள்ள போலிப் பகுத்தறிவு வெட்கித்தலை குனிய வேண்டிவரும். அப்படியானால், தமிழ்பேசும் சமூகத்தின் பாதிப்பேருக்கு மேல் தமிழரல்ல என்ற முடிவே உண்மையான பகுத்தறிவு முடிவாக இருக்கும். இன்று சாதியொழிப்பு, சமத்துவம், பெண்ணுரிமை போன்ற போற்றுதற்குரிய சுலோகங்களை முன் நிறுத்தி குரல்கொடுக்கும் பகுத்தறிவாளர்கள் ஒரு பகுதித்தமிழரைப் “பார்ப்பனன்”, “தெலுங்கன்”, “கன்னடன்” போன்ற வகைப்படுத்தலை விட்டு, தமிழுக்காகப் பாடுபடும் அனைவைரையும் அணைத்து ஒட்டுமொத்தத் தமிழ்ச்சமூகத்தினதும் முன்னேற்றத்துக்காகப் பகுத்தறிவைப் பயன்படுத்த முன் வரவேண்டும். நெறிகெட்ட சாதிமுறையை உண்மையான பகுத்தறிவின் மூலம் இல்லாதொழிப்போம்.
"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.
ஆரியன் யார்? பிராமணன் யார்?
http://cyber-mvk.blogspot.com/2010/05/blog-post_10.html
கேளடா மனிடவா எம்மில் கீழோர் மேலோர் இல்லை...
ஆரியன் யார்? பிராமணன் யார்?
http://cyber-mvk.blogspot.com/2010/05/blog-post_10.html
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.