.



"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..
Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Monday, 19 April 2010

கருணாநிதி: உலகமகாப் பொய்யன்

நீ தமிழனாடா?!


பிரபாகரன் தாயார் தமிழகத்தில் மீண்டும் சிகிச்சை பெற விரும்பினால் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கடந்த 16ம் தேதி இரவு 10.45 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள். பக்கவாத நோய்க்கு சிகிச்சை எடுக்க கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு வந்த அவரை விமானத்தில் இருந்து இறங்கவிடாமல் தடுத்திருக்கிறார்கள் குடியுரிமை அதிகாரிகள். இந்தியாவுக்குள் நுழைவதற்கான உரிமை உங்களிடம் இல்லை என பார்வதி அம்மாளையும் அவருக்கு துணையாக வந்த விஜயலட்சுமி என்ற பெண்ணையும் தடுத்திருக்கிறார்கள் அதிகாரிகள்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்திற்கு பிறகு, தமிழகத்திற்கு சிகிச்சை பெற வந்த பிரபாபரனின் தாயார் பார்வதி அம்மாள் மலேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதன்மீது பேசிய பாமக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சி உறுப்பினர்கள் பார்வதி அம்மாளுக்கு தமிழகத்தில் சிகிச்சை அளிக்க மத்திய அரசிடம் கூறி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் கருணாநிதி,

பார்வதி அம்மாள் சிகிச்சை பெற வருவது குறித்து தமிழக அரசுக்கு எந்தவித தகவலும் இல்லை. விமான நிலையத்தில் ரகசியமாக அவருக்கு ஒரு சிலர் மட்டுமே வரவேற்பு அளிக்க சென்ற நிலை ஏற்பட்டதை பார்க்கும்போது, அந்தோ தமிழகமே என்று நினைக்கத் தோன்றுகிறது.

பார்வதி அம்மாள் வருவது குறித்து மத்திய அரசிடம் மட்டுமே செய்தி தொடர்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நள்ளிரவு 12 மணிக்கு மேல் எனக்கு தகவல் கிடைத்து விமான நிலைய அதிகாரிகளை விசாரித்தபோது, அவர் மலேசியாவுக்கு திருப்பு அனுப்பட்டது தெரிய வந்தது.

மீண்டும் பார்வதி அம்மாள் தமிழகத்தில் மீண்டும் சிகிச்சை பெற அவரது சார்பில் அறிவிப்பு வெளியானால், இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வலியுறுத்த தயார். தேவைப்பட்டால் மத்திய அரசின் விளக்கத்தைப் பெற்று அவையில் தெரிவிக்கவும் தயார் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

(செய்தித் தாள்கள் மூலமாக மறு நாள்தான் தனக்கு முழுவிவரம் கிடைத்ததாகச் சொன்ன அவர், வேறொரு இடத்தில் இரவு 12 மணிக்கு தகவல் கிடைத்ததாகவும், உடனே விமான நிலைய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது அதற்குள் பார்வதியம்மாள் திருப்பி அனுப்பப்பட்டு விட்டதாகத் தனக்கு சொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார். )

பிரபாகரன் தாயார் விவகாரம்: கலைஞரின் முழுமையான சட்டமன்ற பேச்சு

பிரபாகரனின் தயார் பார்வதி அம்மாள் தமிழகத்தில் மீண்டும் சிகிச்சை பெற விரும்பினால், அதைப்பற்றி பரிசீலித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுத தயார் என முதல்வர் கருணாநிதி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். மேலும் பார்வதி அம்மாள் திருப்ப அனுப்பப்பட்டதற்கு முந்தைய அதிமுக அரசு மத்திய அரசுக்கு எழுதிய கடிதமே காரணம் என்றும் முதல்வர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்திற்கு பிறகு, தமிழகத்திற்கு சிகிச்சை பெற வந்த பிரபாபரனின் தாயார் பார்வதி அம்மாள் மலேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதன்மீது பேசிய பாமக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சி உறுப்பினர்கள் பார்வதி அம்மாளுக்கு தமிழகத்தில் சிகிச்சை அளிக்க மத்திய அரசிடம் கூறி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் கருணாநிதி,

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இதுபற்றி என்னுடைய கருத்துக்களைக் கூறுவதற்கு முன்பு, கடந்த கால வரலாற்றில் சில துளிகளையாவது இந்த அவைக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

இந்திய அரசினுடைய உத்தரவு முதலில் திருமதி பார்வதி அம்மாள் சிகிச்சைக்காக விசா பெறலாம் என்று அமைந்து, அந்த விசாவினைப் பெற்று அவர்கள் சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது, மத்திய அரசினுடைய அதிகாரிகளே சிலர், விமான நிலையத்தில் விமானத்திற்குள்ளே நுழைந்து “தவறுதலாக உங்களுக்கு விசா வழங்கப்பட்டிருக்கிறது. ஆகவே, நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டும்'' என்று கூறி எங்கே மலேசியாவிலிருந்து வந்த அவர்களை, மலேசியாவிற்கே திரும்ப அனுப்பியிருக்கிறார்கள்.

இது பற்றிய முழுத் தகவல் மறுநாள் காலையிலேதான் விவரமாகப் பத்திரிகைகளைப் படித்து நான் தெரிந்து கொள்ள முடிந்தது. இதேபோல ஒரு சம்பவம் 23 8 1985 அன்று நம்முடைய தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டுமென்ற ஒரு உத்தரவு தந்தை செல்வா அவர்களுடைய மகன் சந்திரஹாசன், பாலசிங்கம், சத்தியேந்திரா ஆகியோரை நாட்டை விட்டு வெளியேற்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது. அந்த ஆணையும் அன்றிருந்த மாநில அரசின் வேண்டுகோளின்படிதான் இடப்பட்டது என்று கூறப்பட்டது. அதில் உண்மை எதுவோ எனக்குத் தெரியாது. ஆனால், ஆணை பிறப்பிக்கப்பட்டு அவர்கள் விமானம் ஏறுகிற நிலையில், எங்களுக்குச் செய்தி கிடைத்து உடனடியாக “டெசோ'' அமைப்பின் சார்பாக அப்பொழுதுதான் டெசோ தொடங்கப்பட்டது. நான், வைகோ, நெடுமாறன், தமிழர் தலைவர் வீரமணி, பேராசிரியர் ஆகியோரெல்லாம் இருந்த அமைப்பு டெசோ. 23 ஆம் தேதி முடிவெடுத்து உத்தரவிடப்படுகிறது. அந்த "டெசோ" அமைப்பின் சார்பாக 25 8 1985 அன்று சென்னையிலே ஒரு கண்டனப் பேரணி நடத்தினோம். தொடர்ந்து 30 8 1985 அன்று ரெயில் நிறுத்தப் போராட்டம் என்று அறிவித்தோம். அதனையொட்டி 5000 பேர் அன்றைக்கிருந்த ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்டார்கள். உடனே மத்திய அரசு சந்திரஹாசன் மீதான உத்தரவைத் திரும்பப் பெற்றது. அதற்குப் பிறகு தொடர்ந்து 7 10 1985 அன்று பாலசிங்கம் மீதான நாடு கடத்தும் உத்தரவையும் திரும்பப் பெற்றது.

அந்தக் காலத்திற்கும், “டெசோ'' அமைப்பின் சார்பாக எல்லோரும் சேர்ந்து போராடியதற்கும் தனித்து இப்பொழுது மற்றவர்களுக்கெல்லாம் பெயர் வந்து விடக் கூடாது என்பதற்காக, இரகசியமாக இந்த விமான நிலைய வரவேற்பை அளித்ததற்கும் உள்ள வேறுபாட்டை நீங்கள் உணர்ந்தால் “அந்தோ தமிழர்களே!'' என்று நம்மை அறியாமல் நாம் சொல்லத்தான் நேரிடுகிறது என்பதை முதலிலே குறிப்பிட விரும்புகிறேன்.

திருமதி பார்வதி அம்மாள் தமிழகத்திற்கு வருவது பற்றி அவர்களிட மிருந்தோ அவர்களுக்கு துணை புரிய விரும்புவர்களிடமிருந்தோ தமிழக அரசுக்கு எந்தவிதமான கடிதமோ தகவலோ நேரடியாக வரவே இல்லை. மத்திய அரசுக்கும் பார்வதி அம்மாளுக்கும் இடையே தான் இந்தப் பயணம் பற்றிய செய்தி தொடர்பு இருந்திருக்கிறதே தவிர தமிழக அரசுக்கு இதிலே எந்தவிதமான சம்மந்தமும் கிடையாது. மறுநாள் காலையிலே வந்த “இந்து'' பத்திரிகையிலே கூட “ஞயசஎயவாண், அடிவாநச டிக வாந ளடயண்ய் டுகூகூநு டநயனநச ஞசயயெமயசயய், டயனேநன யவ வாந ஊட்நய்யேண் ஹசையீடிசவ லெ ய ஆயடயலளயைய் ஹசைடண்நேள கடண்பாவ. ழடிறநஎநச, ஐஅஅபைசயவண்டிய் டீககண்உயைடள கடிடடடிறண்பே ண்ளேவசரஉவண்டிளே கசடிஅ வாந ஊநவேசந, னநயீடிசவநன ட்நச வடி ஆயடயலளயை லெ வாந ளயஅந கடண்பாவ, ண்அஅபைசயவண்டிய் ளடிரசஉநள ளயனை.”

என்று தான் தெளிவாகச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமேயானால், 5 5 2003 அன்று தமிழக அரசின் சார்பில் மத்திய உள்துறைக்கு ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் பத்தி 2 வருமாறு :

“Sri Lankan Tamils Velu Pillai and Parvathi Ammal may return to India. Their re-entry into India may not be desirable in view of their association with the LTTE Leader and Tamilar Desiya Iyakkam, banned organisations. Hence, the personal particulars of the above Sri Lankan Tamils are sent herewith to place their names under Black List/Prior Approval Category List, to prevent their re-entry into India through legal/illegal means.”

இவ்வாறு கடிதம் எழுதி, அதன் காரணமாக தடை விதிக்க ஏற்பாடு செய்தவர்கள் எங்கே அந்த உண்மை இங்கே வெளியிடப்பட்டு விடும் என்ற காரணத்தாலோ என்னவோ மிக முக்கியமான இந்தப் பிரச்சினையில் எல்லா கட்சிக்காரர்களும் குரலெழுப்புகின்ற இந்தப் பிரச்சினையில் அவர்கள் மாத்திரம் வராமல் இருந்து விட்டார்கள் என்பதைப் பார்த்தாலே நீங்கள் புரிந்து கொள்ளலாம். அவர்கள் தான் இன்றைக்கு மாபெரும் கூட்டணியிலே இருக்கிறார்கள் – அது தமிழர் கூட்டணி என்றும் சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட நண்பர்கள் இந்தப் பிரச்சினையில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால், இது முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசாங்கத்திற்குத் தான் உரிய பிரச்சினை என்பதைப் போல ஏடுகளில் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். நிச்சயமாகச் சொல்கிறேன். இரவு 12 மணிக்கு விமான நிலையத்திலே இப்படிப்பட்ட ஒரு தகராறு நடைபெறுவதாக எனக்குச் செய்தி கிடைக்கிறது. நான் விமான நிலையத்திற்குத் தொடர்பு கொள்கிறேன். அந்த அம்மையார் திரும்ப அனுப்பப்பட்டுவிட்டார்கள் என்று அடுத்த செய்தி எனக்குக் கிடைக்கிறது.

ஆனால் இந்தச் செய்தியை முறையாக உரிய வகையில் எனக்குச் சொல்லப்படவில்லை. அரசில் யாருக்கும் சொல்லப்படவில்லை. அதன் காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு விட்டார்கள். அப்படித் திருப்பி அனுப்பப்பட்டவர்கள் மலேசியாவிற்கே, அதாவது கோலாலம்பூருக்கே திரும்பச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் அங்கே வைத்திய வசதி பெறுவதாக பத்திரிகைகளிலே செய்தி வந்திருக்கிறது. அவர்கள் இல்லை, நான் மீண்டும் தமிழகத்திற்குத் தான் சென்று வைத்திய வசதி செய்து கொள்ள விரும்புகிறேன் என்று அறிவிப்பார்களானால் நம்முடைய அருமை நண்பர் சுதர்சனம், கோ.க. மணி அவர்கள் சிவபுண்ணியம் ரவிக்குமார் மற்றவர்கள் எல்லாம் குறிப்பிட்டதைப் போல அதைப் பரிசீலனை செய்து மத்திய அரசுக்கு அது பற்றி எழுத மாநில அரசு தயாராக இருக்கிறது என்பதை நான் இங்கே தெரிவித்துக் கொள்ளவிரும்புகிறேன்.

மத்திய அரசின் பதிலைப் பற்றி அது என்ன கூறுகிறது என்பதைப் பற்றி அது பற்றிய விளக்கம் தேவைப்பட்டால் – அந்த நேரத்தில் பதில் வந்த பிறகு அதனை இந்த அவைக்குத் தெரிவிப்பேன் என்று கூறி இந்த அளவில் இந்தப் பிரச்சினையை முடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

*****************************************************************
முகப்புத்தகக் குழுமம்
தமிழினத்துரோகி கருணாநிதி
Join
Facebook group


****************************************************************

கருணாநிதியால் ஜெயலலிதா வாந்தி...

நீ தமிழனாடா?!


முகப்புத்தகக் குழுமம்
தமிழினத்துரோகி கருணாநிதி
Join
Facebook group

**********************************************************************

ஜெயலலிதாவின் இந்த நோட்ஸ்களை வைத்தும் நடவடிக்கை எடுங்கள் மிஸ்டர் பிரைம்மினிஸ்டர்..!

ஆக்கம்: உண்மைத்தமிழன்


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

"வந்தாரை வாழ வைத்த தமிழ்நாடு" இனி தன் பெயரை மாற்றிக் கொள்ள வேண்டியதுதான்.

தமிழ்நாட்டுக்கென்றே இருந்த தனி மரியாதையையும், சிறப்பையும் தனி மனிதர் ஒருவரின் சுயநலத்தால் இழந்து போய் நிற்கிறோம்.

பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் ஏற்கெனவே பல ஆண்டுகள் தமிழகத்தில் திருச்சியில் வசித்தவர். அவருடைய புதல்வர் பிரபாகரன் தனி ஈழத்தின் முதல் தேசியத் தலைவராக தனியாட்சி நடத்திக் கொண்டிருந்தபோதே அந்த அம்மையார் தமிழ்நாட்டில்தான் இருந்தார்.


பிரபாகரன் என்ன தவறு வேண்டுமானாலும் செய்துவிட்டுப் போகட்டும்.. அதைப் பற்றி இப்போது பேச்சில்லை. இந்த 76 வயது அம்மையார் என்ன பாவம் செய்தார்..? தமிழச்சியாக பிறந்தது பாவமா..? அல்லது பிரபாகரனை பெற்றெடுத்ததுதான் பாவமா..?

மூச்சுக்கு மூச்சு தமிழுக்காக உயிரைக் கொடுப்பேன்.. தமிழர்களுக்காகத் தலையைக் கொடுப்பேன் என்று சவுடால்விட்ட முதல்வர் இன்றைக்குச் சட்டசபையில் வாந்தியெடுத்திருக்கிறார்.. அதே தமிழில்தான்.

பார்வதியம்மாள் தமிழகத்திற்கு வந்ததே தனக்குத் தெரியாது என்று.. நாம் தமிழர்கள் அனைவரும் நமது நெஞ்சில் அடித்துக் கொள்ளலாம் இந்த ஒரு வார்த்தையைக் கேட்டுவிட்டும் நாம் இன்னமும் உயிரோடு இருப்பதற்காக.. கிராமப்புறங்களில் சாவு வீட்டில் பெண்கள் தங்களது நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுவார்கள் பாருங்கள்.. அதுபோல்..

ஒரு முதலமைச்சராக இருப்பவருக்கே இது தெரியாது எனில் இவர் எதற்காக முதலமைச்சர் பதவியில் வெட்கமில்லாமல் இருக்கிறார் என்பதை யாரேனும் கேட்டுச் சொன்னால் நன்றாக இருக்கும்.

இவருக்கே தெரியாது என்றால் புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டுக்கு மட்டும் எப்படி தெரிந்ததாம்..? வைகோவும், நெடுமாறனும் முறைப்படி அனுமதிச் சீட்டை வாங்கிக் கையில் வைத்திருந்தும் விமான நிலையலத்திற்குள் அனுமதிக்க மறுத்து ரவுடித்தனம் செய்த காவல்துறையை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தது ஜாங்கிட்தானே..

ஒரு மாநிலத்தில் ஒரு நகர கமிஷனருக்குத் தெரிந்திருக்கும் விஷயம்கூட அந்த மாநிலத்தின் முதலமைச்சருக்குத் தெரியவில்லை என்றால் இதைவிட வெட்கக்கேடு வேறென்ன இருக்க முடியும்..? இப்படியெல்லாம் தமிழர்கள் நினைக்க மாட்டார்களா என்றுகூட யோசிக்காமல் அண்டப்புழுகை வீசியிருக்கிறாரே இந்த 76 வயது முதியவர்.. இவரை என்ன பெயர் வைத்துத்தான் இனிமேல் அழைப்பது. உலக மகா பொய்யன்..

"அவசரப்பட்டு விசா கொடுத்துவிட்டீர்கள்.. ஏன் எங்களிடம் முன்பே கருத்து கேட்கவில்லை. வந்தால் உங்களுக்குத்தான் பிரச்சினை.. பரவாயில்லையா..?" என்று தமிழக அரசின் தரப்பிலிருந்து மத்திய அரசுக்கு கடும் எச்சரிக்கை சென்ற பிறகுதான் மத்திய அரசு திருப்பியனுப்பும் முடிவை நடத்திக் காட்டியிருப்பதாக டெல்லி பத்திரிகையாளர்கள் அனைவரும் சொல்லி வைத்தாற்போல் சொல்கிறார்கள்.

"அந்த அம்மாவை ஆஸ்பத்திரியில் அனுமதித்துவிட்டு தினம்தோறும் அவருடைய உடல்நல அறிக்கையை அறிவித்து அனைத்துக் கட்சிகளும் மீண்டும் இலங்கை பிரச்சினையைக் கையில் எடுப்பார்கள். கோவை உலகத் தமிழ் மாநாட்டு சமயத்தில் இதை வைத்தே ஏதேனும் பிரச்சினை வரும்.. அனுமதிக்காதீர்கள்.." என்ற ஸ்ட்ராங்கான அட்வைஸ் கோபாலபுரத்தில் இருந்துதான் சென்றிருக்கிறது.

இரண்டு அரசுகளுக்குமே இப்போது இலங்கை பிரச்சினை வேப்பங்காய் என்பதால் தூக்கி சாக்கடையில் வீசிவிட்டார்கள் அந்த மூதாட்டியை.

வழக்கம்போல கட்சிகளுக்குள் இதை வைத்து சடுகுடுவும் ஆரம்பமாகிவிட்டது.

வைகோவும், நெடுமாறனும் பிரபாகரனின் அண்ணன் மனோகரனின் மூலமாக பார்வதியம்மாவுக்கு சிகிச்சையளிக்க சென்னைக்கு அழைத்து வரும் வேலைகளை ரகசியமாக செய்து முடித்ததாகச் செய்தி. இதில் கூட்டாளிகளாகத் தங்களை அழைக்காததால் ராமதாஸும், தொல்.திருமாவும் கோபத்தில் இருக்கிறார்கள்.

அதிலும் மேல்சபை வரப் போகிறது. சும்மா இருக்கும் முந்திரிக்காடு தளபதிகளை அதில் தள்ளிவிட அரசுத் தரப்பின் உதவி வேண்டும். இப்போதுதான் ஐயா கொஞ்சம் இறங்கி வந்திருக்கிறார். கூடவே மாநிலங்களவை எம்.பி. பதவியும் தொங்கலில் நிற்கிறது.. போயஸ்கார்டன் பக்கமும் போக முடியாது.. அம்மா பந்த் விஷயத்தை பகிரக்கூட நம்மை அழைக்கவில்லை. எனவே ஐயாவைப் பகைத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டி மத்திய அரசையும் கண்டிக்கவில்லை. மாநில அரசையும் கண்டிக்கவில்லை என்று ரெண்டுங்கெட்டாத்தனமாக ஒரு அறிக்கையை விட்டிருக்கிறார் ராமதாஸ். கூடவே ஒரு நம்பிக்கையும் வேறு.. கருணாநிதிக்கு இது தெரியாது என்றே இவர் நம்புகிறாராம்.. இவரை நம்புகிறவர்களை நாம் நம்பக்கூடாது என்பது தெளிவாகத் தெரிகிறது.

தொல்.திருமாவோ ஒரு மாதத்திற்கு முன்பாகவே தன்னைத் தொடர்பு கொண்டு சென்னையில் வைத்து பார்வதியம்மாளுக்கு சிகிச்சையளிக்க வேண்டும் என்று பலரும் மலேஷியாவில் இருந்து கேட்டுக் கொண்டதாகச் சொல்கிறார். ஆனால் பதிலுக்கு இவர் என்ன நடவடிக்கை எடுத்தார் என்று தெரியவில்லை.

ஆனால் இப்போது பார்வதி அம்மாளை திருப்பியனுப்பியது யாராக இருந்தாலும் அதனை நியாயப்படுத்த முடியாது என்று சொல்லி ஜாம் தடவியிருக்கிறார். அம்பேத்கரின் அரசியலில் இருந்து பெரியாரின் அரசியல்வரைக்கும் கிண்டி கிழங்கெடுக்கும் இந்த சிறுத்தைக்கு பார்வதியம்மாள் திருப்பியனுப்பட்ட பின்னணியில் இருந்தது யாரென்று தெரியாதாம்.. நாமும் அதனை நம்ப வேண்டுமாம்..

எப்போதும் நாட்டு நடப்புகள் என்றால் உடனுக்குடன் அறிக்கை விடும் முதல்வர் ஐயா, இரண்டு நாட்களாக அமைதி காத்துவிட்டார். வழக்கமாக வெளிவரும் தானே கேள்வி. தானே பதில்கூட வராததால் பத்திரிகையாளர்கள் குழப்பத்தில் நிற்க,, லேசுபாசாக ஒரு அறிக்கையை பத்திரிகையாளர்களிடம் பரவவிட்டு மேலோட்டம் பார்த்தது ஆட்சி நிர்வாகம். அதனை ஸ்மெல் செய்த மீடியா அதில் இருந்த மேட்டரை படித்து சிரிப்பாய் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் இப்போதுவரைக்கும்.

முன்பு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோதுதான் பார்வதியம்மாள் முறைப்படி விசா பெற்று இலங்கைக்குப் பயணமானார். அவரை அனுப்பிய கையோடு அவரை மீண்டும் தமிழகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது என்று குறிப்பாணையை மத்திய அரசுக்கு அனுப்பினாராம் ஜெயலலிதா.

2002-ம் ஆண்டு எழுதியனுப்பப்பட்ட அந்தக் குறிப்பாணையை இப்போது கையில் எடுத்துத் தூசி தட்டிப் படித்துப் பார்த்து, கண் கலங்கி, அறிவு பெருகி, ஆற்றல் பெற்று, இதன் பிறகுதான் பார்வதி அம்மாளை திருப்பியனுப்ப மத்திய அரசு முடிவெடுத்ததாம்..

சபாஷ்.. 2002-ல் புரட்சித் தலைவி எழுதியனுப்பிய ஒரு 'நோட்'..(இது கோரிக்கைதான்.. வேண்டுதல்தான்.. சட்டப்படியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய செய்தியல்ல) இதை வைத்து தற்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும் அந்தக் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமென்றால்..

"தினகரன் பத்திரிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு சாதகமாக நடந்து கொண்டு மகன் மு.க.அழகிரியை காப்பாற்றிய தமிழக அரசை டிஸ்மிஸ் செய்..

மத்திய அமைச்சர் ராஜாவின் பல ஆயிரம் கோடி ரூபாய் ஸ்பெக்டரம் ஊழலுக்கு உடந்தையாய் இருக்கும் தமிழக அரசை டிஸ்மிஸ் செய்..

இடைத்தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகளை வாங்கி ஜனநாயகத்தைக் குழி தோண்டி புதைத்திருக்கும் கருணாநிதி அரசை டிஸ்மிஸ் செய்..

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் பொய்யான தகவலையளித்த தமிழக அரசை டிஸ்மிஸ் செய்..

தமிழகத்தில் மின்வெட்டுப் பிரச்சினை தீர்க்க வக்கில்லாத தமிழக அரசை டிஸ்மிஸ் செய்.."

இவைகளெல்லாம் தமிழகத்தின் தற்போதைய மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவி, முன்னாள் முதலமைச்சர், 2002-ல் 'நோட்' எழுதிக் கொடுத்து, இப்போது உங்களுக்குக் கை கொடுத்திருக்கும் 'கோப்பெருந்தேவி' இந்த நான்காண்டு காலத்தில் எழுப்பியிருக்கும் கோஷங்கள்தான்..

அந்த 'நோட்'டை வைத்து எப்படி நடவடிக்கை எடுத்தீர்களோ.. அதேபோல் இப்போதும் 'போயஸ் ஆத்தா' இந்த மூன்றரை ஆண்டுகளாக எழுப்பிக் கொண்டிருக்கும் இந்த 'நோட்ஸ்'களை வைத்தும் சூடு, சொரணை இருந்தால் நடவடிக்கை எடுங்கள் மிஸ்டர் மன்னமோகனசிங்..!

நன்றி:
http://truetamilans.blogspot.com/2010/04/blog-post_19.html

Thursday, 7 January 2010

தமிழர்கள் ஏன் பொன்சேகாவை ஆதரிக்க வேண்டும்?!

"எதிரியைவிடத் துரோகிகளே ஆபத்தானவர்கள்" - தமிழீழத் தேசியத் தலைவர்.

மகிந்தனோ, பொன்சாகாவோ தமிழனுக்கு தானாக ஏதும் செய்யப்போவதில்லை. ஏன் எந்தச் சிங்களவனும் செய்யப்போவதல்லை. தமிழ்த் துரோகிகள் கூட்டுச்சேர்ந்து பலம் பெறுவதைத் தடுக்க தமிழர்கள் ராசபக்சாவை நிராகரித்தல் காலத்தின் தேவை.


"எதிரியின் எதிரி நண்பன்": இப்போது அதுவே ஆயுதம்

நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க தயாராகிவிட்டது. இத்தேர்தல் மூலம் தமிழர் தரப்புக்கள் சாதிக்கபோவது என்ன? சரத் பொன்சேகாவிடமிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பால் என்ன உத்தரவாதங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன? அவை தொடர்பான உறுதிப்பாடுகள் எவை என்பது பற்றி இப்பத்தி ஆராய்கிறது.

தற்போது தமிழ் மக்களுடைய உடனடி பிரச்சனைகளை முன்வைத்து இரண்டு பிரதான வேட்பாளர்களுடனும் தொடர்ச்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

மகிந்தவுடன் எக்காலத்திலும் உடன்படக்கூடிய சாத்தியங்கள் இல்லையென்பதை தெரிந்துகொண்ட நிலையிலும் ஆளும்கட்சியினுடைய எதிர்கால திட்டங்கள் என்பது பற்றி அவர்களுடனும் ஆராய்ந்து இறுதியாகவே சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கமுடியுமென தீர்மானித்துள்ளதாக தெரிகின்றது.

இவ்வாறான நிலைப்பாடு தொடர்பாக எம்மவர் சிலரிடம் மாற்றுக்கருத்துக்கள் உண்டு. சிறிலங்காவின் முன்னாள் இராணுவ தளபதியை ஆதரிப்பதில் சில கருத்துவேறுபாடுகள் இருக்கின்றன. இந்திய இராணுவத்தினர் இலங்கையில் நிலைகொண்டிருந்தபோது இந்திய இராணுவத்தினரை அகற்றுவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை எடுத்த முடிவை இங்கு ஞாபகப்படுத்தி கொள்வது நல்லது. அப்போதைய சிறிலங்கா ஆட்சி பீடத்தோடு இணைந்து முதல் எதிரியாகவிருந்த இந்திய படைகளை அகற்றுவதில் புலிகள் தமது இராசதந்திரத்தை சரியாக பயன்படுத்தியிருந்தனர்.

முன்னர் நாம் குறிப்பிட்டது போல ஒரு நாகபாம்பை அகற்றி இன்னொரு பற்கள் புடுங்கப்பட்ட நாகபாம்பை ஆட்சியில் இருத்தபோகின்றோம். ஏனென்றால் சரத் பொன்சேகாவுக்கு அவருக்கென்று ஒரு கட்சி இல்லை. பலவீனமான ஒரு ஆட்சிபீடத்தையே அவரால் அமைக்கமுடியும். சிறிலங்காவின் ஆட்சிபீடம் பலவீனமாக இருக்கும்போதே தமிழர் தரப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். இப்போது தமிழர் தரப்பின் ஆதரவை தேடி ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் படையெடுப்பதும் இதன் ஒரு ஆரம்பமே.

இப்போது சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிப்பதன் மூலம் ஈழத்தமிழர்களின் உடனடி பிரச்சனைகளுக்கு என்ன உத்தரவாதங்கள் பெறப்பட்டுள்ளன? எதிர்வரவுள்ள தேர்தல் தமிழர் தரப்பால் சரியான முறையில் பயன்படுத்தப்படுகின்றதா? என்ற வினாக்கள் எழுவது வழமையானதே.

சரத் பொன்சேகாவுடனும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் நடத்திய பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு காணப்பட்ட முக்கிய விடயங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள புலிகளின் உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கல், உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்குதல் மற்றும் அவசரகால சட்டத்தை நீக்குதல் என்பன முக்கியமானதாகும்.

தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் விடுதலைக்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதை தமிழர் தரப்பு உறுதிப்படுத்தியிருக்கிறது. தற்போதைய மகிந்த அரசாங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினரை கூட இன்னமும் விடுவிக்காமல் இருப்பதை பார்க்கிறோம். இவ்வாறான அரசை ஆட்சியில் தொடர்ந்து அமரவிட்டு விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களையோ அல்லது அதன் ஆதரவாளர்களையோ சிறையிலிருந்து வெளியில் கொண்டுவருவது என்பது சாத்தியமில்லை. அத்தோடு அவர்களின் உயிருக்கு கூட உத்தரவாதத்தை கூட பெற்றுக்கொள்ளமுடியாத நிலையே இருந்துவருகின்றது.

அத்தோடு தடுத்துவைக்கப்பட்டுள்ள முழுமையான விடுதலைப்புலிகளின் விபரங்கள் வெளியிடப்படவில்லை. யார் யார் சிறையில் இருக்கின்றார்கள் என்பது அரசாங்கத்தால் உத்தியோகபூர்வமாக சொல்லப்படவில்லை. இதனால் அவர்களின் உயிருக்கு எந்தவேளையிலும் ஆபத்து இருப்பதை புரிந்துகொள்ளமுடியும். அரசாங்கத்திற்கு சார்பாக கருத்து சொல்லுவார்கள் என அரசாங்கம் நம்பிக்கை கொள்ளும் முன்னாள் போராளிகளை மட்டுமே அரசு வெளியில் விட விரும்புகிறது. அப்படியானால் மற்றையவர்களின் நிலை என்ன?

எனவே தடுத்துவைக்கப்பட்டுள்ள போராளிகளின் விடயத்தில் முன்னேற்றகரமாக தமிழர் தரப்பால் செய்யமுடியுமாகவிருந்தால் அதனை நிச்சயம் செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைத்துமட்டங்களிலும் இருந்து வந்தது. அதனை சரியாக தமிழர் தரப்பின் பிரதிநிதிகள் பயன்படுத்தியிருப்பது ஆறுதலான விடயமே.

அடுத்ததாக உயர் பாதுகாப்பு வலயங்கள் பற்றிய விடயங்கள் மிகவும் முக்கியமானதாகும். சிறிலங்கா அரசாங்கத்தால் யாழ்ப்பாணத்திலும் திருகோணமலையிலும் தொடர்ந்தும் உயர் பாதுகாப்பு வலயங்கள் பேணப்படுவதற்கான திட்டங்களே தற்போதைய அரசிடம் உண்டு. யாழ்ப்பாணத்தில் மூன்றில் ஒரு பகுதி பிரதேசங்கள் உயர் பாதுகாப்புவலயங்களாகவே இருந்துவருகின்றன. இங்கு 30, 338 குடும்பங்கள் இருபது வருடங்களாக தமது வாழ்விடங்களுக்கு திரும்பமுடியாமல் இருந்துவருகின்றார்கள்.

அதேபோல் திருகோணமலையிலும் சம்பூரை உயர் பாதுகாப்புவலயமாக்கி 4249 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இங்கிருக்கின்ற 19 பாடசாலைகளும் தொடர்ந்தும் மூடப்பட்டேயிருக்கிறது. இதுதவிர மணலாறு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் கொக்கிளாய் போன்ற பிரதேசங்களிலிருந்து விரட்டப்பட்ட மக்கள் இருபத்தைந்து வருடங்களாக தமது சொந்த இடங்களுக்கு திரும்பமுடியாமல் இருக்கிறார்கள்.

எனவேதான் உயர்பாதுகாப்பு வலயங்கள் தொடர்பான உறுதியான பதிலை தமிழர் தரப்பு எதிர் பார்த்திருக்கவேண்டும். சாதகமான பதிலளித்த சரத் பொன்சேகா உயர் பாதுகாப்பு வலயங்களை விரைவினிலே நீ்க்குவதற்கான ஒழுங்குகளை செய்வதாக ஏற்றுக்கொண்டுள்ளார்.

அடுத்ததாக தற்போது இலங்கைத்தீவை ஆட்டிப்படைத்துவரும் அவசரகாலசட்டம் பற்றிய விடயமாகும். தற்போது கைது செய்யப்படும் தமிழர்களை நீண்ட காலமாகவே தடுத்துவைப்பதற்கு அரசுக்கு வசதிசெய்யும் சட்டமூலமே இதுவாகும். தற்போதைய நிலையில் இதனை நீக்குவதற்கு வழிசெய்வதன் மூலமே தமிழர்களது குரலை வெளியுலகிற்கு கொண்டுவரமுடியும். அவசரகால சட்டம் நீக்கப்படுவதை உறுதிப்படுத்தி அதற்கான எழுத்து மூல ஆவணங்களும் சரத் பொன்சேகாவிடமிருந்து பெறப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பால் பெறப்பட்ட உறுதிமொழிகள் அனைத்தும் தமிழர்களது அன்றாட அவசர தேவைகளை ஒட்டியதே தவிர தமிழர்களது அடிப்படை அரசியல் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான எந்தவித முன்னேற்றங்களும் இப்பேச்சுவார்த்தைகளின்போது ஏற்படவில்லை என்பதையும் அனைவரும் கவனித்துக் கொள்ளவேண்டும். ஒரு சாதாரண பொதுமகனுக்கு இருக்கவேண்டிய அடிப்படை உரிமைகளை நிலைநாட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளே நடைபெற்றன என்பதையும் தமிழர்களது தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமைகளை நிலைநிறுத்துவதற்கு இன்னும் நீண்ட தூரம் பயணிக்கவேண்டியிருக்கும் என்பதையும் எவரும் மறந்துவிடக்கூடாது.

தமிழர்கள் தமது உரிமைகளை பற்றி விவாதிப்பதற்கான களநிலைமையை ஏற்படுத்துவதே இன்றைய தேவையாகும். அதனை ஏற்படுத்தி தாயகத்திலுள்ள மக்களே தமது உரிமைகள் என்னவென்பதையும் அதற்கான களத்தையும் திறக்கவேண்டும். அவர்களுக்கு வலுச்சேர்க்கும் விதத்தில் புலம்பெயர் தமிழ் சமூகம் தன்னாலான பங்களிப்பை வழங்கமுடியும்.

எனவே தாயகத்தில் எமது மக்கள் சுதந்திரமாக தமது கருத்துக்களை சொல்லக்கூடிய சூழ்நிலையை முதலில் ஏற்படுத்துவோம். அவ்வாறான சுதந்திரமான சூழல் வரும்வரை அதற்கான வழிகளை திறப்பதே எம்முன்னுள்ள ஒரேதெரிவாகும்.


நன்றி:
- கொக்கூரான்-

Wednesday, 6 January 2010

தமிழர்களுக்கு இறுதிச் சந்தர்ப்பம்.

எமக்குக் கிடைக்கப் பெற்ற மின்மடல்

சமூகவிரோதிகள் அரசியல் பலம் பெறுவதை தடுக்க இறுதிச் சந்தர்ப்பம்.

நானும் புலிகளால் பாதிக்கப்பட்டு வேறு வழியின்றி ஈ.பி.டி.பியுடன் பலவருடங்களாக வேலை செய்திருக்கிறேன். நானும் இன்று தமிழர்படும் துன்பத்தைக் கண்டு வேதனைப்படுவன். என் இனத்தின் மேலுள்ள அக்கறையால் தங்களுக்கு இதை அனுப்பி வைக்கிறேன். பதிவேற்றுவீர்களென நம்புகிறேன்.

டக்லஸ், கருணா

இன்று ஈழத்தில் பல அரசியல் சந்தர்ப்பவாதிகள் இருந்தாலும், இந்த இருவர் மட்டும் தமிழன் எத்துயர் அடைந்தாலும் தன்னலமே பெரிது என வாழ்பவர்கள். ராஜபக்ச, சரத்பொன்சேகா தமிழனுக்குச் செய்யும் கொடுமைகளைவிட இவ்விருவரின் கணகாணிப்பின் கீழ் இயங்கும் சமூகவிரோதிகள் செய்யும் அட்டுழீயங்கள் வார்த்தைகளால் விபரிக்க முடியாதவை.

தம்மைத் தவிர வேறு எந்தத் தமிழனும் அரசியலில் தலையெடுக்கக் கூடாது என்பதில் இவர்கள் இருவரும் வெளியில் எதிர்ப்பைக் காட்டி, மறைவில் ஒன்றுபட்டுச் செயல்பட்டு வருகின்றனர். தமிழர் மத்தியில் ஜனநாயகத்தை ஏற்படுத்துகின்றோம் என்று கொக்கரிக்கும் இவர்கள் தங்கள் ஆதரவாளர்களுக்கே ஜனநாயக ரீதியில் கருத்துரிமை வழங்குவதில்லை.

ராஜபக்சாவோ, சரத்பொன்சேகாவோ தமிழினத்திற்கு விடிவைப் பெற்றுத் தரப்போவதில்லை. அவர்கள் உலக அழுத்தம் காரணமாக தமிழினத்திற்கு நன்மை செய்தாலும் நிச்சயம் இந்த இருவரும் செய்யமாட்டார்கள். இவர்கள் யாருடன் கூட்டுச் சேருகிறார்களோ அவர்களை நிராகரியுங்கள்.

இந்த இருவரும் அரசியல் பலம் பெறுவதென்பது ஈழத்தமிழினம் தன்னழிவை உறுதிசெய்வதாக அமையும். கிழக்கில் ரீ.எம்.வி.பி, வவுனியாவில் புளோட், யாழில் ரீ.என்.ஏ பலம் பெறுவதைச் சகிக்க முடியாத இந்த ஜனநாயக விரோதிகளைத் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும். இதுவே இந்தத் தேர்தலில் தமிழர்களுக்கு கிடைத்துள்ள அரிய சந்தர்ப்பம்.

என்னினமே சிந்தித்து தீர்க்கமான முடிவை எடுங்கள்.

நன்றி.






Thursday, 31 December 2009

காணொளி: சர்வாதிகாரி மனம் திறக்கறார்?!

சரத் பொன்சேகா: வருங்கால சர்வாதிகாரி மனம் திறக்கறார்.

ஜெனரல் கர்டியெவா சரத் சந்திரலால் பொன்சேகா (பி.18/12/1950) 2005 டிசம்பர் 6 முதல் இலங்கை இராணுவத்தின் கட்டளைத் தளபதியாக பதவிவகித்து வந்தவர். இவர் இலங்கை உள்நாட்டுப் போரின் தொடக்கம் முதலே இலங்கை இராணுவத்தில் சேவையாற்றி வந்திருக்கின்றார். இவர் அப்பாவி தமிழ் மக்கள் 20000 மேற்பட்டோரை வன்னி போர்முனை பகுதியில் படுகொலை செய்வதற்க்கு காரணமான முக்கிய சூத்திரதாரியாக சர்வதேச மனிதபிமான ஆர்வலர்களால் குற்றம் சாட்டபட்டுள்ளார். நவம்பர் 16,2009 அன்று தமது பதவியிலிருந்து விலகி இலங்கையின் அடுத்த அதிபர் தேர்தலில் நடப்பு அதிபர் மகிந்த ராஜ்பக்சேவிற்கு எதிராக போட்டியிட முடிவெடுத்தார்.

Part 1


Part 2


Part 3


Part 4
Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் Holykural



Kural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis