.



"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..
Showing posts with label பாடல். Show all posts
Showing posts with label பாடல். Show all posts

Wednesday, 16 June 2010

போராடும் அன்பில்; அட ஏன் தான் காயமோ?!


பூ மீது யானை; பூ வலியைத் தாங்குமோ
தீ மீது வீணை; போய் விழுந்தால் பாடுமோ
போ என்று சொன்னால்; வரும் நினைவும் போகுமோ
போராடும் அன்பில்; அட ஏன் தான் காயமோ

கண்ணீர் கவிதைகள் இந்தக் கண்கள் எழுதுதே
கவிதை வரிகளால் எந்தன் கன்னம் நிறையுதே
இலைகள் உதிர்வதால் கிளையின் சுமைகள் கூடுதே
உதிரும் இலைகளோ மறந்து காற்றில் போகுதே

பூ மீது யானை பூவலியை தாங்குமோ?
தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ??

உடைத்துப் பார்க்கும் இதயம் உனது,
படைத்து பார்ப்பதை அறியாதே..
குளத்தில் விழுந்து தெறிக்கும் நிலவு
நிஜத்தில் உலகத்தில் உடையாதே... உடையாதே..........

உடைத்துப் பார்க்கும் இதயம் உனது
படைத்து பார்ப்பதை அறியாதே..
குளத்தில் விழுந்து தெறிக்கும் நிலவு
நிஜத்தில் உலகத்தில் உடையாதே...

காதல் போலவே நோயும்இல்லையே...
யாவும் உண்மை தானே..
இதை காலம் காலமாய் பலரும் சொல்லியும்
கேட்கவில்லை நானே..

பூ மீது யானை.. பூவலியை தாங்குமோ..
தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ..

விலகும்போது நெருங்கும் காதல்..
அருகில் போனால் விலகிடுமோ..
விலங்கு மாட்டி சிறையில் பூட்டி
விருப்பம் போலவேவலி தருமோ...ஆ..ஆ..ஆ..ஆ...

விலகும்போது நெருங்கும் காதல்
அருகில் போனால் விலகிடுமோ..
விலங்கு மாட்டி சிறையில் பூட்டி
விருப்பம் போலவே வலி தருமோ

வேறு வேறாக நினைவு போகையில்
காதல் கொள்ளுதல் பாவம்..
அது சேரும் வரையிலே யாரும் துணையில்லே
ஆதி கால சாபம்...

பூ மீது யானை.. பூவலியை தாங்குமோ..
தீ மீது வீணை.. போய் விழுந்தால் பாடுமோ..
போ என்று சொன்னால் வரும் நினைவும் போகுமோ..
போராடும் அன்பில் அட ஏந்தான் காயமோ..

கண்ணீர் கவிதைகள் இந்தக் கண்கள் எழுதுதே..
கவிதை வரிகளால் எந்தன் கன்னம் நிறையுதே...
இலைகள் உதிர்வதால் கிளையும் சுமைகள் கூடுதே..
உதிரும் இலைகளோ மறந்து காற்றில் போகுதே..

பூ மீது யானை.. பூவலியை தாங்குமோ..
தீ மீது வீணை.. போய் விழுந்தால் பாடுமோ..

படம் : டிஸ்யூம்
குரல் : மால்குடி சுபா
இசை : விஜய் அன்ரனி
நடிகர்கள் : ஜீவா+சந்தியா

Tuesday, 15 June 2010

பச்சைக் கிளிகள்


பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனத்ததின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை
சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு - அட
சின்ன சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு
பட்டாம் பூச்சி கூட்டத்துக்குப் பட்டா எதுக்கு - அட
பாசம் மட்டும் போதும் கண்ணே
காசு பணம் என்னதுக்கு?
(பச்சைக் கிளிகள்..)

அந்த விண்ணில் ஆனந்தம்
இந்த மண்ணில் ஆனந்தம்- அடி
பூமிப் பந்த முட்டி வந்த புல்லில் ஆனந்தம்
வெயிலின் வெப்பம் ஆனந்தம்
மழையின் சத்தம் ஆனந்தம் - அட
மழையில் கூடச் சாயம் போகா வானவில் ஆனந்தம்
வாழ்வில் நூறானந்தம்
வாழ்வே பேரானந்தம் பெண்ணே
நரை எழுதும் சுயசரிதம்
அதில் அன்பே ஆனந்தம் ஆனந்தம்!
(பச்சைக் கிளிகள்..)

உன் மூச்சில் நான் வாழ்ந்தால்
என் முதுமை ஆனந்தம் - நீ
இன்னொரு பிறவியில் என்னை பெற்றால் இன்னும் ஆனந்தம்
பனி கொட்டும் மாதத்தில்
உன் வெப்பம் ஆனந்தம் - என்
காது வரைக்கும் கம்பளி போர்த்தும் கருணை ஆனந்தம்
சொந்தம் ஓர் ஆனந்தம்
பந்தம் பேரானந்தம்
கண்ணே உன் விழியால் பிறர்க்கழுதால்
கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தம்
(பச்சைக் கிளிகள்..)

படம்: இந்தியன்
இசை: ஏ.ஆர் ரஹ்மான்
பாடியவர்: கே.ஜெ ஜேசுதாஸ்
பாடல் : வைரமுத்து
Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் Holykural



Kural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis