
விடுதலைக்காக வீழ்ந்த அனைத்து மக்களுக்கும், போராளிகளுக்கும், தளபதிகளுக்கும் தலைசாய்க்கும் நாம் தொடர்ந்து உரிமைக்காக வன்முறையற்ற வழிகளில் போராடுவோம் என்று உறுதியெடுப்போம். கோபங்கள் நியாயமானவையாக இருந்தாலும், அவை வன்முறை வடிவம் பெற்றதால், நாம் பெற வேண்டியதை விட இழந்ததே அதிகம். இதுவே யதார்த்தம். 2009 தமிழர்களுக்கு விட்டுச் செல்லும் சேதியும் அதுவே. தொடர் வன்முறை நம்மினத்தை மீளாத் துயரத்தில் ஆழ்த்தி, இருப்பதையும் இழக்க வைத்துவிடும். எனவே, வன்முறையை அறவே கைவிட்டு, மாற்று வழிகளில் தொடர்ந்து ஒன்றுபட்டு தமிழினத்தின் விடிவிற்காகவும், தமிழின் வளர்ச்சிக்காகவும் தொடர்ந்து உழைப்போம். 2010 தமிழர் நாம் ஒன்றுபடும் ஆண்டாக மலரட்டும். "எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும்" என்பதே 2010ல் எங்கள் வேண்டுதல்கள் ஆகட்டும்.
வாழ்க மானுடம். வாழ்க இவ்வையகம்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.