."ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thursday, 17 December 2009

கொழும்பில் பதுங்கியுள்ள தமிழன்

புலம்பெயர் தமிழர் பற்றி கொழும்பில் பதுங்கியுள்ள தமிழன்

"நாங்கள் என்னவும் செய்வம். அதைப்பற்றி மற்றவன் மூச்சு விடக்கூடாது. ஆனா மற்றவன் மூச்சு விடுவதை நாங்கள்தான் தீர்மானிப்போம் - புலம்பெயர் தமிழர்"
-ஆதிரை, பதிவர், கொழும்பு-


பதுங்கியுள்ள தமிழன் நண்பன் ஆதிரைக்கு:

கொழும்பிலுள்ள பெரும்பான்மை தமிழர்களும் சொந்த மண்ணை விட்டு உள்நாட்டில் புலம்பெயர்ந்தவரே. நான் மனோ கணேசன் மாதிரி அந்த மண்ணிக்குரியவர்களைக் குறிப்பிடவில்லை. குறிப்பாக வடக்கிலிருந்து வந்து பதுங்கியுள்ளோரைக் குறிப்பிடுகிறேன். ஏன் ஆகாயத்தைப் பார்த்துக் காறி உமிழ்கிறீர்கள்?! பிடிக்கலையென்றால் உங்கள் கருத்தை வேறு விதமாக பதிந்திருக்கலாம். அது எங்களுக்கு எதிரான நிலைப்பாடாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள நாம் தயார். ஏதோ புலம்பெயர் தமிழர்தான் நீங்கள் மூச்சு விடுவதைக் கட்டுப்படுத்திற மாதிரி இடுகை இட்டுள்ளீர். உங்கள் விரக்தியை உங்கள் சுகந்திரமான நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பாதுகாப்பமைச்சுக்கு எதிராக ஒரு இடுகை இட்டுப்பாருங்கள். எத்தனை நாளைக்கு மூச்சு விடுகிறீர்கள் என்று பார்க்கலாம்?! நீங்கள் பாதுகாப்பமைச்சு அனுமதியின்றி மூச்சே விடமுடியாது. அதற்கு நீங்கள் போராட்டம் நடத்தனுமென்றால் இந்தப் புலம்பெயர் தமிழன் வருவான். உங்கள் ஆற்றாமைக்கான காரணங்களை புலம்பெயர்ந்தவர் மீது போடுவதில் ஏதும் நன்மையில்லை. உணர்வுள்ள புலம்பெயர்ந்த தமிழன், தமிழ்நாட்டுத் தமிழன் எல்லோரும் தொப்புள்கொடி உறவுக்காக உயிரை விட்டிருக்கிறார்கள். முத்துக்குமார் (தமிழ்நாடு), முருகதாசன் (இலண்டன்) மற்றும் பலரும் நீங்கள் மூச்சு விடக்கூடாதென்பற்காகவா மூச்சை விட்டார்கள்?! சிந்திப்பாயா நண்பா?!

ஆதிரை அவர்களின் பதிவு
http://kadaleri.blogspot.com/2009/12/blog-post_16.html

2 comments:

  1. nalla pathivu.. but neenga ondum use illatha aalluku mukkiyathuvam kudunreegal. waste.

    ReplyDelete
  2. Hi friends cinema vera namma naadu vera ok?
    so nalla pillaiyala vera ethavathu chapterukku poriyalo?

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் HolykuralKural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis