கிழக்கில் செயற்படும் ஆயுதக்குழக்களுடன் தொடர்புகளைபேணவேண்டாம் என்று தமிழ் ஈழ அபிமானிகள் என்ற அமைப்பினரால் துண்டுப்பிரசுரம் ஒன்று அம்பாறை மாவட்டத்தில் வினியோகிக்கப்பட்டுவருகின்றது.
ஆயுதக்குழுகளை சாடிவெளியிடப்பட்டுள்ள அந்த துண்டுபிரசுரத்தில் எந்தவித இலட்சினையும் இடம்பெறவில்லை.
அந்த துண்டுபிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அன்பார்ந்த தமிழ் மக்களே!
இது பொய்யோ! பித்தலாட்டமோ அல்ல இது உண்மையாக நடந்துகொண்டிருக்கும் செயல் ஏன் தமிழர்களாகிய நாம் இன்னும் புரிந்து கொள்ளாமல் ஏமாந்து கொண்டிருக்கிறோம். ஏன்னவென்று தெரியவில்லையா? அரசியல் என்ற பெயரில் தமிழ் மக்களை அடிமையாக்கி, பயமுறுத்தி, தமிழ் மக்களின் உரிமைகளை பறித்து தமிழனை தலை குனியவைத்துள்ளார்கள்.
அன்பார்ந்த தமிழ் மக்களே! நமது நிலமை புரியவில்லையா? நமது தமிழனை காட்டிக்கொடுத்து குண்டு துளைக்காத வாகனத்தில் செல்லுகின்றார்கள் அவர்களால் நமக்கு என்ன நன்மை ஏற்பட்டது? ஊரை இளந்தோம் உடமையும் இளந்தோம், வாகனம் கொடுக்காவிட்டால் உயிர்களையும் இளந்தோம், எத்தனை ஆயிரம் உயிர்களை பறித்துவிட்டார்கள் அவர்களுக்கு பணம் கொடுக்காவிடின் அவர்களையும் அச்சுறுத்தி பணம் பறித்தார்கள்.
இச் செயலை ஒரு முஸ்லிம் மதத்தவர்களையோ அல்லது சிங்கள மதத்தவரையோ இதை எல்லாம் செய்திருந்தால் என்ன செய்திருப்பார்கள்?
இனியபாரதி, கீதன், புரட்சி, இவர்கள் யார்? இவர்கள் தான் அரசியல் பணிமனை எனும் மகுடம் சூட்டி அப்பாவி தமிழ் பெண்களின் கற்போடு விளையாடி அவர்கள் இணங்காவிடின் குடும்பத்துடன் சுடுவதாக மிரட்டுகிறார்கள். அண்மைக்காலங்களில் இது மாதிரியான பல சம்பவங்கள் நடந்துள்ளது.
அன்பார்ந்த மக்களே !
இதை எல்லாம் எப்போது உணர்ந்து கொள்ளப் போகிறீர்கள். 30 வருட போராட்டத்தை ழூன்று மாதத்துக்குள் காட்டிக்கொடுத்தார்கள். அவர்கள் எதை காட்டிக்கொடுத்தார்கள் தமிழனாகிய எம்மை காட்டி கொடுத்தார்கள். இன்னும் எத்தனை மஞ்சல் குங்குமத்தை பறிக்கப்போகிறார்கள். எத்தனை தாயிடம் இருந்து பிள்ளைகளைப் பறிக்கப்போகிறார்கள்.
அன்பார்ந்த தமிழ் புத்திஜீவிகளே! இதனைப் புரிந்து கொள்ளுங்கள். இதனையெல்லாம் பார்த்து நாம் ஏன் இன்னும் மௌனம் சாதிக்கிறோம். அவர்களே இளைஞர்களை கடத்துகிறார்கள். பிறகு ஆதரவு தேடுவதற்காக ஆர்பாட்டம் செய்து அவர்களே விடுவிக்கின்றார்கள். நாம் எல்லாம் இவர்களுக்கு அடிமையா? இனிமேல் இதுபோன்ற தவறுகளை செய்ய மாட்டீர்கள் என நம்புகிறோம்.
என்னவென்றால் நாம் தமிழன். நமக்கு வெட்கம், மானம், சூடு, ரோசம், இருந்தால் யாராவது அவர்களுக்கு ஆதரவு கொடுக்கவேண்டாம். இனிமேல் யாராவது பிரச்சினை என்று கூறி செல்ல வேண்டாம். உங்களுக்கு ஏதாவது பிரச்சினையென்றால் பொலிஸிடம் கூறுங்கள் நம்மை பாதுகாப்பதற்கு பாதுகாப்பு படையினர் உள்ளார்கள்.
ஆகவே இனிமேல் (இனியபாரதி, கீதன், புரட்ற்சி) இவர்களுடன் சேர்ந்து திரியம் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் இவர்களை வீட்டில் சேர்ப்பவர்கள் அனைவரும் உங்களை நீங்களே திருத்தி கொள்ளுங்கள். அப்படி திருந்தாவிடின் வருகின்ற புதுவருடம் அவர்களுக்கு சிறப்பாக அமையும்.இது புரிந்து இருக்கும் என்று நினைக்கின்றோம்.
இதற்கு மேலும் அவர்களுடன் சேர்ந்து திருவீர்கள் ஆனால் உங்களது பெயரும், தமிழர்களை காட்டிக்கொடுக்கும் இடத்தில் (லிஸ்ரில்) இணைக்கப்படும். அவர்களை விட உங்களுக்கு தான் தண்டணை அதிகம். இதை விளையாட்டாக நினைக்காதீர்கள் குறிப்பாக பெண்கள். நீங்கள் அவர்களை சேர்த்தால் துண்டுப்பிரசுரம் அடித்து போட்டவுடன் ஒட்டுவோம். இது தமிழ் ஈழத்தின் மேல் ஆணை.
அவர்கள் உங்களை பயமுறுத்தினால் பொலிஸிடம் கூறுங்கள். அவர்கள் நடவடிக்கை எடுக்காவிடின் விசேட அதிரடிப் படையினரிடம் மனு ஒன்று எழுதி அனுப்புங்கள். அவர்கள் தக்க நடவடிக்கை எடுப்பார்கள். இதற்கு மேலும் பெண்கள், இளைஞர்கள் இது போன்ற தவறு செய்தால் நாங்கள் பாரபட்சமின்றி மிகக் கொடூரமாக நடவடிக்கை எடுப்பார்கள். இது உண்மை.
நாம் தமிழன் தானே! தமிழன் என்ற உணர்வு 10 வீதமாக இருக்கவேண்டும். இதற்கு முன்னர் இளைத்த தவறினை இனிவிட வேண்டாம். நாம் தமிழன் என்ற உணர்வு எப்போதும் இருக்கவேண்டும்.தமிழன் ஆகிய நாம் ஒற்றுமையாக செயல்பட்டால் இனியதொரு யுகம் பிறக்கும். அதை விட்டுவிட்டு நாட்டைக்காட்டிக் கொடுத்தவரோடு இணையவேண்டாம்.
இப்படிக்கு
தமிழ் ஈழ அபிமானிகள்
Subscribe to:
Post Comments (Atom)
Thirukkural திருக்குறள் Holykural
Kural குறள் - 533
பொருட்பால் - பொச்சாவாமை
எப்பால் நூலோர்க்கும் துணிவு.
Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.
Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.