
இந்திய ஊடகமொன்றின் செய்தியாளர் வல்வெட்டித்துறையில் இருந்து அந்த ஊடகத்தில் எழுதியுள்ளாதாவது,
நாட்டினது பெரும்பான்மைச் சிங்கள சமூகத்தின் குறித்ததொரு பகுதியினர் மத்தியில் பிரபாகரனின் புகழ் மேலோங்கிக் காணப்படுகிறது.
யாழ்ப்பாண நகரிலிருந்து 30 கி.மீ தூரத்தில் வல்வெட்டித்துறையில் அமைந்திருக்கும் பிரபாகரன் சிறுபராயத்தில் வாழ்ந்த வீட்டினைப் பாதுகாக்கும் பணியில் சிறிலங்கா இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.

பிரபாகரன் மறைவுடன் விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்ததைத் தொடந்து 30 வருடங்களுக்கும் மேலாக யுத்தம் இடம்பெற்றுவந்த நாட்டினது வடக்குக் கிழக்குப் பகுதியில் இருந்துவந்த பதற்றம் பெரிதும் தணிந்திருக்கிறது.
இதன் விளைவாக மக்கள் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றுவரக்கூடிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
நாட்டினது வடக்கினையும் தெற்கினையும் இணைக்கும் யாழ்-கண்டி நெடுஞ்சாலை கடந்த சனவரி முதல் மக்கள் போக்குவரவுக்காகத் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து தென்பகுதிச் சிங்களவர்கள் யாழ்ப்பாணத்திற்குப் படையெடுத்து வருகிறார்கள்.
இவ்வாறாக பேருந்துகளிலும் வான்களிலும் யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் சிங்களவர்கள், பிரபாகரன் தனது இளமைக் காலத்தில் வசித்துவந்த வீட்டினைப் பார்ப்பதற்காக வல்வெட்டித்துறைக்கும் செல்கிறார்கள்.

பிரபாகரனது சிறுபராய வீடு உருக்குலைந்த நிலையில் காணப்பட்டாலும் யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்யும் தென்பகுதிச் சிங்களச் சுற்றுலாப்பயணிகளுக்கு ஒர் சுற்றுலா மையமாகவே அது திகழ்கிறது.
சிலர் வீட்டுச் சுவரில் தங்களது குறிப்புக்களை எழுதிவிட்டுச் செல்கிறார்கள், வேறுசிலர் வீட்டிலிருந்து சிறு கற்களை உடைத்தெடுத்துச் செல்கிறார்கள். “இந்த வீடு ஓர் குப்பைத்தொட்டியாக மாறிவிட்டது” என உள்ளுர் கடைக்காரர் ஒருவர் தெரிவித்தார். ‘மகாஜன் கபே’ எனச் சிங்களத்தில் வீட்டினது சுவரில் எழுதப்பட்டிருக்கிறது.
வல்வெட்டித்துறை என்ற இந்தக் கரையோரக் கிராமத்தில் இந்துக்களும் கிறீஸ்தவர்களுமே வாழ்ந்து வருகிறார்கள். 1989ஆம் ஆண்டு இந்திய அமைதி காக்கும் படையினர் தளமொன்றை வல்வெட்டித்துறையில் அமைத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
வேலுப்பிள்ளையினது வீட்டைப் பார்வையிட வரும் சிங்களவர்கள் வீட்டுச் சுவரில் கண்டதையும் எழுதுகிறார்கள் என்றும் கற்களை உடைத்துச் செல்கிறார்கள் என்றும் அயலிலுள்ள தமிழர்கள் இராணுவத்தினரிடம் முறையிட்டார்கள்.
தற்போது சிங்கள உல்லாசப் பயணிகள் பிரபாகரனது சிறுபராய வீட்டினை அசிங்கப்படுத்தாதவாறு, அதனைச் சுற்றி இராணுவத்தினர் 24 மணிநேரமும் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
“வீட்டுக்கு முன்னால் வாகனங்களை நிறுத்துவதற்கு நாம் அனுமதிப்பதில்லை” என கெமுணு வோச் படைப்பிரிவினைச் சேர்ந்த இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
1995ம் ஆண்டு கெமுணு வோச் படைப்பிரிவே விடுதலைப் புலிகளிடமிருந்து யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியமை இங்கு குறிப்பிடத்தக்கது.
நன்றி:
புதினப்பலகை
பிறபாகரன் மறைந்துவிட்டார் என்றால் அதற்கு என்ன பொருள்?
ReplyDelete