கடந்த 14-03-2010 அன்று ஈபிடிபி(Eelam People's Death Party- EPDP) அமைப்பினரால் கடத்தப்பட்ட கபில்நாத் அவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்ட பின்னர் கழுத்து நெரித்துப் படுகொலை செய்யப்பட்ட பின்னர் வாழைத் தோட்டம் ஒன்றில் புதைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகள் மூலம் செய்திகள் வெளியாகியுள்ளது.
அப்பாவி மாணவனான கபில்நாத் அவர்கள் கொலை வெறியர்களால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவத்தினை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றேன். இப் படுகொலையுடன் தொடர்புடய ஈபிடிபி அமைப்பு நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனை வழங்கப்படல் வேண்டும்.
கடந்த காலத்தில் மகிந்தராஐபக்சவின் ஆட்சிக்காலத்தில் அரச படைகளுடன் இணைந்து பெருமளவான அப்பாவிப் பொது மக்களை கடுத்திப் படுகொலை செய்யும் செயற்பாடுகளில் ஈடுபட்ட வந்த ஈபிடிபி அமைப்பு இன்னமும் தனது கொலைக் கலாசாரத்தினை நிறுத்தவில்லை.
வவுனியாவில், ஈ.பி.டி.பியினரால் தாக்கி கொலை செய்யப்பட்ட இளைஞரின் இறுதி நிகழ்வு!!
கடந்த வவுனியா நகரசபைத் தேர்தலில் ஈ.பி.டி.பியின் சார்பில் 06ம் இலக்கத்தில் போட்டியிட்ட ஜெயராஜ் என்கிற ஈ.பி.டி.பி குருவும், ஈ.பி.டி.பியின் ஒன்றியத்தைச் சேர்ந்த தினேஸ், ரமணி, துன்பம், நிரோ உள்ளிட்ட ஐவரும் கிருஸ்ணா என்கிற 25வயதான தங்கராசா கிருஸ்ணகோபால் என்பவரை கடுமையாக தாக்கிப் படுகொலை செய்துள்ளனர்.
கடந்த வவுனியா நகரசபைத் தேர்தலில் ஈ.பி.டி.பியின் சார்பில் 06ம் இலக்கத்தில் போட்டியிட்ட ஜெயராஜ் என்கிற ஈ.பி.டி.பி குருவும், ஈ.பி.டி.பியின் ஒன்றியத்தைச் சேர்ந்த தினேஸ், ரமணி, துன்பம், நிரோ உள்ளிட்ட ஐவரும் கிருஸ்ணா என்கிற 25வயதான தங்கராசா கிருஸ்ணகோபால் என்பவரை கடுமையாக தாக்கிப் படுகொலை செய்துள்ளனர்.
உயிரிழந்தவர் வவுனியா, சாந்தசோலைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவர். இச்சம்பவம் நேற்று முன்தினமிரவு வவுனியா திருநாவற்குளம் பிரதேசத்தில் இடம்பெற்றிருந்தது. இந்தப் படுகொலை தொடர்பில் ஏற்கனவே நால்வர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஐந்தாவது சந்தேகநபராக ஈ.பி.டி.பியின் ஒன்றிய உறுப்பினராகிய துன்பம் என்கிற தினேஸ் என்பவரைப் பொலீசார் இன்றுமாலை கைது செய்துள்ளனர். இச்சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரென்று தெரிவிக்கப்படும் அன்ரனி ஜெயராஜ் என்கிற ஈ.பி.டி.பி குரு தலைமறைவாகியுள்ளதாகவும், அவர் ஈ.பி.டி.பி அமைப்பினரால் கொழும்புக்கு கொண்டு செல்லப் பட்டிருக்கலாமெனவும் நம்பப்படுகிறது.
அவரைத் தேடும் நடவடிக்கையில் வவுனியா பொலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக பொலீஸ் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மரண நிகழ்வுகள் இடம்பெற்ற உயிரிழந்தவரின் இல்லத்தில் இருந்து நிலைமைகளை அவதானித்த நிருபர் வழங்கிய தகவலின்படி, உயிரிழந்தவரின் தலை கடுமையாக தாக்கி சிதைக்கப்பட்டிருந்தது. உயிரிழந்தவர் மனிதாபிமானமற்ற முறையில் கோரத்தனமாக தாக்கப்பட்டுள்ளார் என்பதை இதன்மூலம் புரிந்து கொள்ளக் கூடியதாகவிருந்தது.
அன்னாரின் இல்லத்தில் பெருந்திரளானவர்கள் அன்னாருக்கு அஞ்சலி செலுத்திய வண்ணம் இருந்தனர். இதனைத் தொடர்ந்து இன்றுமாலை தாண்டிக்குளம் பத்தினியார் மகிழங்குளம் இந்து மயானத்தில் தந்தையார் தங்கராசாவினால் இறுதிக் கிரியைகள் நடத்தப்பட்டு பூதவுடல் தகனம் செய்யப்பட்டது. அஞ்சலி நிகழ்வுகள் மற்றும் இறுதி நிகழ்வுகளில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன், வவுனியா நகரசபை எதிர்க்கட்சித் தலைவரும் புளொட் முக்கியஸ்தருமான ஜி.ரி.லிங்கநாதன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ஈரோஸ் அமைப்பின் சார்பில் செந்தில் உட்பட பல அரசியல் பிரமுகர்களும் முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர். அதேபோன்று புளொட் டெலோ போன்ற அமைப்புக்களினால் அஞ்சலி துண்டுப் பிரசுரங்களும் வெளியிட்டு விநியோகிக்கப்பட்டிருந்தன.
Subscribe to:
Post Comments (Atom)
Thirukkural திருக்குறள் Holykural
Kural குறள் - 533
பொருட்பால் - பொச்சாவாமை
எப்பால் நூலோர்க்கும் துணிவு.
Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.
Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.