.



"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Friday, 16 April 2010

மனிதாபமற்ற மிருகம் முதல்வர் கருணாநிதி

சிறீலங்கா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்து, தமிழீழ தேசியத் தலைவரின் தந்தை திருவெங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் சாவடைந்த நிலையில், மலேசியாவிற்கு சென்றிருந்த தமிழீழத் தேசியத் தலைவரின் தாயார் பார்வதி அம்மையார், நேற்று சிகிச்சைக்காக இந்தியா சென்றபோது சென்னை விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

பக்க வாதம் நோயால் பாதிக்கப்பட்டு, சுயமாக நடமாடமுடியாதளவிற்கு படுத்த படுக்கையாக இருக்கும் அவர், சென்னையில் இருந்து நாடு கடத்தப்பட்டது பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

இதேவேளை, இவரை சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள தமிழகத்திற்கு வருவதற்கு அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ மற்றும் விடுதலைச் சிறுத்தைகளைச் சேர்ந்த வன்னியரசு உட்பட தமிழின உணர்வாளர்கள் பலர் சென்னை விமான நிலையம் அருகே நேற்று இரவிரவாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.


எனினும், அவர்களின் கோரிக்கைகளை நிராகரித்து அவர் மீண்டும் மலேசியாவிற்கே திருப்பி அனுப்பிவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, இந்நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு, இது இந்திய - சிறீலங்கா அரசுகளின் கூட்டுச்சதி என்றும் தெரிவித்துள்ளது.

5 comments:

  1. karunanidhi is not an animal:
    animal without hearts:eats s h i t!

    ReplyDelete
  2. Anonymous16/4/10 20:52

    தமிழர்கள் வரலாறு ஒவ்வொரு காலகட்டத்திலும் துரோகிகளை பதிவுசெய்துகொண்டே வருகின்றது இந்த நூற்றாண்டின் துரோகி கருணாநிதி என்பதை வரலாறு பதிவுசெய்யும். ஆனால் வம்சாவளியால் கருணாநிதி தெலுங்கன் தவிர தமிழன் கிடையாது.

    ReplyDelete
  3. Anonymous16/4/10 22:03

    அண்ணாவின் நினைவிடத்தில் போர்நிறுத்த கோரிக்கை வெற்றி அடைந்துவிட்டது என்று கூசாமல் பொய் சொன்ன உந்த கயமைதனத்தை பார்த்த இந்த இளய சமுதாயம் உன்னை பொய்யன் , அய்யோக்கியன், நாலாந்தர மனிதன் என்று முடிவு கட்டி நாளாகிவிட்டது .மாபெரும் சம்ம்ரஜியங்களெல்லாம் மணல் மேடுகளாக இன்று காட்சி தருகின்றன .உன்னுடைய அரசியல் சாம்ராஜ் யமும் , ஏழை தொண்டனின் உழைப்பில் நீ கட்டி வைத்திருக்கிற குடும்ப சாம்ராஜ்யமும் அழியும் நாள் வெகு தூரத்தில் இல்லை .நீ ஒரு வயதான ஒரு தாயை மட்டும் துன்புறுத்தவில்லை ஒட்டு மொத்த தமிழர்களையும் மனதளவில் வெகுவாக காயப்படுத்தி யுள்ளாய்.னக்கு இத்தனை வயதாகியும் அடிப்படை ஞானம் கூட வரவில்லை. உனக்கு நேரம் இருந்தால் வாரணாசியில் கங்கை கரையோரம் சிதிலமடைந்து நிற்கும் காசிராஜனின் அரண்மனையை போய் பார்த்துவா .உன்னுடைய குடும்பமும் இப்படித்தான் உனக்கு பிறகு.
    மடத்தலைவனே .

    உமா , திருவனந்தபுரம்

    ReplyDelete
  4. Anonymous16/4/10 23:50

    பிரபாகரன் தாயார் - என்ன கொடுமை இது ?

    http://vanakkamnanbaa.blogspot.com/2010/04/blog-post_16.html

    என்ன சொல்வது கருணாநிதியை, .................. அடத்..தூ........... என்பதை தவிர.

    ReplyDelete
  5. மனிததன்மையற்ற உணர்வில்லா பேடித்தனம்.

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் Holykural



Kural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis