அ.மயூரன், இலண்டன்.

உண்மையில் தமிழர்களின் விளையாட்டு என்று கூறும் போது அதற்கு நீண்ட ஒரு வரலாற்றுப் பிநண்ணனி உண்டு. சங்க்காலத்திற்கு முன்பிருந்தே தமிழன் விளையாட்டுக்களில் திறமைசாலியாக இருந்தான் என்பதனை “செல்வம் புலனே புணர்வு விளையாட்டு என்று அல்ல்ல் நீத்த நான்கே.” (தொல் - மெய் - 11) என்ற தொல்காப்பியர்’ செய்யுள் சான்று பகர்கின்றது. அதில் அவர் விளையாட்டு என்பதற்கான வரைவிலக்கணத்தைக் கூறாது விட்டாலும் மனமகிழ்ச்சி ஊட்டும் ஒரு செயலே விளையாட்டு எனக் கூறுகின்றார்.
அத்துடன் சங்க்காலத்து நற்றிணையில் கூட
“விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது இளையோர் இல்லிடத்து இற்செறித் திருத்தல் அறனும் அன்றே ஆக்கமும் தேயம்” (நற்றிணை – 68:1-3)



அவர்கள் தமது இலட்சினையில் ஒரு ஆண் விளையாட்டு வீரனும், ஒரு பெண் விளையாட்டு வீராங்கனையும், ஓட்டப்பந்தையத்தடத்தில் நின்று சங்கு ஒலிக்கின்றனர். இது ஒரு முக்கிய செய்தியினைக் கூறுகின்றது. எனக்கு பாரதிதாசன் பாடல் ஒன்று இங்கு ஞாபகத்திற்கு வருகின்றது.
“எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு”


பிரதம விருந்தினராக பிரித்தானிய இளைஞர்கள் விவகார அமைச்சர் டோன் பற்லர். (Hon. Minster Ms. Dawn Butler MP Minister for young Citizen and Youth engagement) அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களான பரி காட்ணர் (Barry Gardiner MP) சிபோன் மக்டொனால்ட் (Siobhain McDonald MP) ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்துடன் முன்னாள் லண்டன் மேயர் கென் லிவிங்ஸ்ட்ன், பிரித்தானிய நிழல் வெளிவிவகார அமைச்சர் கேரத் தோமஸ். ஆகியோரும் தங்கள் ஆதரவுகளையும் கருத்துக்களையும் வழங்கியிருந்தனர். இவர்கள் அனைவரும் இந்த விளையாட்டுப் போட்டியும் விருதுவழங்கும் நிகழ்வும் சர்வதேச ரீதியாக மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று கூறினர்.
அத்துடன் இந்த நிகழ்வைத் தொகுத்து வழங்கிய தமிழ்ப்பாடசாலைகளின் விளையாட்டுத்துறைச் செயலாளர் திரு. ஜோய் பூரணச்சந்திரன் அவர்கள் “இந்த விளையாட்டு நிகழ்வும் விருதுவழங்கலும் உலகம் முழுவதும் நடைபெற வேண்டும் என்று கூறியதோடு அனைத்துத் தமிழ் விளையாட்டு அமைப்புக்களும் ஒன்றிணைந்து ஒருகுடையின்கீழ் செயற்பட வேண்டும் என்றார்.
அதனைத் தொடர்ந்து பேசிய இளைஞர்கள் விவகார அமைச்சர், டோன் பற்லர், சிறப்புரையாற்றும் போது எவ்வளவோ தடைகளைத் தாண்டி தமிழர்கள் இன்று இந்த நிகழ்வினை நடத்துகின்றார்கள். இது அவர்களது துணிச்சலையே காட்டுகின்றது. நிச்சயமாக 2012 ஆம் லண்டனில் நடைபெற இருக்கின்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் அதிக தமிழர்களைக் காணமுடியும் என்றார். அத்துடன் பல விருதுகளை அவர்கள் பெற தான் வாழ்த்துவதாகவும் கூறினார். அதனைத் தொடர்ந்து பேசிய விளையாட்டுத்துறையின் தலைவர் அருணாசலம் திருக்கேதீஸ்வரன் அவர்கள். தமிழர் சமுதாயத்தில் முதன் முதலாக நடைபெறுகின்ற நிகழ்வு இந்த நிகழ்வாகும். என்று பெருமையடைந்தார்.
அதனைத் தொடர்ந்து கடந்த 2009 ஆண்டு விருதுபெற்றவர்களுக்கான விருதுகள் நடைபெற்றன. அந்த வகையில் 2009 ற்கான சிறுவர் கிரிக்கற் போட்டியின் விருதினை நிஷாந் செல்வகுமார் அவர்களும், 2009 ஆம் ஆண்டுக்கான துடுப்பாட்டப் போட்டியின் விருதினை அருண் ஹரிநாத் அவர்களும், சிறுவர் உதைபந்தாட்டத்திற்கான 2009 ஆண்டு விருதினை வினோதன் சத்தியமூர்த்தி அவர்களும், உதைபந்தாட்டத்திற்கான கடந்த ஆண்டு விருதினை சிமிலன் ஆனந்தஜெயராஜா அவர்களும், கரைப்பந்தாட்டத்தின் 2009 ற்கான ஆண்டு விருதினை தயாளன் சின்னத்துரை. அவர்களும், பெற்றுக்கொண்டனர்.

பொதுவாக புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் சூழ்நிலையில் அவர்களை ஒருமைப்படுத்தக்கூடிய நிகழ்வாகவே இவற்றைப் பார்க்கமுடிந்த்து. அத்துடன் புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் பல்வேறு துறைகளிலும்முன்னேற்றம் அடைந்திருக்கும் நிலையில் அவர்கள் விளையாட்டுத் துறையிலும் தங்களது கவனத்தைச் செலுத்த்த் தொடங்கியுள்ளனர் என்பது இந்நிகழ்வின் மூலம் தெட்டத்தெளிவாகத் தெரிந்த்து. இனிவரும் காலங்களில் புலம்பெயர்ந்து வாழும் விளையாட்டு வீர்ர்கள் தாயகத்தில் சென்று விளையாடவும், தாயகத்தில் உள்ள வீர்ர்கள் புலம்பெயர் தேசத்தில் வந்து விளையாடவும் இது போன்ற விளையாட்டுக்களும், விருதுவழங்கும் நிகழ்வுகளும் உதவும் என நினைக்கின்றேன்.
நன்றி
வீரகேசரி வாரமலர்.
(18.04.10)
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.