
வடக்கு கிழக்கு என்பது தமிழர்களின் பூர்வீக தாயகம். அது எப்பொழுதும் ஒன்றாகவே இணைந்திருக்கிறது. அதை யாரும் பிரிக்க முடியாது. வடக்கு கிழக்கு இணைந்த மாநிலமாக இருக்க வேண்டும் என்பது தமிழ் மக்கள் எல்லோரது எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. இவ்வாறு புளொட் தலைவர் த.சித்தார்த்தன் தீபச்செல்வனுடன் நடத்திய உரையாடலின் போது தெரிவித்தார்.
தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிப்பதற்காக பல சுயேச்சைக் குழுக்கள் அரசால் இறக்கப்பட்டுள்ளன. அதற்காக அரசாங்கம் பல வேலைகளை செய்து கொண்டிருக்கிறது. எங்களுக்கு வாக்களிக்காது விட்டாலும் அவைகளுக்கும் அரசின் தூண்டுதலில் போட்டியிடும் கட்சிகளுக்கும் வாக்களிக்காமல் போட்டியிடும் தமிழ் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். வவுனியாவில் வன்னி அகதி மக்களுக்கு கொடுக்க வேண்டிய நிவாரணப் பொருட்களை தேர்தல் கால பண்டமாக ரிஷாத் பயன்படுத்துகிறார். அது அந்த மக்களுக்கு கிடைக்க வேண்டி நிவாரணம். வவுனியாவில் உள்ள முஸ்லீம் மக்களின் வாக்குகளின் விகிதத்தின்படி அவர்களுக்கு ஒரு ஆசனம் இருக்கிறது. அதை விடுத்து தமிழ் மக்களின் ஆசனங்களை பறிக்கும் நோக்கத்துடன் இப்படியான செயற்பாடுகள் நடக்கின்றன. இதனால் நாம் மக்களுக்கு இப்படிச் சொல்லியிருக்கிறோம்.
மேலும்
http://puthumaisri.blogspot.com/2010/04/blog-post_03.html
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.