.



"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Monday, 19 April 2010

கருணாநிதி: உலகமகாப் பொய்யன்

நீ தமிழனாடா?!


பிரபாகரன் தாயார் தமிழகத்தில் மீண்டும் சிகிச்சை பெற விரும்பினால் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கடந்த 16ம் தேதி இரவு 10.45 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள். பக்கவாத நோய்க்கு சிகிச்சை எடுக்க கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு வந்த அவரை விமானத்தில் இருந்து இறங்கவிடாமல் தடுத்திருக்கிறார்கள் குடியுரிமை அதிகாரிகள். இந்தியாவுக்குள் நுழைவதற்கான உரிமை உங்களிடம் இல்லை என பார்வதி அம்மாளையும் அவருக்கு துணையாக வந்த விஜயலட்சுமி என்ற பெண்ணையும் தடுத்திருக்கிறார்கள் அதிகாரிகள்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்திற்கு பிறகு, தமிழகத்திற்கு சிகிச்சை பெற வந்த பிரபாபரனின் தாயார் பார்வதி அம்மாள் மலேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதன்மீது பேசிய பாமக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சி உறுப்பினர்கள் பார்வதி அம்மாளுக்கு தமிழகத்தில் சிகிச்சை அளிக்க மத்திய அரசிடம் கூறி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் கருணாநிதி,

பார்வதி அம்மாள் சிகிச்சை பெற வருவது குறித்து தமிழக அரசுக்கு எந்தவித தகவலும் இல்லை. விமான நிலையத்தில் ரகசியமாக அவருக்கு ஒரு சிலர் மட்டுமே வரவேற்பு அளிக்க சென்ற நிலை ஏற்பட்டதை பார்க்கும்போது, அந்தோ தமிழகமே என்று நினைக்கத் தோன்றுகிறது.

பார்வதி அம்மாள் வருவது குறித்து மத்திய அரசிடம் மட்டுமே செய்தி தொடர்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நள்ளிரவு 12 மணிக்கு மேல் எனக்கு தகவல் கிடைத்து விமான நிலைய அதிகாரிகளை விசாரித்தபோது, அவர் மலேசியாவுக்கு திருப்பு அனுப்பட்டது தெரிய வந்தது.

மீண்டும் பார்வதி அம்மாள் தமிழகத்தில் மீண்டும் சிகிச்சை பெற அவரது சார்பில் அறிவிப்பு வெளியானால், இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வலியுறுத்த தயார். தேவைப்பட்டால் மத்திய அரசின் விளக்கத்தைப் பெற்று அவையில் தெரிவிக்கவும் தயார் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

(செய்தித் தாள்கள் மூலமாக மறு நாள்தான் தனக்கு முழுவிவரம் கிடைத்ததாகச் சொன்ன அவர், வேறொரு இடத்தில் இரவு 12 மணிக்கு தகவல் கிடைத்ததாகவும், உடனே விமான நிலைய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது அதற்குள் பார்வதியம்மாள் திருப்பி அனுப்பப்பட்டு விட்டதாகத் தனக்கு சொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார். )

பிரபாகரன் தாயார் விவகாரம்: கலைஞரின் முழுமையான சட்டமன்ற பேச்சு

பிரபாகரனின் தயார் பார்வதி அம்மாள் தமிழகத்தில் மீண்டும் சிகிச்சை பெற விரும்பினால், அதைப்பற்றி பரிசீலித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுத தயார் என முதல்வர் கருணாநிதி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். மேலும் பார்வதி அம்மாள் திருப்ப அனுப்பப்பட்டதற்கு முந்தைய அதிமுக அரசு மத்திய அரசுக்கு எழுதிய கடிதமே காரணம் என்றும் முதல்வர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்திற்கு பிறகு, தமிழகத்திற்கு சிகிச்சை பெற வந்த பிரபாபரனின் தாயார் பார்வதி அம்மாள் மலேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதன்மீது பேசிய பாமக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சி உறுப்பினர்கள் பார்வதி அம்மாளுக்கு தமிழகத்தில் சிகிச்சை அளிக்க மத்திய அரசிடம் கூறி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் கருணாநிதி,

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இதுபற்றி என்னுடைய கருத்துக்களைக் கூறுவதற்கு முன்பு, கடந்த கால வரலாற்றில் சில துளிகளையாவது இந்த அவைக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

இந்திய அரசினுடைய உத்தரவு முதலில் திருமதி பார்வதி அம்மாள் சிகிச்சைக்காக விசா பெறலாம் என்று அமைந்து, அந்த விசாவினைப் பெற்று அவர்கள் சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது, மத்திய அரசினுடைய அதிகாரிகளே சிலர், விமான நிலையத்தில் விமானத்திற்குள்ளே நுழைந்து “தவறுதலாக உங்களுக்கு விசா வழங்கப்பட்டிருக்கிறது. ஆகவே, நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டும்'' என்று கூறி எங்கே மலேசியாவிலிருந்து வந்த அவர்களை, மலேசியாவிற்கே திரும்ப அனுப்பியிருக்கிறார்கள்.

இது பற்றிய முழுத் தகவல் மறுநாள் காலையிலேதான் விவரமாகப் பத்திரிகைகளைப் படித்து நான் தெரிந்து கொள்ள முடிந்தது. இதேபோல ஒரு சம்பவம் 23 8 1985 அன்று நம்முடைய தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டுமென்ற ஒரு உத்தரவு தந்தை செல்வா அவர்களுடைய மகன் சந்திரஹாசன், பாலசிங்கம், சத்தியேந்திரா ஆகியோரை நாட்டை விட்டு வெளியேற்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது. அந்த ஆணையும் அன்றிருந்த மாநில அரசின் வேண்டுகோளின்படிதான் இடப்பட்டது என்று கூறப்பட்டது. அதில் உண்மை எதுவோ எனக்குத் தெரியாது. ஆனால், ஆணை பிறப்பிக்கப்பட்டு அவர்கள் விமானம் ஏறுகிற நிலையில், எங்களுக்குச் செய்தி கிடைத்து உடனடியாக “டெசோ'' அமைப்பின் சார்பாக அப்பொழுதுதான் டெசோ தொடங்கப்பட்டது. நான், வைகோ, நெடுமாறன், தமிழர் தலைவர் வீரமணி, பேராசிரியர் ஆகியோரெல்லாம் இருந்த அமைப்பு டெசோ. 23 ஆம் தேதி முடிவெடுத்து உத்தரவிடப்படுகிறது. அந்த "டெசோ" அமைப்பின் சார்பாக 25 8 1985 அன்று சென்னையிலே ஒரு கண்டனப் பேரணி நடத்தினோம். தொடர்ந்து 30 8 1985 அன்று ரெயில் நிறுத்தப் போராட்டம் என்று அறிவித்தோம். அதனையொட்டி 5000 பேர் அன்றைக்கிருந்த ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்டார்கள். உடனே மத்திய அரசு சந்திரஹாசன் மீதான உத்தரவைத் திரும்பப் பெற்றது. அதற்குப் பிறகு தொடர்ந்து 7 10 1985 அன்று பாலசிங்கம் மீதான நாடு கடத்தும் உத்தரவையும் திரும்பப் பெற்றது.

அந்தக் காலத்திற்கும், “டெசோ'' அமைப்பின் சார்பாக எல்லோரும் சேர்ந்து போராடியதற்கும் தனித்து இப்பொழுது மற்றவர்களுக்கெல்லாம் பெயர் வந்து விடக் கூடாது என்பதற்காக, இரகசியமாக இந்த விமான நிலைய வரவேற்பை அளித்ததற்கும் உள்ள வேறுபாட்டை நீங்கள் உணர்ந்தால் “அந்தோ தமிழர்களே!'' என்று நம்மை அறியாமல் நாம் சொல்லத்தான் நேரிடுகிறது என்பதை முதலிலே குறிப்பிட விரும்புகிறேன்.

திருமதி பார்வதி அம்மாள் தமிழகத்திற்கு வருவது பற்றி அவர்களிட மிருந்தோ அவர்களுக்கு துணை புரிய விரும்புவர்களிடமிருந்தோ தமிழக அரசுக்கு எந்தவிதமான கடிதமோ தகவலோ நேரடியாக வரவே இல்லை. மத்திய அரசுக்கும் பார்வதி அம்மாளுக்கும் இடையே தான் இந்தப் பயணம் பற்றிய செய்தி தொடர்பு இருந்திருக்கிறதே தவிர தமிழக அரசுக்கு இதிலே எந்தவிதமான சம்மந்தமும் கிடையாது. மறுநாள் காலையிலே வந்த “இந்து'' பத்திரிகையிலே கூட “ஞயசஎயவாண், அடிவாநச டிக வாந ளடயண்ய் டுகூகூநு டநயனநச ஞசயயெமயசயய், டயனேநன யவ வாந ஊட்நய்யேண் ஹசையீடிசவ லெ ய ஆயடயலளயைய் ஹசைடண்நேள கடண்பாவ. ழடிறநஎநச, ஐஅஅபைசயவண்டிய் டீககண்உயைடள கடிடடடிறண்பே ண்ளேவசரஉவண்டிளே கசடிஅ வாந ஊநவேசந, னநயீடிசவநன ட்நச வடி ஆயடயலளயை லெ வாந ளயஅந கடண்பாவ, ண்அஅபைசயவண்டிய் ளடிரசஉநள ளயனை.”

என்று தான் தெளிவாகச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமேயானால், 5 5 2003 அன்று தமிழக அரசின் சார்பில் மத்திய உள்துறைக்கு ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் பத்தி 2 வருமாறு :

“Sri Lankan Tamils Velu Pillai and Parvathi Ammal may return to India. Their re-entry into India may not be desirable in view of their association with the LTTE Leader and Tamilar Desiya Iyakkam, banned organisations. Hence, the personal particulars of the above Sri Lankan Tamils are sent herewith to place their names under Black List/Prior Approval Category List, to prevent their re-entry into India through legal/illegal means.”

இவ்வாறு கடிதம் எழுதி, அதன் காரணமாக தடை விதிக்க ஏற்பாடு செய்தவர்கள் எங்கே அந்த உண்மை இங்கே வெளியிடப்பட்டு விடும் என்ற காரணத்தாலோ என்னவோ மிக முக்கியமான இந்தப் பிரச்சினையில் எல்லா கட்சிக்காரர்களும் குரலெழுப்புகின்ற இந்தப் பிரச்சினையில் அவர்கள் மாத்திரம் வராமல் இருந்து விட்டார்கள் என்பதைப் பார்த்தாலே நீங்கள் புரிந்து கொள்ளலாம். அவர்கள் தான் இன்றைக்கு மாபெரும் கூட்டணியிலே இருக்கிறார்கள் – அது தமிழர் கூட்டணி என்றும் சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட நண்பர்கள் இந்தப் பிரச்சினையில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால், இது முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசாங்கத்திற்குத் தான் உரிய பிரச்சினை என்பதைப் போல ஏடுகளில் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். நிச்சயமாகச் சொல்கிறேன். இரவு 12 மணிக்கு விமான நிலையத்திலே இப்படிப்பட்ட ஒரு தகராறு நடைபெறுவதாக எனக்குச் செய்தி கிடைக்கிறது. நான் விமான நிலையத்திற்குத் தொடர்பு கொள்கிறேன். அந்த அம்மையார் திரும்ப அனுப்பப்பட்டுவிட்டார்கள் என்று அடுத்த செய்தி எனக்குக் கிடைக்கிறது.

ஆனால் இந்தச் செய்தியை முறையாக உரிய வகையில் எனக்குச் சொல்லப்படவில்லை. அரசில் யாருக்கும் சொல்லப்படவில்லை. அதன் காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு விட்டார்கள். அப்படித் திருப்பி அனுப்பப்பட்டவர்கள் மலேசியாவிற்கே, அதாவது கோலாலம்பூருக்கே திரும்பச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் அங்கே வைத்திய வசதி பெறுவதாக பத்திரிகைகளிலே செய்தி வந்திருக்கிறது. அவர்கள் இல்லை, நான் மீண்டும் தமிழகத்திற்குத் தான் சென்று வைத்திய வசதி செய்து கொள்ள விரும்புகிறேன் என்று அறிவிப்பார்களானால் நம்முடைய அருமை நண்பர் சுதர்சனம், கோ.க. மணி அவர்கள் சிவபுண்ணியம் ரவிக்குமார் மற்றவர்கள் எல்லாம் குறிப்பிட்டதைப் போல அதைப் பரிசீலனை செய்து மத்திய அரசுக்கு அது பற்றி எழுத மாநில அரசு தயாராக இருக்கிறது என்பதை நான் இங்கே தெரிவித்துக் கொள்ளவிரும்புகிறேன்.

மத்திய அரசின் பதிலைப் பற்றி அது என்ன கூறுகிறது என்பதைப் பற்றி அது பற்றிய விளக்கம் தேவைப்பட்டால் – அந்த நேரத்தில் பதில் வந்த பிறகு அதனை இந்த அவைக்குத் தெரிவிப்பேன் என்று கூறி இந்த அளவில் இந்தப் பிரச்சினையை முடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

*****************************************************************
முகப்புத்தகக் குழுமம்
தமிழினத்துரோகி கருணாநிதி
Join
Facebook group


****************************************************************

5 comments:

  1. Dear Surya
    nice post.

    Can i contact u by e mail? i want to know how you have created the "SCROLLING MARQU" below your heading .. to add it in my friends blog.

    please mail me

    ragumuthu@gmail.com

    thanks and regards
    ragu

    ReplyDelete
  2. முதல்வர் என்பதால் அல்ல, வயதுக்காவது மரியாதை கொடுங்கள். இப்படி கண்ணியம் இல்லாமல் நீங்கள் எழுதுவதனால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது.

    ReplyDelete
  3. தமிழன்20/4/10 06:22

    இவனுக்கு எல்லாம் மரியாதை... சீ தூ... எத்தனையோ வயதுபோனவர்களைத் துன்படுத்தி இவன் வாழ்கிறான்.

    ReplyDelete
  4. சரியான பதிவு, வயதை வைத்து யாருக்கும் மரியாதை கிடையாது, அவர்களின் செயலை வைத்துதான் மரியாதை.

    ReplyDelete
  5. கண்ணியம் நிறைந்த கரிநாய்நிதிக்கு.....ஐயோ! ஐயோ!! யாருக்குச் சொல்லி அழ...

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் Holykural



Kural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis