."ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thursday, 10 June 2010

பிள்ளைத் தமிழ்

வையவிரிவு வலையும் தமிழ்க் குழந்தைகளும்

ஒரு காலத்தில் தமிழ்க் குழந்தைகளுக்கு எலிப்பொறி என்றால் சட்டெனப்புரியும். இந்தக்காலத்து குழந்தைகளுக்கோ கணிப்பொறி என்றால்த்தான் உடனே புரிகிறது. கணனி என்பது அவ்வளவு பிரபலமாகிவிட்டது இப்போது! நாம் கணனி உலகத்தில் வாழ்கிறோம். குழந்தைகள் விளையாடும் 'நினெண்டோ Ninendo' செயலிகள் கணனியின் செயற்பாடுதான். கையில் நினெண்டோ பொறிகளை வைத்துக்கோண்டு குத்துச்சண்டை முதல் கால்பந்தாட்டம் வரை உலகின் எல்லா விளையாட்டுக்களையும் விளையாட முடியும்.

'நினெண்டோ Ninendo' காலம் முடிந்து கையடக்க நாய், பூனை, மீன் முதலான வளர்ப்புப்பிராணிகளைக் கையில் வைத்துக்கொண்டு அலையும் காலமொன்றும் வந்து போனது. கணனிப் பொறியான இதனை வைத்து மனிதன் உருவாகுவதற்கு முன் வாழ்ந்து மறைந்த டைனசார்களைக்கூட வளர்க்க முடிந்தது.


டைனசார்களைப் பையில் போட்டுக் கொண்டு அலைவதில் குழந்தைகளுக்கு மட்டில்லா மகிழ்ச்சிதான். இவையெல்லாம் கணனியை விளையாட்டு ஊடகமாக பயன்படுத்தும் முறையாகும். ஆனால், மேசைக் கணனி செயல்முறைக்கு வந்த பின் கணிப்பொறி கல்வி புகட்டும் ஊடகமாக மாற்றம் கொண்டது. கணனி செயலிகள் மூலம் மொழி கற்றுக் கொடுக்கவும் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் சொல்லிக் கொடுக்கவும் ஏதுவானது.

உலக வைய விரிவு வலை கணனிக்குள் செயல்படத்தொடங்கியது தகவல் புரட்சியின் உச்ச கட்ட வளர்ச்சியாகும். மாணவர்கள் நூலகத்திற்குச் சென்று வேண்டிய தகவல்களைச் சேகரிப்பது போய் நூலகமும் அதுகொண்ட தகவல்களும் வைய விரிவு வலைவழியாக வீட்டின் மேசையிலிருக்கும் கணனி திரைக்கு வந்தன. பல மேலை நாடுகளில் தொலை தூரக் கல்வியென்பது கணனி வழியாகச் செயல் பாட்டிற்கு வந்தது. தகவல் புரட்சி வெடித்த போது தான் பண்டைய தமிழ் கிழவி அவ்வை சொன்ன சொல்லான "கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு" என்பது பலருக்குப் புரிந்தது.


வைய விரிவு வலையில் நுழைந்து தகவல் சேகரிப்பதை "வலை சருக்கல்" என்று சொல்வார்கள். உதாரணமாக, இசை என்ற தலைப்பில் தேடத்தொடங்கினால் உலகில் உள்ள அத்தனை வகையான இசைகளுக்கும் வழித்தடங்கள் கிடைக்கும். நாம் தேடுவது என்ன என்ற தெளிவு இல்லாத வரை வைய விரிவு வலை மாயா பƒ¡ர் போல் எங்கெங்கோ இட்டுச் செல்லத் தொடங்கும். இதை வேறொரு வகையில் சொல்வதானால் பள்ளிக்குச் செல்லும் மாணவன் கழைக்கூத்தைப் பார்த்துக் கொண்டு பாடத்தை விட்ட கதையாகச் சொல்லலாம். ஏனெனில், வார்த்தைகளுக்குப் பல பொருள் இருப்பதாலும் உலகமென்பது நல்லதும் கெட்டதும் நிறைந்திருப்பதாலும் படிக்கக் கிளம்பிய மாணவன் ஏதாவது ஒரு பண்டக சாலையில் சாமானை வாங்கிக் கொண்டோ, நுழையக் கூடாத பெரியவர்கள் வி„யங்களில் மயங்கி நின்று கொண்டோ இருக்க வேண்டியது வந்துவிடும். எனவேதான் வைய விரிவு வலையிலும் சில கட்டுப் பாடுகளைக் கொண்டுவர வேண்டிய அவசியம் தேவைப் படுகிறது. இதை அமெரிக்க ƒனாதிபதி பில் கிளிண்டன் சட்டமாகவே கொண்டு வந்திருக்கிறார்.


கணனிக் கல்வியில் பேசுவது போலேயே பாடல்களையும் உரையாடல்களையும் பதிவு செய்து ஆசிரியருக்கு அனுப்பி விடை பெற்றுக் கொள்ள முடியும். மொழி கற்பவற்கு இது மிகவும் அவசியமான ஒன்றாகும். தமிழ் பேசவும் கற்கவும் விரும்புவோர்கள் கீழ்கண்ட வலைப்புலத்தில் இதன் செயல்பாட்டை அறியலாம்.

http://www.iupui.edu/~rravindr/tamil.html

தமிழை எழுதவும் கற்கவும் விரும்புவோர்கள்

http://www.tamil.net/learn-tamil/

http://www.sas.upenn.edu/~vasur/project.html

இந்த வலைப்புலங்கலினால் பயன் பெறலாம்.

கணனியில் தமிழ் கல்வி என்பது இன்னும் மழலை பருவத்தில் தான் உள்ளது. கணனி பாவிக்கும் பழக்கம் தமிழர்கள் இடையே பரவலாக்கப் படும் பொழுது தமிழ் கல்வி ஒவ்வொரு வீட்டிலும் தவழ வாய்ப்புண்டு. இசை, சமயம், சினிமா இவை தமிழ் வைய விரிவு வலைப்புலங்களில் தாராளமாகக் காணக் கிடக்கின்றன. குழந்தைகளை முன்னிருத்தி சைவ சமயச் சிந்தனைகளைப் புகட்டுவதில் இரண்டு வலைபுலங்கள் முன்னனியில் இருக்கின்றன. ஒன்று

http://www.malaysia.net/people/subas/ என்பதும் மற்றொன்று

http://www.gold.ac.uk/~siva என்பதுமாகும்.

குழந்தைகளுக்கென்று ஒரு இலக்கியப் பக்கம் உருவாக்கும் முயற்சி கீழ்கண்ட வலைப்புலத்தில் காணக் கிடைக்கின்றது.

பெரியவர்களுக்கென்று தமிழிலும் ஆங்கிலத்திலும் செயல்படும் தமிழ் இணையத்தில் (http://www.tamil.net / ) அவ்வப்போது சிறார்களின் குரலும் கேட்பதுண்டு.

உலகத் தமிழ் மக்கள் அனைவரும் கூடும் சங்கமமாக வைய விரிவு வலை மாறும் காலத்தில் குழந்தைகளுக்கென்று பிரத்தியேக நிழல் வெளிப் பள்ளிகள் உருவாகும். குழந்தைகள் இலக்கியமும் இசைப் பள்ளிகலும் சமய வகுப்புக்களும் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் தமிழில் தவழத்தொடங்கும். இந்த நிகழ்வு நாம் எதிர்பார்ப்பதை விட விரைவில் நடந்தேரும் சாத்தியக் கூறுகள் விரைவில் உள்ளன. அப்போது பாரதி சொன்ன வார்த்த்கையை மாற்றிப் பாட வேண்டி வரும். "சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் கொணர்ந்து இங்கு சேர்ப்பீர்" என்பது போய், எட்டுத் திக்கின் கலைச் செல்வங்களும் கணனி வழியில் வீட்டிற்கு தானே வந்து சேரும். அது தமிழின் பொன்னாள்.

நன்றி:
http://www.subaonline.net/nakannan/tamilkudil/ChildrenContent.html
youTube

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் HolykuralKural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis