கொரிய மொழியில் 500 தமிழ் வார்த்தைகள் : கனடா நாட்டு அறிஞர் ஜூங்நாம் கிம்
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கில்,கனடா நாட்டில் டெரான்டோ நகரை சேர்ந்த ஜூங்நாம் கிம் கொரிய மொழியில், பல வார்த்தைகள் தமிழ் சாயலில் இருப்பதாக, தம் தமிழாய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் இரண்டாம் நாளான (24ந் தேதி) நடைபெற்ற ஆய்வரங்கத்தில், பல்வேறு நாட்டு அறிஞர்கள் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தனர். இதில், கனடா நாட்டில் டெரான்டோ நகரை சேர்ந்த ஜூங்நாம் கிம் எனும் அறிஞர் தமிழாய்வுக் கட்டுரைகளை சமர்பித்தார். இவர், தி கியாங்யாங் செய்தி நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.
கொரிய மொழியில், தமிழ் வார்த்தைகள் கலதிருப்பது பற்றி ஜூங்நாம் கிம் குறிப்பிடுகையில்,
“தென்கொரியா நாட்டைச் சேர்ந்த நான், தற்போது கனடாவில் வசிக்கிறேன். கொரியா மொழியில் தமிழ் வார்த்தை கலந்திருப்பதை ஆய்வு செய்து, 500 வார்த்தைகளை கண்டறிந்துள்ளேன்.
கொரிய மொழியில், பல வார்த்தைகள் தமிழ் சாயலில் இருக்கிறது. தமிழில் வயிறு என குறிப்பிடுகிறார்கள். ஆனால், கொரிய மொழில் வயிற்றுக்கு பை. தமிழிலும் ‘வயிற்று பை’ என மாற்று பெயர் உண்டு.
உரத்தை, கொரிய மொழியிலும் உரம் என்றே அழைக்கிறோம். கண்ணுக்கு நுகண், மூக்குக்கு கோ, பல்லுக்கு இப்பல், புல்லுக்கு புல், கொஞ்சம் என்பதற்கு சொங்கும் என அழைத்து வருகிறோம்.
கொரியாவில் குழந்தைகளை கொஞ்சுவதற்கு பயன்படுத்தும் வார்த்தைகளும் தமிழ் மொழி சாயலில் தான் இருக்கிறது.
தூரி தூரி, சாஞ்சுக்கோ, கொஞ்சு கொஞ்சு, ஜம்ஜம், அபூபா, குக்குக்கூகூ, தேரிடா... என கொரியா மொழியில் குழந்தைகளை கொஞ்சுகிறோம். இது தமிழ் மொழி கொஞ்சலின் சாயலாக இருக்கிறது. எப்படி இப்படி வார்த்தை ஒற்றுமை அமைந்தது ஏன் என இன்னும் தெளிவக தெரியவில்லை.
இவ்வாறு, தமிழின் சாயலில் பல கொரிய மொழி வார்த்தைகள் இருப்பதால், கொரியா தெரிந்தவர் எளிதில் தமிழ் கற்க முடியும் என்ற நிலையிருக்கிறது” எனறு அவர் குறிப்பிட்டார்.
எழுத்து வடிவங்கள் சாட்சி தமிழில் பிறந்ததே கொரிய மொழி : கொரிய விஞ்ஞானி தகவல்
http://www.dinakaran.com/semmozhi/semmozhinewsdetails.aspx?id=217&id1=News
“தமிழ் மொழியில் இருந்து பிறந்தது தான் கொரிய மொழி. அங்குள்ள எழுத்து வடிவங்கள் இதனை புலப்படுத்துகின்றன,“ என தமிழ் இணைய மாநாட்டில் ஆதாரங்களுடன் விளக்கினார் கொரிய நாட்டு விஞ்ஞானி ஒருவர். செம்மொழி மாநாட்டில் தமிழ் மென்பொருள் மற்றும் இணணய பக்கங்கள் உருவாக்கியவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கொரியா நாட்டின் விஞ்ஞானி கண்ணன், கொரியா நாட்டுக்கும், தமிழகத்துக்கும் உள்ள தொடர்பு குறித்து விளக்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழில் இருந்து பிறந்தது தான் கொரிய மொழி. அங்குள்ள எழுத்து வடிவங்கள் இதனை தெளிவுபடுத்துகின்றன. கொரிய மொழி வரி வடிவம் பெறாத நேரத்தில், தமிழின் வரிவடிவத்தை கொண்டே கொரிய மொழியின் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரங்கள் உள்ளன. மொழி ஒற்றுமையை போன்று பல்வேறு ஒற்றுமை தமிழ், கொரியாவுக்கிடையே உள்ளது. பாண்டிய நாட்டின் இலச்சினையான மீன் இலச்சினைகள் கொரியாவில் பயன்படுத்தப்படுகின்றன. சொல்லா எனும் மாவட்டம் கொரியாவில் உள்ளது. இது சோழா எனும் பெயரின் திரிந்த சொல்லாகவே கருத தோன்றுகிறது. இதேபோல், உணவு முறைகளிலும் கொரியாவுக்கும் தமிழுக்கும் தொடர்புள்ளது. தோசை, கொழுக்கட்டை உள்ளிட்ட தமிழர்களின் உணவுகள் அங்கு பிரதான உணவுகளாக உள்ளது. அதேபோல், பெருமாள் கோயிலும் அங்குள்ளது. தமிழர்களின் பழக்க வழக்கங்கள் அங்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, தமிழர்களின் வழிவந்தவர்களாகவே கொரியர்கள் கருதப்படுகின்றனர். பலர் இதை ஒப்புக்கொண்டுள்ளனர். இது பற்றிய மேலும் ஆதாரங்களை திரட்ட இது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண் டும். இவ்வாறு கண்ணன் பேசினார். இந்த நிகழ்வின் போது, தமிழ் மற்றும் கொரிய மொழிகளுக்கு உள்ள தொடர்பு மற்றும் மக்களுக்குள்ள தொடர்புகள் குறித்த ஆதாரங்களை படங்களாக கொண்டு விளக்கினார்.
தமிழுடன் கொரிய மொழிக்கு தொடர்பு : தென்கொரியா விஞ்ஞானி பெருமிதம்
http://tamil.dinamalar.com/wctc_detail.asp?id=26231
கோவை : ""தமிழுக்கும், கொரியா நாட்டு மக்கள் பேசும் "ஹங்குல்' மொழிக்கும் தொடர்பு உண்டு,'' என, உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்க வந்துள்ள, தென்கொரிய விஞ்ஞானி நாராயணன் கண்ணன் தெரிவித்தார்.
செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கத்தில் பங்கேற்க கோவை வந்துள்ள, தென்கொரியாவைச் சேர்ந்த எண்ணெய் ஆய்வு திட்ட விஞ்ஞானி நாராயணன் கண்ணன் "தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டி: எனது சொந்த ஊர் மதுரை, திருப்புவனம். ஏழு ஆண்டுகளுக்கு முன் தென்கொரியா சென்று, அங்கு எண்ணெய் ஆய்வுத் திட்ட விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறேன். கடுமையான பணி நெருக்கடிக்கு மத்தியிலும், தமிழின் மீதான தீராத காதல் கொண்டிருக்கிறேன். தென்கொரியாவில் வசிக்கும் தமிழர்களை ஒருங்கிணைத்து,"தமிழ் மரபு அறக்கட்டளை' என்ற அமைப்பை நடத்தி வருகிறேன். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி வாழும் தமிழர்களுடன் தொடர்பு கொண்டிருக்கிறோம். "தமிழில் மின் இலக்க வடிவ முறை (டிஜிட்டல்)' குறித்த ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க, தமிழ் மாநாட்டுக்கு வந்துள்ளேன். உலகத்தமிழர் ஒன்றிணையும் இந்த மாநாட்டில் பங்கேற்பதை மிகப்பெருமையாக கருதுகிறேன். உலகம் போற்றும் தமிழ் இலக்கியங்கள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகளிலுள்ள அனைத்து தகவல்களையும் இணையதளத்துக்கு மாற்ற வேண்டும், என்பது எனது விருப்பம். தென்கொரிய மக்களின் "ஹங்குல்' மொழிக்கும், தமிழுக்கும் எழுத்து வடிவ தொடர்பு உண்டு.
ஆரம்ப காலத்திலிருந்து சீன மொழி பேசி வந்த கொரிய மக்கள், 16ம் நூற்றாண்டு முதல் "ஹங்குல்' எழுத்துவடிவ மொழியை தாய்மொழியாக ஏற்றனர். அதன்பின், கொரிய மக்களின் பொருளாதார முன்னேற்றம் வேகமெடுத்தது; தற்போது, கொரிய மக்களில் 99 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்று திகழ்கின்றனர். இதன் காரணமாக, உலகப் பொருளாதார வளர்ச்சியில் கொரியா, 19வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இவற்றுக்கு அடிப்படையாக அமைந்ததே, எழுத்து சீர்திருத்தம் தான். "ஹங்குல்' எழுத்து முறை வந்த பிறகே, அந்நாட்டினர் சமூக, பொருளாதார ரீதியாக முன்னேறியுள்ளனர். மொழியை முன்னிறுத்தியே எந்த ஒரு நாடும் முன்னேறும் என்பதற்கு, கொரியா சாட்சி. எனவே, மொழிப்பற்றை ஒவ்வொரு தமிழரும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு, நாராயணன் கண்ணன் தெரிவித்தார்.
கொரிய மொழிக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள ஒற்றுமையை பார்க்கவும் படிக்கவும் மிக அருமையாக இருந்தது. மேலும் இது போல் வேற்று நாட்டு மொழியிலும் தமிழின் பங்கு எவ்வளவு உள்ளது என்பது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் என்னுள் தோன்றி உள்ளது.
ReplyDeleteமேலும் உங்களுடைய ஜாதகம், திருமண பொருத்தம், எண் கணிதம் மற்றும் எதிர்காலம் பற்றி
அறிந்து கொள்ள www.yourastrology.co.in
என்ற இணையதளத்தை பாருங்கள் மிகவும் பயனாக இருக்கும்.