பொருண்மிய வலுவிழந்த இனம் என்றும் அடிமைகளாக மட்டுமல்ல பிச்சைக்காரர்களாகவும் காலப்போக்கில் இன அடையாளங்களையும் இழப்பர்.
பொருளாதாரப் பிரச்சினைகள் பற்றி மேலெழுந்தவாரியாக பலரும் எழுதுகிறார்களே யன்றித் தீர்வையும், நம்மத்தியில் இலைமறை காயாக உள்ள பொருண்மிய நிபுணர்களைக் கூட்டி மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கும் யாரும் முன் வருவதில்லை. இந்தக் குறை தீர்க்கப்படவேண்டும். கிழக்கில் மூலதனத்தை இழந்த மக்கள் புழைப்புக்காக வாழ்வாதாரமான மண்ணை அரை விலைக்கு விற்பதாக மட்டக்களப்பைச் சேர்நத நண்பர் சில நாட்களுக்கு முன் தெரிவித்தார். மிகுந்த வேதனை தந்தது. இதை மாற்றியே தீர வேண்டும். பொருண்மிய வலுவிழந்த இனம் என்றும் அடிமைகளாக மட்டுமல்ல பிச்சைக்காரர்களாகவும் காலப்போக்கில் இன அடையாளங்களையும் இழப்பர். ஒன்றுபட்டு எமது மக்களின் பொருண்மியத்தைக் கட்டியெழுப்புவோம். குறைகளைப் பின்தள்ளி நிறைகாண உழைப்போம். புலத்தில் மக்கள் உதவி செய்ய விரும்புகிறார்கள். “வணங்காமண்” திட்டம் அறிவிக்கப்பட்ட போது பணமும் பொருளையும் புலத்து மக்கள் வாரி வழங்கினார்கள். “வணங்காமண்” கப்பலும் வந்த உதவிகளும் சிறீலங்கா அரசால் முடக்கப்பட்டது மீதிப் பணங்கள் இங்குள்ள “தமிழ் முதலைகளால்” மடக்கப்பட்டுவிட்டது. மக்கள் குழப்பத்திலுள்ளார்கள். அவர்கள் உதவி செய்யவிரும்புகிறார்கள். யாரை நம்புவது? யார் மூலம்? யார் செய்யும் தொண்டுகள் பற்றி வெளிப்படையாக உள்ளனர்? இப்படி நம்பிக்கையான அமைப்பை பொருண்மிய நிபுணர்களின் உதவியுடனும் கட்டியெழுப்புவீர்களானால் மக்கள் நிச்சயமாக உதவி செய்வார்கள். இதைத் தாங்கள் அல்லது தங்கள் அமைப்பு செய்தல் வேண்டும். தங்கள் பணிகளையும் தேவைகளையும் விரிவான ஆய்வுக் கட்டுரையாக எழுதியனுப்புங்கள். நாம் உங்களுக்குத் தோள் கொடுக்கின்றேம். நன்றி.
Facebook Group முகநூல் குழுமம்
http://www.facebook.com/group.php?gid=115523251489
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.