."ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Tuesday, 6 July 2010

சத்திய சாயி அவதாரா?! மந்திரவாதியா?! சாத்தானா?!


ஸ்ரீ சத்ய சாயி பாபா (Sathya Sai Baba, தெலுங்கு: సత్య సాయిబాబా, பிறப்பு: நவம்பர் 23, 1926) தென்னிந்திய ஆன்மிக குரு. இவரது அடியார்களினால் "இறை அவதாரம்" எனப் போற்றப்படும் இவர் மதப் பரப்புனரும், சித்தரும் ஆவார்.

இவரது ஏறத்தாழ 1200 சத்ய சாய் அமைப்புகள் 114 மையங்களில் உலகெங்கிலும் செயல்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது. இவரின் வழிநடப்பவர்கள் சுமார் 60 இலட்சம் பேர் (1999 இல்) எனக் கணக்கிடப்பட்டுள்ளது. உலகெங்கிலும் 100 கோடி அடியார்கள் உள்ளனர் என்றும் கூறப்படுகின்றது. இவரின் சுய அறிவிப்பின் மூலம் இவர் சீரடி சாயி பாபா வின் மறு அவதாரம் என இவரின் ஆதரவாளர்களால் நம்பப்படுகின்றது.

ஆந்திராவில் உள்ள புட்டபர்த்தி எனும் கிராமத்தில் பிறந்தார். அவர் தாயாரின் பெயர் ஈசுவரம்மா, தந்தை பெத்தவெங்கம ராஜு ரட்னாகரம். பகவான் பாபா இவர்களுக்கு 8வது குழந்தையாகப் பிறந்தார். பிறப்பதற்கு முன்பிருந்தே அவர் தனது மகிமைகளை வெளிப்படுத்தினார். தெரு நாடகத்தில் ஈடுபாடு கொண்டிருந்த அவர்கள் வீட்டில் இருந்த இசைக் கருவிகள் தானாகவே இசைத்தன.

சத்ய நாராயண விரதம் இருந்து பிறந்ததால், இவருக்கு சத்ய நாராயணன் என பெயர் சூட்டினர். இவரின் பிறப்பு சாதாரண மனிதர்களை போல் இல்லை, அதாவது பிரசவத்தின் மூலமாக இல்லாமல் பிரவேசமாக இருந்தது. ஒரு முறை தாயார் ஈசுவராம்பா கிணற்றில் தண்ணீர் இறைத்துக்கொண்டிருந்த போது வானில் இருந்து நீல வண்ண பந்து ஒன்று வேகமாக வந்து அவரின் வயிற்றில் புகுந்ததாகவும் அதன் பின் தான் கருவுற்றதாகவும் பின் ஒரு நாளில் அவர் கூறினார்

சத்திய சாயி பாபா மற்றும் அவரது பக்தர்கள் நூற்றுக்கணக்கான சமூக சேவை நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள். கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், சமூக சேவை நிறுவனங்கள் எனப பல வழிகளில் இச்சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்தியா மட்டுமல்லாது, உலகின் பல பாகங்களிலும் இவை இயங்குகின்றன. விழுமிய சமூகம் (Sociocare), விழுக்கல்வி (Educare), விழுமிய மருத்துவம் (Medicare) விழுமிய குடிநீர் (aquacare) எனப் பல துறைகளில் அவரின் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

அவரது நிறுவனம் உலகம் முழுவதும் 136 நாடுகளில் மக்கள் பணியில் ஈடுபட்டுக்கொண்டுள்ளது.

Sociocare எனும் விழுமிய சமூக உருவாக்கத்தில் - இவரது நிறுவனம் உலகின் பல இடங்களில் மக்களின் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டிருக்கின்றது. சமீபத்தில் ஒரிசாவில் நடந்த வெள்ளத்தில் வீடுகள் இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன.

Educare எனப்படும் விழுக்கல்விப் பாடத்திட்டத்தின் மூலம் - சத்திய சாயி நிறுவனம் உலகின் பல நாடுகளில் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் பயன்பெறும் வகையில் பல கல்வி அமைப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றது. இவை அனைத்தும் மாணவர்களிடம் இருந்து எந்த விதமான கட்டணங்களும் பெறுவதில்லை.

Medicare - எனப்படும் விழுமிய மருத்துவத்தினைத் தொண்டுப்பணியாகச் சத்திய சாயி நிறுவனம் உலகின் பல நாடுகளில், சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் பயன் பெறும் வகையில் பல இலவச மருத்துவ முகாம்களையும், பல இலவச மருத்துவமனைகளையும் நடத்திவருகின்றது.

அது தவிர, மக்களின் மனங்களில் இவ்வாறான மேலான சேவை அல்லது தொண்டு எண்ணங்களை வளர்ப்பதற்காக அவரின் நிறுவனங்கள் பல ஆன்மிகச் செயல்பாடுகளில் ஈடுபடுகின்றன. அனைத்து மதக் கொண்டாட்டங்களையும் அதன் உட்கருத்தை உணர்ந்து கொண்டாடுவது, பஜனை எனப்படும் போற்றிசை, நகர சங்கீர்த்தனம்,மதங்களின் உண்மைத் தத்துவத்தைப் புரிந்து கொள்ள ஆன்மீக வாசகர் வட்டம் என்கின்ற ஆய்வுவட்டம் போன்ற பல திருச்செயல்கள் உலகெங்கும் நடைபெறுகின்றன. இவர் தன் கொள்கைகளை எழுதியும், பேசியும் பரப்பி வருகின்றார்.

அவருடைய திருவாய்மொழியானது, 'சத்ய சாய் ஸ்பீக்சு' என்று ஆங்கிலத்தில் கிட்டத்தட்ட 40 தொகுதிகள்(வால்யூம்கள்) வெளிவந்துள்ளன. மேலும், ஆன்மீகக் கருத்துக்களின் விளக்கமாகப் பலநூல்களை அவர் தொடர்ந்து மாத இதழான சனாதனசாரதி என்ற மாதப்பத்திரிகையில் எழுதிவருகின்றார். அப்பத்திரிகையில் விளம்பரங்கள் எதுவும் வெளிவருவதில்லை. வெறும் ஆன்மீகச்செய்திகளே வெளிவரும். அவரின் சொற்பொழிவுகளும் தொடர்ந்து அவ்விதழில் வெளிவரும். இந்தச் சனாதன சாரதி மாத இதழானது, இந்திய மொழிகளில் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி முதலிய பல மொழிக்ளில் வெளிவருகின்றது. உலகின் பெரும்பாலான மொழிகளிலும், சப்பானியம், ருசியம், செருமானியம், கிரேக்கம், போன்ற பல மேலைநாட்டு மொழிகளிலும் வெளிவந்துகொண்டுள்ளது. இவ்விதழின் தனிச்சிறப்பு என்னவென்றால் இது கடைகளில் விற்பனை செய்யப்படுவது இல்லை; தேவைப்பட்டோர் ஆண்டுச்சந்தா செலுத்திப் பெற்றுக்கொள்ளவேண்டும். ஆன்மீகம் கடைகளில் விற்கப்படு்ம் விற்பனைப் பொருளன்று என்பதற்காக இவ்வாறு செய்யப்படுகின்றது எனக்கூறலாம். மேலும், பாபா அவர்க்ள் அவ்வப்போது பேசிய பேச்சுக்கள், எழுதிய கட்டுரைகள் நூல் வடிவில் வெளிவந்துள்ளன. இந்தப் படைப்புக்கள், சத்திய சாயி நூல்கள் நல்ல தரமான தாளில், அழகிய அச்சில் மிகக் குறைந்தவிலையில் (அடக்கவிலையிலேயே) விற்கப்படுகின்றன.

குற்றங்கள்
இவரின் 30 ஆண்டு காலச் சர்ச்சைகள் குறித்தான உண்மைகளைப் பிரித்தானிய வானொலிச் சேவையகம் பிபிசி தொகுத்து வெளியிட்டது. இவர் மீது பல பாலியல் குற்றச்சாட்டுக்களும், சூழ்ச்சி, வஞ்சகம், கொலைச்செயல், பொருளாதாரக் குற்றம் போன்ற கணக்கிலடங்கா குற்றங்கள் இவரைச் சூழ்ந்தன. இக்குற்றச்சாட்டுகளைச் சாயிபாபாவின் நிறுவனம் மறுத்துள்ளது.

தில்லி அமெரிக்கத்ப தூதரகமும் இவரின் பாலியல் குற்றங்களை உறுதி செய்து தன்னுடைய நாட்டினர் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சாய்பாபாவைச் சந்திப்பது குறித்து எச்சரிக்கை விடுத்தது. மேலும் பல அமெரிக்க இளவயதுள்ள ஆடவர்கள் இவரின் ஆதரவாளர்களாகச் செயல்படுவது குறித்துக் கவலை தெரிவித்ததுள்ளது.

24-11-1985 'கல்கி' இதழில் அதன் ஆசிரியர் எழுதிய கட்டுரை ஒன்றின் சில பகுதிகள்

சத்ய சாயி பாபா எத்தனையோ அற்புதங்களை சாதிக்கிறார் பார்க்கிறோம், கதை கதையாகக் கூறக் கேட்கிறோம். அவற்றிலெல்லாம் மிகப் பெரிய ஓர் அற்புதம், அவரது தரிசனத்துக்காகக் காத்திருக்கும் மக்களிடையே காணப்படுகிற கட்டுப்பாடுதான். கோவில்களில் சுவாமி தரிசனம் செய்யப்போகும் மக்கள் எப்படியெல்லாம் வள வளவென்று பேசி அரட்டை அடிக்கிறார்கள். பகவானைக் கும்பிடும் போது கூட எப்படி 'முருகா' என்றோ 'கோவிந்தா' என்றோ கூவி அழைக்கிறார்கள்! அதே மக்கள் பிரசாந்தி நிலைய வாசலில் எவ்வாறு மணற்பரப்பில் ஊசி விழுந்தால் கூடக் கேட்கும் அளவுக்கு அமைதி காக்கிறார்கள்! இந்தக் கட்டுப்பாடு அதிகாரத்தினால் உருவானதல்ல, அன்பினால் தன்னியல்பாக ஏற்பட்டிருப்பது என்பது அற்புதத்திலும் அற்புதம்!

எளிய உதாரணங்களால் பெரிய உண்மைகளைக் கூறுகிறார் பாபா என்றால் காரணம், தத்துவார்த்தமாகத் தடபுடல் ஆங்கிலத்தில் அவருக்குப் பேசத்தெரியாது என்பதல்ல. அப்படி பேச எழுத வேண்டிய இடத்தில் செய்வார். ஒரு சமயம் சொன்னார்:

'Duty without love is deplorable; Duty with love is desirable; Love without duty is Divine.'

முதல் இரண்டு அம்சங்களை எளிதிலேயே புரிந்து கொள்ள முடிந்தாலும் மூன்றாவது தெய்வீக விஷயத்தை எனக்குப் புரிந்து கொள்ள முடியவில்லை. அதென்ன கடமையில்லாத அன்பு? கடமையச் செய்யாமல் அன்பு மட்டுமே காட்டினால் போதுமா? இது பற்றி பாபாவிடமே கேட்டேன். கருணையோடு விளக்கினார்:

"கடமை என்ற உண்ர்வேயின்றி அதையே அன்பு மயமாகிச் செய்துவிடுவதைத்தான் அப்படி குறிப்பிடுகிறேன். உதாரணமாகத் தாய் குழந்தைக்குப் பாலூட்டுவது அவள் கடமைதான். ஆனால் கடமை என்று நினைத்து அவள் அதைச் செய்வதில்லை. அன்பு மயமாகிப் பாலூட்டுகிறாள். தெய்வ நிலைக்கு உயர்கிறாள். அப்படி நமது கடமைகளையும் அன்பு மயமாகிச் செய்யக்கூடுமானால் கடமை சுமையாகத் தெரியாது. அந்தப் படி பக்குவத்தை எய்துப் போது நாம் கடவுள் தன்மையை எய்தியவர்களாவோம். புரிகிறதா? கடமை உணர்வு வெளியே இருந்து உள்ளுக்குப் பாய்வது, அன்புணர்வு உள்ளேயிருந்து பிரவகிப்பது!"

இன்னொரு பொன்மொழியை உதிர்க்கிறார் பாபா:

"நேற்று என்பது நடந்து முடிந்து போன கதை. அதை எண்ணி ஏங்குவதாலோ திருப்தி அடைந்து விடுவதாலோ ஒரு பிரயோசனமும் இல்லை. நாளை என்ன நடக்கும் என்பது உனக்குத் தெரியாது. எனவே, அதைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பதிலும் அர்த்தமில்லை. ஆனால் நல்ல விளைவுகளை எதிர்நோக்கி இன்று நீ செயல்படுகிறாய் அல்லவா? இந்த நிகழ்காலம்தான் முக்கியம். எனவே இப்போது நீ என்ன செய்து கொண்டிருக்கிறாயோ அதனை முழுக் கவனத்துடன் அன்பு மயமாகிச் செய்!"

"நான் நிகழ்த்தும் அற்புதங்கள் எதுவும் முக்கியமில்லை" என்கிறார் பாபா. "என் அன்பை நீ உணர்கிறாயா? அந்த அன்புதான் இந்த சாதனைகளையெல்லாம் நிறைவேற்றியது. அந்த அன்புதான் நிலையானது."

இந்தக் கணத்தில் பாபா எனக்கும் பகவான் ஆனார். மாந்தருக்குள் ஒரு தெய்வம்" என்று தாம் எழுதிய காந்திஜீயின் வாழ்க்கை வரலாற்றுக்குத் தலைப்புத் தந்தார் கல்கி. "காந்தியைத் தெய்வமாக்க வேண்டுமா? என்று சிலர் கேட்கவும், "காந்தியை மனிதர் என்போமானால், நம்மையெல்லாம் என்னவென்று கூறிக்கொள்வது?" என்று திருப்பிக் கேட்டார் கல்கி. அந்த அர்த்தம் பொதிந்த மெலிதான நகைச்சுவை இப்போது எனக்கு நினைவு வந்தது. - கி.ரா.


ஒரே மதம், அது அன்பு மதம் - பாபாபகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா எந்த ஒரு புதிய மதத்தையும் நிறுவவோ, போதிக்கவோ முயற்சி செய்யவில்லை. அவருடைய பணியின் முக்கிய நோக்கங்கள்:

தனிநபருக்கு உதவுதல். இந்த உதவி மூன்று வகைப்பட்டது:

1. அவனிடம் இயல்பாகவே உள்ள தெய்வீகத்தன்மையை அவனே உணர உதவுதல். இறைவனுடன் இரண்டறக் கலப்பது என்ற இறுதி இலட்சியம் நோக்கிச் செல்ல உதவுதல்.
2. தெய்வீகம் என்பது அன்பு, கடமையில் காட்டப்படும் கச்சிதம் ஆகியவற்றில் அட்ங்கும் என்பதால் இவற்றை வாழ்க்கையில் கடைப்பிடிக்க உதவுதல்.
3. இதன் மூலமே வாழ்க்கையில் மகிழ்ச்சி, அழகு ஆகியவற்றை அநுபவிக்கச் செய்தல்.

எல்லாவிதமான மனித உறவுகளும் பின்வரும் அடிப்படைகளில் இயங்க வேண்டும் என்பதை உணர்த்துதல்: சத்யம், தர்மம், பிரேமை, சாந்தி, அஹிம்சை. மதம் என்பதன் மெய்யான அடிப்படையினை உணர்த்துவதன் மூலம் எல்லா மதத்தினருக்கும் தங்கள் தங்கள் மதக் கோட்பாடுகளை மேலும் தீவிரமாகவும் மனப்பூர்வமாகவும் பின்பற்ற உதவுதல்.
இந்த இலட்சியங்களையெல்லாம் அடைய பின்வரும் கோட்பாடுகளை அநுசரிக்கும்படி கூறுகிறார் பாபா:
1.
ஒரே மதம் அது அன்பு மதம்
ஒரே ஜாதி அது மனித ஜாதி
ஒரே மொழி அது இதய மொழி
ஒரே கடவுள் அவர் சர்வ வியாபி.

2. எப்போதும் கடவுளை நினைத்து உலகின் சகல ஜீவராசிகளும் ஜடப்பொருள்களும் கூட அவனது பல்வேறு வடிவங்களுள் ஒன்றே என்று உணருதல்.

3. எல்லா மதங்களின் இடையேயும் உள்ள ஒற்றுமைகளை அடிக்கோடிட்டுக் காட்டி, எல்லா மதங்களும் அன்பின் அடிப்படையில் உருவானவை என்பதைப் புரிந்து கொள்வது.

4. கடமையாற்றுவது என்பது இறைவனுக்குச் செய்யும் சேவை என்பதை உணர்ந்து செயல்படுவது.

5. வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகள் அனைத்திலும் தெய்வீக அன்பு, கருணை, சகிப்புத் தன்மை, உதவுகிற இயல்பு ஆகியவற்றைக் கொணர்ந்து இவை மூலம் அந்தப் பிரச்சினைகளைச் சந்தித்து வெற்றி காணல்.

6. எல்லாக் காரியங்களையும் தார்மீக அடிப்படையிலும், பாபத்துக்கு அஞ்சும் அடிப்படையிலும் எடைபோட்டுச் செய்தல்.

7. வாழ்க்கையை நடத்தக் கடமையாற்றுவது தவிர ஆன்மீக, கல்வி அல்லது சேவா மார்க்கத்திலும் மனத்தைச் செலுத்தி இதன் மூலம் தனி நபர்களுக்கோ சமுதாயத்துகோ உதவ முயற்சி மேற்கொள்ளுதல். இதனைத் திட்டமிட்டும் எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமலும் செய்தல். நம்மை யாரும் பாராட்ட வேண்டும் என்று கூட எதிர்பாராமல் இறைவனின் அன்பையும் அருளையும் பெறமட்டுமே செயலாற்றுதல்.

நன்றி: கல்கி,பிபிசி,விக்கிபீடியா,யூ ரியூப்

1 comment:

  1. "என் அன்பை நீ உணர்கிறாயா? அந்த அன்புதான் இந்த சாதனைகளையெல்லாம் நிறைவேற்றியது. அந்த அன்புதான் நிலையானது."

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் HolykuralKural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis