பரத நாட்டியம் தென்னிந்தியாவுக்குரிய, சிறப்பாகத் தமிழ்நாட்டுக்குரிய நடனமாகும். இது மிகத் தொன்மைவாய்ந்ததும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும். பரத முனிவர் என்ற சித்தரால் உண்டாக்கப்பட்டதனால் பரதம் என்ற பெயர் வந்ததாகக் கூறுவர். அதேவேளை பரதம் என்ற சொல், ப - பாவம், ர - ராகம், த - தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது. இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும். இவற்றுடன் தாளம் சேர்ந்த நடனம்தான் பரத நாட்டியம். நன்கு தேர்ச்சி பெற்றதொரு நாட்டியக்கலைஞரின் முக பாவனையில் நவரசங்களின் பாவனைகளையும் வெளிக்கொணருதலைக் காணலாம்.
Bharatanatyam (Tamil: பரதநாட்டியம்) is a classical Indian dance form originating in Tamil Nadu, India. One of the oldest of the classical dance forms in India. Bharatanatyam is usually accompanied by the classical music. It has its inspirations from the sculptures of the ancient temple of Chidambaram, Tamilnadu. Bharat...anatyam, as the name depicts is the combination of:BHA- Bhava (Expression), RA- Raga (Music) and TA- Tala (Rhythm) Bharatanatyam is a traditional dance-form known for its grace, purity, tenderness, and sculpturesque poses. Today, it is one of the most popular and widely performed dance styles and is practiced by many dancers all over the world.
உணவில் தினமும் மிளகு இரசம் இடம்பெற்றாலே போதுமானது. இது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம, இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் தாராளமாக உள்ளன.
இவை அனைத்தும் நரம்புத்தளர்ச்சி, நரம்புக்கோளாறு முதலியவற்றை அகற்றி நரம்புகளுக்கு ஊக்கம் தருகிறது. நரம்பு மண்டலம் துடிப்பாக இருந்தால் சிந்தனையும் அதைத்தொடர்ந்து செயது முடிக்கும் வேகமும் சீராகத் தொடரும்.
காய்ச்சலுடன் வயிற்று பொருமலையும் மிளகு தணிக்கிறது. ஜீரண உறுப்புகள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டுத் தொந்தரவில்லாமல் செயல்பட உதவுகிறது.
காரசாரமான மிளகு உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கிறது. ஜீரணக் கோளறும் உடனே குணமாகிறது. உணவும் நன்கு செரிக்க ஆரம்பிக்கிறது.
வீட்டில் எப்போதும் கறுப்பு மிளகுத் தூள் இருப்பது நல்லது. ஜீரணம் ஆகாதபோதும், நிறையச் சாப்பிட பிறகும் கால் தேக்கரண்டி மிளகுத் தூளை மோரில் கலந்து குடித்தால் உடன் ஜீரணமாகும். இல்லையெனில் வெல்லக்கட்டியில் ஆறு மிளகை வைத்து பொடித்து அந்தப் பொடியை தண்ணீருடன் சாப்பிடலாம்.
ஜலதோஷத்துடன் கூடிய காய்ச்சலுக்கு இதேபோல் ஆறு மிளகைத் தூள் செய்து தண்ணீருடன் சாப்பிடவும். இல்லையெனில் பாலில் மிளகுத்தூளைக் கொதிக்க வைத்து அருந்தலாம்.
தும்மல் மற்றும் சளியுடன் ஜலதோஷம் என்றால் இருபது கிராம் மிளகுத்தூளை பாலில் கொதிக்க வைத்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து தினம் ஒரு வேளை வீதம் மூன்று நாட்கள் மட்டும் சாப்பிடவும். இது ஒரு சூப்பர் நிவாரணி.
சோம்பலாகவும், மந்தமாகவும் இருப்பவர்களும், ஞாபக மறதிக் குழந்தைகளும் மற்ற வயதுக்காரர்களும் ஒரு தேக்கரண்டித் தேனில் ஒரு சிட்டிகை மிளகுத்தூளைக் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வரவும். சோம்பல் போயே போச்சு. மிளகில் உள்ள பாஸ்பரஸ் மூளையை விழிப்புடன் வைத்திருக்கும்.
உடம்புவலி, பற்சொத்தை உள்ளவர்களும், மிளகை தினசரி உணவில் சேர்ப்பது நல்லது.
ஆண்மைக் குறைபாடு உள்ளவர்களும், பெண்மைக் குறைபாடு உள்ளவர்களும் தினமும் நான்கு பாதாம் பருப்புகளுடன் ஆறு மிளகையும் தூளாக்கி பாலுடன் இரவில் அருந்தி வருவது நல்லது. குறைபாடுகள் குணமாகும். குழந்தையும் பிறக்கும்.
பற்சொத்தை, பல்வலி, பேசும் போது நாற்றம், பல் கூச்சம் உள்ளவர்கள் சில நாட்களுக்கு மிளகுத் தூளும் உப்பும் கலந்த பற்பொடியை வீட்டில் தயாரித்துப் பல்துலக்கி வரவும்.
மிளகு இரசமும், மிளகு சோந்த உணவு வகைகளும் ஆரோக்கியத்தைத் தருவதுடன் மூளையின் கூர்மையையும் அதிகரிக்கும் என்பது உறுதி.
திரிகடுகு எனப்படும் [சுக்கு மிளகு திப்பிலி]மருந்தை காலை மாலை உணவுக்குப்பின் தேனில் 500 மி.கி அளவு சாப்பிட வயிற்றுநோய்களும் சுவாசம் சம்பந்தமான நோய்களும் அணுகாது.
மிளகுடன் வெற்றிலை சேர்த்து லேசாக இடித்து நீரில் கொதிக்கவைத்து வடித்த குடிநீரை குடித்துவர மருந்துகளால், உணவுப்பண்டங்களால் ஏற்பட்ட நச்சுத்தன்மை நீங்கும்.
மிளகுத்தூள்+வெங்காயம்+உப்பு இவற்றை கலந்துஅரைத்து புழுவெட்டு[ALOPECIA] உள்ள இடத்தில் தொடர்ந்து பூசிவர முடிமுளைக்கும்.
மிளகு ஊறுகாய்: பச்சை மிளகு கிடைக்கும் சீசனில், வாங்கி கெட்டித் தயிரில் உப்பு போட்டு ஊற வைத்து அப்படியே உபயோகிக்கலாம். அல்லது மோர் மிளகாய் போல் காயவைத்தும் தயிர் சாதத்திற்க்கு தொட்டுக் கொள்ளலாம். உடம்புக்கு மிகவும் நல்லது.
ஸ்ரீ சத்ய சாயி பாபா (Sathya Sai Baba, தெலுங்கு: సత్య సాయిబాబా, பிறப்பு: நவம்பர் 23, 1926) தென்னிந்திய ஆன்மிக குரு. இவரது அடியார்களினால் "இறை அவதாரம்" எனப் போற்றப்படும் இவர் மதப் பரப்புனரும், சித்தரும் ஆவார்.
இவரது ஏறத்தாழ 1200 சத்ய சாய் அமைப்புகள் 114 மையங்களில் உலகெங்கிலும் செயல்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது. இவரின் வழிநடப்பவர்கள் சுமார் 60 இலட்சம் பேர் (1999 இல்) எனக் கணக்கிடப்பட்டுள்ளது. உலகெங்கிலும் 100 கோடி அடியார்கள் உள்ளனர் என்றும் கூறப்படுகின்றது. இவரின் சுய அறிவிப்பின் மூலம் இவர் சீரடி சாயி பாபா வின் மறு அவதாரம் என இவரின் ஆதரவாளர்களால் நம்பப்படுகின்றது.
ஆந்திராவில் உள்ள புட்டபர்த்தி எனும் கிராமத்தில் பிறந்தார். அவர் தாயாரின் பெயர் ஈசுவரம்மா, தந்தை பெத்தவெங்கம ராஜு ரட்னாகரம். பகவான் பாபா இவர்களுக்கு 8வது குழந்தையாகப் பிறந்தார். பிறப்பதற்கு முன்பிருந்தே அவர் தனது மகிமைகளை வெளிப்படுத்தினார். தெரு நாடகத்தில் ஈடுபாடு கொண்டிருந்த அவர்கள் வீட்டில் இருந்த இசைக் கருவிகள் தானாகவே இசைத்தன.
சத்ய நாராயண விரதம் இருந்து பிறந்ததால், இவருக்கு சத்ய நாராயணன் என பெயர் சூட்டினர். இவரின் பிறப்பு சாதாரண மனிதர்களை போல் இல்லை, அதாவது பிரசவத்தின் மூலமாக இல்லாமல் பிரவேசமாக இருந்தது. ஒரு முறை தாயார் ஈசுவராம்பா கிணற்றில் தண்ணீர் இறைத்துக்கொண்டிருந்த போது வானில் இருந்து நீல வண்ண பந்து ஒன்று வேகமாக வந்து அவரின் வயிற்றில் புகுந்ததாகவும் அதன் பின் தான் கருவுற்றதாகவும் பின் ஒரு நாளில் அவர் கூறினார்
சத்திய சாயி பாபா மற்றும் அவரது பக்தர்கள் நூற்றுக்கணக்கான சமூக சேவை நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள். கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், சமூக சேவை நிறுவனங்கள் எனப பல வழிகளில் இச்சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்தியா மட்டுமல்லாது, உலகின் பல பாகங்களிலும் இவை இயங்குகின்றன. விழுமிய சமூகம் (Sociocare), விழுக்கல்வி (Educare), விழுமிய மருத்துவம் (Medicare) விழுமிய குடிநீர் (aquacare) எனப் பல துறைகளில் அவரின் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
அவரது நிறுவனம் உலகம் முழுவதும் 136 நாடுகளில் மக்கள் பணியில் ஈடுபட்டுக்கொண்டுள்ளது.
Sociocare எனும் விழுமிய சமூக உருவாக்கத்தில் - இவரது நிறுவனம் உலகின் பல இடங்களில் மக்களின் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டிருக்கின்றது. சமீபத்தில் ஒரிசாவில் நடந்த வெள்ளத்தில் வீடுகள் இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன.
Educare எனப்படும் விழுக்கல்விப் பாடத்திட்டத்தின் மூலம் - சத்திய சாயி நிறுவனம் உலகின் பல நாடுகளில் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் பயன்பெறும் வகையில் பல கல்வி அமைப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றது. இவை அனைத்தும் மாணவர்களிடம் இருந்து எந்த விதமான கட்டணங்களும் பெறுவதில்லை.
Medicare - எனப்படும் விழுமிய மருத்துவத்தினைத் தொண்டுப்பணியாகச் சத்திய சாயி நிறுவனம் உலகின் பல நாடுகளில், சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் பயன் பெறும் வகையில் பல இலவச மருத்துவ முகாம்களையும், பல இலவச மருத்துவமனைகளையும் நடத்திவருகின்றது.
அது தவிர, மக்களின் மனங்களில் இவ்வாறான மேலான சேவை அல்லது தொண்டு எண்ணங்களை வளர்ப்பதற்காக அவரின் நிறுவனங்கள் பல ஆன்மிகச் செயல்பாடுகளில் ஈடுபடுகின்றன. அனைத்து மதக் கொண்டாட்டங்களையும் அதன் உட்கருத்தை உணர்ந்து கொண்டாடுவது, பஜனை எனப்படும் போற்றிசை, நகர சங்கீர்த்தனம்,மதங்களின் உண்மைத் தத்துவத்தைப் புரிந்து கொள்ள ஆன்மீக வாசகர் வட்டம் என்கின்ற ஆய்வுவட்டம் போன்ற பல திருச்செயல்கள் உலகெங்கும் நடைபெறுகின்றன. இவர் தன் கொள்கைகளை எழுதியும், பேசியும் பரப்பி வருகின்றார்.
அவருடைய திருவாய்மொழியானது, 'சத்ய சாய் ஸ்பீக்சு' என்று ஆங்கிலத்தில் கிட்டத்தட்ட 40 தொகுதிகள்(வால்யூம்கள்) வெளிவந்துள்ளன. மேலும், ஆன்மீகக் கருத்துக்களின் விளக்கமாகப் பலநூல்களை அவர் தொடர்ந்து மாத இதழான சனாதனசாரதி என்ற மாதப்பத்திரிகையில் எழுதிவருகின்றார். அப்பத்திரிகையில் விளம்பரங்கள் எதுவும் வெளிவருவதில்லை. வெறும் ஆன்மீகச்செய்திகளே வெளிவரும். அவரின் சொற்பொழிவுகளும் தொடர்ந்து அவ்விதழில் வெளிவரும். இந்தச் சனாதன சாரதி மாத இதழானது, இந்திய மொழிகளில் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி முதலிய பல மொழிக்ளில் வெளிவருகின்றது. உலகின் பெரும்பாலான மொழிகளிலும், சப்பானியம், ருசியம், செருமானியம், கிரேக்கம், போன்ற பல மேலைநாட்டு மொழிகளிலும் வெளிவந்துகொண்டுள்ளது. இவ்விதழின் தனிச்சிறப்பு என்னவென்றால் இது கடைகளில் விற்பனை செய்யப்படுவது இல்லை; தேவைப்பட்டோர் ஆண்டுச்சந்தா செலுத்திப் பெற்றுக்கொள்ளவேண்டும். ஆன்மீகம் கடைகளில் விற்கப்படு்ம் விற்பனைப் பொருளன்று என்பதற்காக இவ்வாறு செய்யப்படுகின்றது எனக்கூறலாம். மேலும், பாபா அவர்க்ள் அவ்வப்போது பேசிய பேச்சுக்கள், எழுதிய கட்டுரைகள் நூல் வடிவில் வெளிவந்துள்ளன. இந்தப் படைப்புக்கள், சத்திய சாயி நூல்கள் நல்ல தரமான தாளில், அழகிய அச்சில் மிகக் குறைந்தவிலையில் (அடக்கவிலையிலேயே) விற்கப்படுகின்றன.
குற்றங்கள்
இவரின் 30 ஆண்டு காலச் சர்ச்சைகள் குறித்தான உண்மைகளைப் பிரித்தானிய வானொலிச் சேவையகம் பிபிசி தொகுத்து வெளியிட்டது. இவர் மீது பல பாலியல் குற்றச்சாட்டுக்களும், சூழ்ச்சி, வஞ்சகம், கொலைச்செயல், பொருளாதாரக் குற்றம் போன்ற கணக்கிலடங்கா குற்றங்கள் இவரைச் சூழ்ந்தன. இக்குற்றச்சாட்டுகளைச் சாயிபாபாவின் நிறுவனம் மறுத்துள்ளது.
தில்லி அமெரிக்கத்ப தூதரகமும் இவரின் பாலியல் குற்றங்களை உறுதி செய்து தன்னுடைய நாட்டினர் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சாய்பாபாவைச் சந்திப்பது குறித்து எச்சரிக்கை விடுத்தது. மேலும் பல அமெரிக்க இளவயதுள்ள ஆடவர்கள் இவரின் ஆதரவாளர்களாகச் செயல்படுவது குறித்துக் கவலை தெரிவித்ததுள்ளது.
24-11-1985 'கல்கி' இதழில் அதன் ஆசிரியர் எழுதிய கட்டுரை ஒன்றின் சில பகுதிகள்
சத்ய சாயி பாபா எத்தனையோ அற்புதங்களை சாதிக்கிறார் பார்க்கிறோம், கதை கதையாகக் கூறக் கேட்கிறோம். அவற்றிலெல்லாம் மிகப் பெரிய ஓர் அற்புதம், அவரது தரிசனத்துக்காகக் காத்திருக்கும் மக்களிடையே காணப்படுகிற கட்டுப்பாடுதான். கோவில்களில் சுவாமி தரிசனம் செய்யப்போகும் மக்கள் எப்படியெல்லாம் வள வளவென்று பேசி அரட்டை அடிக்கிறார்கள். பகவானைக் கும்பிடும் போது கூட எப்படி 'முருகா' என்றோ 'கோவிந்தா' என்றோ கூவி அழைக்கிறார்கள்! அதே மக்கள் பிரசாந்தி நிலைய வாசலில் எவ்வாறு மணற்பரப்பில் ஊசி விழுந்தால் கூடக் கேட்கும் அளவுக்கு அமைதி காக்கிறார்கள்! இந்தக் கட்டுப்பாடு அதிகாரத்தினால் உருவானதல்ல, அன்பினால் தன்னியல்பாக ஏற்பட்டிருப்பது என்பது அற்புதத்திலும் அற்புதம்!
எளிய உதாரணங்களால் பெரிய உண்மைகளைக் கூறுகிறார் பாபா என்றால் காரணம், தத்துவார்த்தமாகத் தடபுடல் ஆங்கிலத்தில் அவருக்குப் பேசத்தெரியாது என்பதல்ல. அப்படி பேச எழுத வேண்டிய இடத்தில் செய்வார். ஒரு சமயம் சொன்னார்:
'Duty without love is deplorable; Duty with love is desirable; Love without duty is Divine.'
முதல் இரண்டு அம்சங்களை எளிதிலேயே புரிந்து கொள்ள முடிந்தாலும் மூன்றாவது தெய்வீக விஷயத்தை எனக்குப் புரிந்து கொள்ள முடியவில்லை. அதென்ன கடமையில்லாத அன்பு? கடமையச் செய்யாமல் அன்பு மட்டுமே காட்டினால் போதுமா? இது பற்றி பாபாவிடமே கேட்டேன். கருணையோடு விளக்கினார்:
"கடமை என்ற உண்ர்வேயின்றி அதையே அன்பு மயமாகிச் செய்துவிடுவதைத்தான் அப்படி குறிப்பிடுகிறேன். உதாரணமாகத் தாய் குழந்தைக்குப் பாலூட்டுவது அவள் கடமைதான். ஆனால் கடமை என்று நினைத்து அவள் அதைச் செய்வதில்லை. அன்பு மயமாகிப் பாலூட்டுகிறாள். தெய்வ நிலைக்கு உயர்கிறாள். அப்படி நமது கடமைகளையும் அன்பு மயமாகிச் செய்யக்கூடுமானால் கடமை சுமையாகத் தெரியாது. அந்தப் படி பக்குவத்தை எய்துப் போது நாம் கடவுள் தன்மையை எய்தியவர்களாவோம். புரிகிறதா? கடமை உணர்வு வெளியே இருந்து உள்ளுக்குப் பாய்வது, அன்புணர்வு உள்ளேயிருந்து பிரவகிப்பது!"
இன்னொரு பொன்மொழியை உதிர்க்கிறார் பாபா:
"நேற்று என்பது நடந்து முடிந்து போன கதை. அதை எண்ணி ஏங்குவதாலோ திருப்தி அடைந்து விடுவதாலோ ஒரு பிரயோசனமும் இல்லை. நாளை என்ன நடக்கும் என்பது உனக்குத் தெரியாது. எனவே, அதைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பதிலும் அர்த்தமில்லை. ஆனால் நல்ல விளைவுகளை எதிர்நோக்கி இன்று நீ செயல்படுகிறாய் அல்லவா? இந்த நிகழ்காலம்தான் முக்கியம். எனவே இப்போது நீ என்ன செய்து கொண்டிருக்கிறாயோ அதனை முழுக் கவனத்துடன் அன்பு மயமாகிச் செய்!"
"நான் நிகழ்த்தும் அற்புதங்கள் எதுவும் முக்கியமில்லை" என்கிறார் பாபா. "என் அன்பை நீ உணர்கிறாயா? அந்த அன்புதான் இந்த சாதனைகளையெல்லாம் நிறைவேற்றியது. அந்த அன்புதான் நிலையானது."
இந்தக் கணத்தில் பாபா எனக்கும் பகவான் ஆனார். மாந்தருக்குள் ஒரு தெய்வம்" என்று தாம் எழுதிய காந்திஜீயின் வாழ்க்கை வரலாற்றுக்குத் தலைப்புத் தந்தார் கல்கி. "காந்தியைத் தெய்வமாக்க வேண்டுமா? என்று சிலர் கேட்கவும், "காந்தியை மனிதர் என்போமானால், நம்மையெல்லாம் என்னவென்று கூறிக்கொள்வது?" என்று திருப்பிக் கேட்டார் கல்கி. அந்த அர்த்தம் பொதிந்த மெலிதான நகைச்சுவை இப்போது எனக்கு நினைவு வந்தது. - கி.ரா.
ஒரே மதம், அது அன்பு மதம் - பாபா
பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா எந்த ஒரு புதிய மதத்தையும் நிறுவவோ, போதிக்கவோ முயற்சி செய்யவில்லை. அவருடைய பணியின் முக்கிய நோக்கங்கள்:
தனிநபருக்கு உதவுதல். இந்த உதவி மூன்று வகைப்பட்டது:
1. அவனிடம் இயல்பாகவே உள்ள தெய்வீகத்தன்மையை அவனே உணர உதவுதல். இறைவனுடன் இரண்டறக் கலப்பது என்ற இறுதி இலட்சியம் நோக்கிச் செல்ல உதவுதல். 2. தெய்வீகம் என்பது அன்பு, கடமையில் காட்டப்படும் கச்சிதம் ஆகியவற்றில் அட்ங்கும் என்பதால் இவற்றை வாழ்க்கையில் கடைப்பிடிக்க உதவுதல். 3. இதன் மூலமே வாழ்க்கையில் மகிழ்ச்சி, அழகு ஆகியவற்றை அநுபவிக்கச் செய்தல்.
எல்லாவிதமான மனித உறவுகளும் பின்வரும் அடிப்படைகளில் இயங்க வேண்டும் என்பதை உணர்த்துதல்: சத்யம், தர்மம், பிரேமை, சாந்தி, அஹிம்சை. மதம் என்பதன் மெய்யான அடிப்படையினை உணர்த்துவதன் மூலம் எல்லா மதத்தினருக்கும் தங்கள் தங்கள் மதக் கோட்பாடுகளை மேலும் தீவிரமாகவும் மனப்பூர்வமாகவும் பின்பற்ற உதவுதல். இந்த இலட்சியங்களையெல்லாம் அடைய பின்வரும் கோட்பாடுகளை அநுசரிக்கும்படி கூறுகிறார் பாபா: 1. ஒரே மதம் அது அன்பு மதம் ஒரே ஜாதி அது மனித ஜாதி ஒரே மொழி அது இதய மொழி ஒரே கடவுள் அவர் சர்வ வியாபி.
2. எப்போதும் கடவுளை நினைத்து உலகின் சகல ஜீவராசிகளும் ஜடப்பொருள்களும் கூட அவனது பல்வேறு வடிவங்களுள் ஒன்றே என்று உணருதல்.
3. எல்லா மதங்களின் இடையேயும் உள்ள ஒற்றுமைகளை அடிக்கோடிட்டுக் காட்டி, எல்லா மதங்களும் அன்பின் அடிப்படையில் உருவானவை என்பதைப் புரிந்து கொள்வது.
4. கடமையாற்றுவது என்பது இறைவனுக்குச் செய்யும் சேவை என்பதை உணர்ந்து செயல்படுவது.
5. வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகள் அனைத்திலும் தெய்வீக அன்பு, கருணை, சகிப்புத் தன்மை, உதவுகிற இயல்பு ஆகியவற்றைக் கொணர்ந்து இவை மூலம் அந்தப் பிரச்சினைகளைச் சந்தித்து வெற்றி காணல்.
6. எல்லாக் காரியங்களையும் தார்மீக அடிப்படையிலும், பாபத்துக்கு அஞ்சும் அடிப்படையிலும் எடைபோட்டுச் செய்தல்.
7. வாழ்க்கையை நடத்தக் கடமையாற்றுவது தவிர ஆன்மீக, கல்வி அல்லது சேவா மார்க்கத்திலும் மனத்தைச் செலுத்தி இதன் மூலம் தனி நபர்களுக்கோ சமுதாயத்துகோ உதவ முயற்சி மேற்கொள்ளுதல். இதனைத் திட்டமிட்டும் எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமலும் செய்தல். நம்மை யாரும் பாராட்ட வேண்டும் என்று கூட எதிர்பாராமல் இறைவனின் அன்பையும் அருளையும் பெறமட்டுமே செயலாற்றுதல்.
தமிழ் தந்து கோடி யுகங்கள் தாண்டியும் இன்றும் யோதிவடிவாக வாழ்கிறார்கள் சித்தர்கள். சித்தர்கள் மொழியே தமிழ்மொழி. சித்தர்கள் கோடியுகம் வாழ்ந்தால் தமிழும் கோடியுகங்கள் வாழ்வதாகக் கருதமுடியும். இது பலரதும் புருவத்தை நம்பமுடியாமல் உயர்த்தவே செய்யும். தமிழ் பேசவல்ல சித்தர்கள் ௯(9) கோடி இருப்பதாக சித்தநூல்களில் கூறப்பட்டுள்ளது. சித்தர்கள் தந்த தமிழில் இல்லாதது ஒன்றுமில்லை. விளையாட்டாக வெளிநாட்டவர் ஒருவர் அப்ப மயிர்பற்றி சித்தர்கள் தமிழில் உள்ளதா எனக்கேட்க, உண்டெனக் கூறி தமிழறிஞர்கள் ஆயிரம் உதாரணம் காட்ட அசந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
உதாரணத்திற்கு:-
தலை முடி கறுக்க:
"எண்ணெய் இட்டு முழுகும் பொது நெல்லிமுள்ளி யெடுத்து பாலில் ஊறவைத்து அரையப்பா அரைத்து போட்டு முழுகு"
நெல்லிமுள்ளியை எடுத்து பாலில் ஊறவைத்து அரைத்து எடுத்துஇ எண்ணெய் தேய்த்து முழுகும் போது தலையில் தேய்த்து முழுகினால் தலை முடிகறுக்கும்.
பொன்பருத்தியிலைச் சாறெடுத்து தலையில் பூசி முழுக நரை முடி கறுக்குமாம்.
சித்தர்கள் அறிந்திராத கலையெதுவுமில்லை. 64 கலைகளையும் தாண்டி 65வது கலையாகிய சாகாக்கலையையும் அறிந்திருந்தனர். இன்றும் இவர்கள் யோதிவடிவாக வாழ்கிறார்கள் என நம்பப்படுகிறது. அகத்தியர், திருவள்ளுவார், 150 வருடங்களுக்கு முன் வாழ்ந்த வடலூர் வள்ளலார் வரை அனைவரும் சித்தர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
அய்யன் வள்ளுவர் அருளிய திருக்குறளில் துறவறவியல் பகுதியில் அருளுடைமை, புலால் மறுத்தல், தவம், கூடா ஒழுக்கம், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை, நிலையாமை, துறவு, மெய்யுணர்தல், அவாவறுத்தல் ஆகிய 13 அதிகாரங்களில் ஞானக்கருத்துக்கள் உள்ளன. அதிலொரு சில குறள்கள் மட்டும் எடுத்துக்காட்டுகிறோம்.
(எ.கா)
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பு அறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை. (குறள் : 345-துறவு)
ஓர்த்துஉள்ளம் உள்ளது உணரின் ஒரு தலையாப் பேர்த்துஉள்ள வேண்டா பிறப்பு. (குறள் : 357-மெய்யுணர்தல்)
சார்புஉணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றுஅழித்துச் சார்தரா சார்தரும் நோய். (குறள் : 359-மெய்யுணர்தல்)
திருவள்ளுவர் திருக்குறளை மட்டும் அருளவில்லை. அய்யன் வள்ளுவப்பெருமான் அருளிய நூல்கள் எண்ணற்றவை. இனி வரும் ஞானச்சித்தர் காலத்தில் இவை மக்கள் பயன்பாட்டிற்கு வரும். அய்யன் வள்ளுவப்பெருமான் அருளிய நூல்களில் சில :
சித்தர்கள் வகுத்த காலக் கணிப்பு - Lunar metrics of Siddha(Ciththars/Masters)
Thamil & Sanskrit are languages of Ciththars(Siddha/Masters). Both languages were created & developed by Ciththars. It's Ciththars who developed lunar metrics of years.
-தொடரும்-
என் அன்பிற்கினிய உறவுகளே! அடியேனும் தமிழ்த் தேடலின் போது கிடைக்கப்பெறும் தகவலைத் தொடர்ந்து பகிர்கிறேன். என் மொழி என்பதால் சொல்லவில்லை. எங்கள் மொழி 1000/2000/5000 ஆண்டுகள் பழமை வாயந்ததல்ல. கோடி யுகங்கள் பழமை வாய்ந்தது. அதற்குரிய ஆதாரங்களைத் தேடுவதே என் பிறப்பின் பணியாக ஏற்றுத் தேடலில் இறங்கியுள்ளேன். உங்கள் ஆதரவையும் வேண்டி நிற்கிறேன். நன்றி.
இரண்டாவது உலகப்போர் காலத்தில் தான் அணுகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் எழுபது ஆண்டு காலமாகத்தான் அணுசக்திக் கொள்கையை உலகம் அறியும். ஆனால் இந்த அணுகுண்டுக் கொள்கையை திருவள்ளுவமாலையில் காணும் போது, அது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. திருக்குறளின் பெருமையை உலகம் அறியும். குறுகிய அடிகளில் (குறள்) மிகப்பெரிய கருத்துகளைப் புகுத்தியது வள்ளுவனின் திறமையாகும். இதை விளக்க வந்த இடைக்காடர் என்ற புலவர் “கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள்” என்று பாடினார்.
இதையே ‘அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி குறுகத்தரித்த குறள்’ என்றார் ஒளவையார். அணுவானாலும் கடுகானாலும் பிளந்து கொண்டே போனால் பிளக்கமுடியாத ஒரு சிறு துகள் (Atom) இருக்கும். அதைப்பிளக்கும் போது பிரமண்டமான சக்தி உண்டாகும்.இதை அணுவியல் படித்தோர் அறிவர்.
அணு என்பதும் பரமாணு என்பதும் இந்திய அறிஞர்கள் கண்ட மிகச் சிறிய துகள். எனவே அணு என்பதை அறிந்தே அவர்கள் “அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்தி” என்று கூறினர். புலவர்கள் என்போர் முக்காலமும் உணர்ந்த ஞானிகள். ஊனக்கண்களால் காணமுடியாதவற்றையும் ஞானக்கண்களால் அறிவர். கையால்தான் ஒரு அணுவைப் பிளந்தால் ஏழு கடல் அளவு சக்தி கிடைக்கும் என்பதைச் சொல்லாமல் சொன்னார்கள் போலும்.
“இடைக்காடர் கூற வந்த விஷயம் வேறு, நீங்கள் அதில் விஞ்ஞான கருத்துகளை வலியப் புகுத்துகிறீர்கள்” என்று சிலர் கூறலாம். ஆனால் திருமூலரின் மற்றொரு பாடலைக் காண்கையில் அவர்களுக்கு நாம் நினைப்பதைவிட அதிகமாகத் தெரியும் என்று தெளிவாகிறது. அதை இறுதியில் காண்போம்.
அணுவைப் பிளப்பதால் வரும் ஆற்றல்(nuclear fission) அணுகுண்டு செய்யப் பயன்படுகிறது. அணுவை இணைப்பதால் (nuclear fission) உருவாகும் ஆற்றல் ஹைட்ரஜன் குண்டு செய்யப் பயன்படுகிறது.
இடைக்காடர் பாடல் அணுகுண்டுக் கொள்கையை நினைவுப்படுத்தும். ஒரு அணுவைத் துளைத்தால் ஏழு கடல் ஆற்றல் கிடைக்கும். பரிபாடல் (3-53), புறநானுறு (2) ஆகிய பாடல்களுக்கு உரை எழுதியோர் “உலகம் அணுக்களால் ஆனது” என்றும் “அணுச் செறிந்த உலகம்” என்றும் எழுதியுள்ளனர். இன்றைய அறிவியலில் நாம் படிக்கும் அணுவும் உரையாசிரியர்கள் கூறிய அணுவும் வேறு வேறாக இருக்கலாம். ஆயினும் மிகச் சிற்¢ய பொருள்/துகள் எனும் கருத்திலேயே அவர்கள் பயன்படுத்தினர்.
ஒரு கடுகில் 2,62,144 அணு!
ஒரு பழந்தமிழ்ப் பாட்டு அணு பற்றிய தமிழர்களின் அறிவை விளக்குகிறது.
8 அணு = ஒரு தேர்த்துகள் 8 தேர்த்துகள் =ஒரு பஞ்சிழை 8பஞ்சிழை = ஒரு மயிர் 8 மயிர் = ஒரு மணல் 8 மணல் = ஒரு கடுகு 8 கடுகு = ஒரு நெல், 8 நெல் = ஒரு விரல் 12 விரல் = ஒரு சாண் 2 சாண் = ஒரு முழம் 4 முழம் = ஒரு கோல் 500 கோல் = ஒரு கூப்பீடு 4கூப்பீடு = ஒரு காதம்
“அணுத்தேர்த்துகள் பஞ்சிற்றூய் மயிரன்றி மணற்கடுகு நெல் விரலென்றேற-வணுத்தொடங்க யெட்டோடு மன்னு விரற் பன்னிரண்டார் சாணாக்கி லச்சாணிரண்டு முழமாம்.” - செந்தமிழ் தொகுதி 12 P127
70 ஆண்டுகளுக்கு முன்பு அணுகுண்டு வெடித்துச் சோதித்தபோது அந்த அற்புதக் காட்சியைக் கண்டவர்களில் ஒருவர் ஓபன்ஹீமர். இவர் அமெரிக்காவைச் சேர்ந்த பெரிய அணு விஞ்ஞானி (nuclear physicist) . சோதனைக்காக அணுகுண்டு வெடித்ததை நேரில் கண்டவுடன், அந்த அதிபயங்கரமான காட்சி கண்ணபிரானின் விஸ்வரூபக் காட்சிபோல இருந்தது என்று கூறி பகவத்கீதையில் விஸ்வரூப தரிசன யோகத்திலுள்ள ஸ்லோகத்தை மேற்கோள் காட்டினார்.
திருமூலர் கணக்கு
உலகில் வாழும் உயிர்களின் வடிவத்தை சொல்ல வந்த திருமூலர் ஒரு அதிசயமான விசயத்தைச் சொல்லுகிறார். ஒரு மாட்டின் முடியை எடுத்து ஆயிரம் கோடி இழைகளாகப் பகுப்பது பற்றிப் பேசுகிறார். இதுவும் அணுவைப் பிளப்பது போலத்தான். ஒரு மாட்டின் முடியை எடுத்து அதை நூறு கூறாக்கச் சொல்கிறார். பின்னர் அதிலிருந்து ஒரு முடியெடுத்து ஆயிரம் கூறாக்கச் சொல்கிறார். அவ்வாறு ஆயிரம் கூறு போட்டதில் ஒரு முடியை எடுத்து அதை நூறாயிரம் கூறு போடச் சொல்கிறார். இதுதான் ஜீவனின் வடிவம் என்கிறார்.
100 x 1000 x 100 000=100 000 00 000
அதாவது ஒரு மாட்டின் முடியை ஆயிரம் கோடி இழைகளாகப் பகுப்பது பற்றிப் பேசுகிறார். இவர்கள் அணுவைப் பிளப்பதை மனக்கண்ணில் கண்டார்கள் என்றால் அது மிகையல்ல.
தமிழ் மொழி சித்தர்கள் மொழி. சித்தர்களால் உருவாக்கப்பட்டு இன்றும் அவர்களாலேயே வளர்கப்பட்டு வருகின்றது. முற்றுப்பெற்ற ஞானிகளான சித்தர்களின் உயர்மொழி தமிழ். ஆதாலால், அது ஞானமொழியென்றும், மலங்கள்(கசடு/குறை) நீங்கிய அமுதமொழியென்றும் அழைக்கப்படுகின்றது. இதற்கு திருச்சி, துறையூர் ஓங்காரக் குடில் சான்று பகரும். "கல் தோன்றி மன் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி"
“கல் தோன்றி மன் தோன்றாக் கால மூத்தகுடி” இந்தக் கூற்றை பலரும் தவறாக கல்லும் மண்ணும் தோன்றாக் காலமென்கின்றனர். ஆனால், "கல் தோன்றி" அஃதாவது கல்விமுறைகள் தோற்றம் கொண்ட, "மன் தோன்றா" அஃதாவது ஆட்சிமுறைகள்(மன்னராட்சி) தோன்றாக் காலத்தில், "வாளோடு" அஃதாவது வீரத்தோடு தோன்றிய முதல் இனம் தமிழினம். உலகத்தில் தோன்றிய மூத்தமொழி தமிழ் என்பதே இதன் விளக்கம். உலகமொழிகளுக்கே தாய்மொழி.
தமிழர்நெறி சித்தநெறியே யன்றி இந்துத்துவமல்ல. உலக அறங்களுக்கு மூத்தது சித்தநெறி. இந்து என்பது சமயமோ மார்க்கமோ மதமோவல்ல. அது ஓர் நாகரீகம். சிந்துவெளி நாகரீகமே காலப்போக்கில் திரிந்து இந்து என்றாகிவிட்டது.
சித்தர்கள் தந்த தமிழ்
தமிழ் தந்து கோடி யுகங்கள் தாண்டியும் இன்றும் யோதிவடிவாக வாழ்கிறார்கள் சித்தர்கள். சித்தர்கள் மொழியே தமிழ்மொழி. சித்தர்கள் கோடியுகம் வாழ்ந்தால் தமிழும் கோடியுகங்கள் வாழ்வதாகக் கருதமுடியும். இது பலரதும் புருவத்தை நம்பமுடியாமல் உயர்த்தவே செய்யும். தமிழ் பேசவல்ல சித்தர்கள் ௯(9) கோடி இருப்பதாக சித்தநூல்களில் கூறப்பட்டுள்ளது. சித்தர்கள் தந்த தமிழில் இல்லாதது ஒன்றுமில்லை. விளையாட்டாக வெளிநாட்டவர் ஒருவர் அப்ப மயிர்பற்றி சித்தர்கள் தமிழில் உள்ளதா எனக்கேட்க, உண்டெனக் கூறி தமிழறிஞர்கள் ஆயிரம் உதாரணம் காட்ட அசந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
உதாரணத்திற்கு:-
தலை முடி கறுக்க: "எண்ணெய் இட்டு முழுகும் பொது நெல்லிமுள்ளி யெடுத்து பாலில் ஊறவைத்து அரையப்பா அரைத்து போட்டு முழுகு"
நெல்லிமுள்ளியை எடுத்து பாலில் ஊறவைத்து அரைத்து எடுத்துஇ எண்ணெய் தேய்த்து முழுகும் போது தலையில் தேய்த்து முழுகினால் தலை முடிகறுக்கும்.
பொன்பருத்தியிலைச் சாறெடுத்து தலையில் பூசி முழுக நரை முடி கறுக்குமாம்.
சித்தர்கள் அறிந்திராத கலையெதுவுமில்லை. 64 கலைகளையும் தாண்டி 65வது கலையாகிய சாகாக்கலையையும் அறிந்திருந்தனர். இன்றும் இவர்கள் யோதிவடிவாக வாழ்கிறார்கள் என நம்பப்படுகிறது. அகத்தியர், திருவள்ளுவார், 150 வருடங்களுக்கு முன் வாழ்ந்த வடலூர் வள்ளலார் வரை அனைவரும் சித்தர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
அய்யன் வள்ளுவர் அருளிய திருக்குறளில் துறவறவியல் பகுதியில் அருளுடைமை, புலால் மறுத்தல், தவம், கூடா ஒழுக்கம், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை, நிலையாமை, துறவு, மெய்யுணர்தல், அவாவறுத்தல் ஆகிய 13 அதிகாரங்களில் ஞானக்கருத்துக்கள் உள்ளன. அதிலொரு சில குறள்கள் மட்டும் எடுத்துக்காட்டுகிறோம்.
(எ.கா) மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பு அறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை. (குறள் : 345-துறவு)
ஓர்த்துஉள்ளம் உள்ளது உணரின் ஒரு தலையாப் பேர்த்துஉள்ள வேண்டா பிறப்பு. (குறள் : 357-மெய்யுணர்தல்)
சித்தர்கள் வகுத்த காலக் கணிப்பு - Lunar metrics of Siddha(Ciththars/Masters)
Thamil & Sanskrit are languages of Ciththars(Siddha/Masters). Both languages were created & developed by Ciththars. It's Ciththars who developed lunar metrics of years.
-தொடரும்-
என் அன்பிற்கினிய உறவுகளே! அடியேனும் தமிழ்த் தேடலின் போது கிடைக்கப்பெறும் தகவலைத் தொடர்ந்து பகிர்கிறேன். என் மொழி என்பதால் சொல்லவில்லை. எங்கள் மொழி 1000/2000/5000 ஆண்டுகள் பழமை வாயந்ததல்ல. கோடி யுகங்கள் பழமை வாய்ந்தது. அதற்குரிய ஆதாரங்களைத் தேடுவதே என் பிறப்பின் பணியாக ஏற்றுத் தேடலில் இறங்கியுள்ளேன். உங்கள் ஆதரவையும் வேண்டி நிற்கிறேன். நன்றி.
ஓங்காரக்குடில் - துறையூர் 113 நகர் விரிவாக்கம் துறையூர் திருச்சி - 621010 தொடர்பு இல. : (0091) 04327-255684, 255184
பரத நாட்டியம் தென்னிந்தியாவுக்குரிய, சிறப்பாகத் தமிழ்நாட்டுக்குரிய நடனமாகும். இது மிகத் தொன்மைவாய்ந்ததும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும். பரத முனிவர் என்ற சித்தரால் உண்டாக்கப்பட்டதனால் பரதம் என்ற பெயர் வந்ததாகக் கூறுவர். அதேவேளை பரதம் என்ற சொல், ப - பாவம், ர - ராகம், த - தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது. இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும். இவற்றுடன் தாளம் சேர்ந்த நடனம்தான் பரத நாட்டியம். நன்கு தேர்ச்சி பெற்றதொரு நாட்டியக்கலைஞரின் முக பாவனையில் நவரசங்களின் பாவனைகளையும் வெளிக்கொணருதலைக் காணலாம்.
Bharatanatyam (Tamil: பரதநாட்டியம்) is a classical Indian dance form originating in Tamil Nadu, India. One of the oldest of the classical dance forms in India. Bharatanatyam is usually accompanied by the classical music. It has its inspirations from the sculptures of the ancient temple of Chidambaram, Tamilnadu. Bharat...anatyam, as the name depicts is the combination of:BHA- Bhava (Expression), RA- Raga (Music) and TA- Tala (Rhythm) Bharatanatyam is a traditional dance-form known for its grace, purity, tenderness, and sculpturesque poses. Today, it is one of the most popular and widely performed dance styles and is practiced by many dancers all over the world.