.



"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Friday, 11 November 2016

அதிர்ச்சியில் உலக மக்கள் – நீரில் மூழ்குமா உலகம்..!?

450 வருடங்களுக்கு முன்பே கணிக்கப்பட்ட அமெரிக்க முடிவு – அதிர்ச்சியில் உலக மக்கள் – நீரில் மூழ்குமா உலகம்?


அமெரிக்கா தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் அதிர்ச்சி விடயம் ஒன்றும் தற்போது பயங்கரமாக பரவத் தொடங்கியுள்ளது.

அதாவது உலகம் அதி பயங்கரமான அழிவைச் சந்தித்திடுமா என்ற கேள்வியே அது. இதற்கு முக்கிய காரணம் உண்டு 2016 நடக்கப்போகும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் சுமார் 450 வருடங்களுக்கு முன்பே கணிக்கப்பட்டு கூறியமையால் தான்.

உலக அளவில் பலரையும் கவர்ந்துள்ள 16ஆவது நூற்றாண்டைச் சேர்ந்த தத்துவஞானி மைக்கேல் டி நாஸ்டிரடாமஸ் கணிப்புகள் இன்றளவும் குழப்பமாகவும், சர்ச்சையாகவும் இருந்தாலும் கூட அவரது கணிப்புகளுக்கு இன்று வரை ஈர்ப்பும் இருக்கின்றது.

நாஸ்டிராடமஸின் பல கணிப்புகள் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தவை. காரணம், பல முக்கிய வரலாற்றுச் சம்பவங்களுடன் தொடர்புடையவை. கென்னடி சகோதரர்களின் படுகொலை, ஹிட்லரின் எழுச்சி, நெப்போலியனின் வீழ்ச்சி, 9/11 தாக்குதல் என பல உண்மைச் சம்பவங்களை முன் கூட்டியே கணித்தவர் அவர்.

அதே போன்று மோடி இந்தியாவின் பிரதமராவார் என, 450 ஆண்டுகளுக்கு முன்னரே இவர் மூலமாக கணிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பல்வேறு வகையாக கருத்துகள் ஊடகங்கள் மூலம் வெளிவந்தன. இது ஆச்சரியமான உண்மை.

தற்போது ஒபாமாவே கடைசி எனவும் நாஸ்டிராடமஸின் கணித்து கூறியுள்ளார். இவரின் 2016ம் ஆண்டுக்கான கணிப்புகளில் மிகவும் பரபரப்பாக பேசப்படுவது அதிபர் ஒபாமாவைப் பற்றி அவர் கூறியுள்ளதாகும்.

அவர்தான் அமெரிக்காவின் கடைசி அதிபராக இருப்பார் என்று நாஸ்டிரடாமஸ் கூறியுள்ளார். 2013ல் ஒபாமா மீண்டும் வெல்வார் என்றும் நாஸ்டிரடாமஸ் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். அது அப்படியே நடந்து விட்டது.

அதன் பின்னர் அமரிக்காவின் கடைசி அதிபர் தொடர்பில் ஒபாமா எனவும் கூறியுள்ளார். அப்படியானால் ஒபாமா ஆட்சியோடு அமெரிக்கா அழியப் போகிறதா? அல்லது அமெரிக்காவில் அதிபர் ஆட்சி முறை மறைந்து விடுமா அல்லது சீனா, ரஷ்யா போன்ற புதிய வல்லரசு நாடுகள் எழுச்சி பெறுமா என்பது குறித்துத் அவரின் கணிப்பு கூறவில்லை.

ஆனாலும் 2016ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என 450 வருடங்களுக்கு முன்னர் கணித்து கூறப்பட்டுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவ்வகையில் 2016 பற்றி அவர் கணித்துள்ள பயங்கரமான விடயங்கள்,

2016ம் ஆண்டு அதி பயங்கரமான வானிலை மாற்றங்களை உலகம் சந்திக்கும். இயற்கைப் பேரிடர்கள், பேரழிவுகள், கடல் கொந்தளிப்புகள் அதிக அளவில் இருக்கும். பூமியே கடலுக்குள் போய் விட்டதைப் போன்ற அளவுக்கு வெள்ளப் பெருக்கு அதிகமாக இருக்கும்.

ஏற்கனவே பல நாடுகளில் பெருவெள்ளம் அலைக்கழித்ததைப் பார்க்கும்போதும், எல் நினோ எபக்ட் என்று கூறப்படுவதைப் பார்க்கும்போதும் இந்தக் கணிப்பு பலிக்கலாமோ என்ற அச்சமும் ஏற்படுகிறது.

மேலும் 2016 இன் பின்னர் கோள்கள் வழக்கத்திற்கு விரோதமான முறையில் இடம் மாறுமாம். இந்த கோள்கள் மாற்றத்தால் பூமியில் பல அதி பயங்கர நிகழ்வுகள் ஏற்படலாமாம். ஆனால் அது என்ன மாதிரியான நிகழ்வுகள் என்பதை நாஸ்டிரடாமஸ் சொல்லவில்லை.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெரும் பேரழிவு ஆண்டாக அமையும். வல்லரசு நாடுகளின் தலைமை மாறுபடும் அவை உலகை அழிக்க திட்டமிடும். ஆண்டு உலகம் அழிந்து விடும் என்றும் கூறியுள்ளார். ஈராக் போர்தான் உலக அழிவுக்கான முதல் படி எனவும் 450 வருடங்களின் முன்பே நாஸ்டிரடாமஸ் கூறியுள்ளார்.

அவர் கூறியதைப்போன்றே தற்போது அடுத்த உலக யுத்தம் பற்றியும் பேசப்பட்டு கொண்டு வருவதோடு பயங்கரவாதமும் உலகில் தலை தூக்கியுள்ளமை அவதானிக்க கூடிய ஒன்றே.

தற்போது அமெரிக்கா தேர்தலும் அவர் ஏற்கனவே கூறிய பல்வேறு விடயங்களும் பலித்துள்ளமையால் தற்போது உலக அழிவு கொள்கையும் பல்வேறு ஊடகங்கள் மூலம் பரவலாக வெளிவருகின்றது. தொடர்ச்சியாக அவர் கூறியவை நடந்து வருகின்ற காரணத்தினால் உலகம் பயங்கர அழிவை சந்தித்திடும் என்று மக்கள் மத்தியில் அதிர்ச்சி கலந்த அச்ச நிலையும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் Holykural



Kural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis