.



"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

விடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.

Bookmark and Share on Facebook, Twitter +53 other..
Showing posts with label கவி. Show all posts
Showing posts with label கவி. Show all posts

Tuesday, 13 July 2010

ஈழம் மீண்டும் மீளும்.


தங்கையர் பலர் அவயமிழந்தனர்
மங்கையர் பலர் கற்பிழந்தனர்
தாயவர் பலர் வாழ்விழந்தனர்
தந்தையர் பலர் கதியிழந்தனர்
தூயவர் பலர் நெறியிழந்தனர்
மறத்தமிழர் பலர் உயிரிழந்தனர்
ஈனத்தமிழர் மானமிழந்தனர் - இன்னும்
ஈழத்தமிழர் உணர்விழக்கவில்லை
புலிகள் இங்கு மீண்டும் கூடும்
நரிகள் அதைக் கண்டு ஓடும்
இழிநிலை இல்லாதொழியும்
தமிழிசை உயர ஒலிக்கும்
ஈழம் மீண்டும் மீளும்.
-சூர்யா-

காணும் கண்களே..கூறும் கருத்தென்ன?
http://www.facebook.com/group.php?gid=154437608809

Wednesday, 7 July 2010

துள்ளித் திரிந்தகால நட்பு

துள்ளித் திரிந்தகால உண்மை நட்பு
எள்ளி நகையாடா கள்ளமிலா நட்பு
எண்ணி நினைத்தாலும் இனிக்கும் நட்பு
இனி வருமா அந்த வசந்த நட்பு?

அன்பின் பகிர்வால் மாங்காய் இனிக்கும்
அன்பின் இணைவால் நட்பு இனிக்கும்
அன்பின் இருப்பால் வாழ்வு இனிக்கும்
அன்பின் பிணைப்பால் அணைத்தும் இனிக்கும்
-சூர்யா-

காணும் கண்களே..கூறும் கருத்தென்ன?
http://www.facebook.com/group.php?gid=154437608809

Thursday, 1 July 2010

பூக்கும் இங்கும் அமைதி

குரங்குலிருந்து வந்து
கூர்ப்புவிதி வகுத்தவன்
செழுமைபட்டு வாழ்ந்து
நாகரீகம் பல கண்டவன்
ஆறறிவுக் கர்வத்தால்
பகுத்தறிவை இழந்தவன்

கர்வமது அகத்தே கொண்டு
கொலைக்கலைகள் பல பயின்று
சோதரரையே நடுவீதியில் கொன்று
மிருகமதை வென்ற கொடியோன்

மனதில் மலமே எண்ணி
உலகில் கலகமே பண்ணி
பன்னி போல் தின்று
தானுண்டு கொழுத்து
தரணியை அழித்த
இவன் இங்கில்லையேல்
பூக்கும் இங்கும் அமைதி
பூவுலகில் இதுவே நியதி.
-சூர்யா-

http://www.facebook.com/photo.php?pid=411956&id=1782415579&subject=154437608809

Sunday, 27 June 2010

அகம் அறிந்திடின்

அகம் அறிந்திடின்
முகம் தேவையில்லை
உன் முகம் பார்த்தால்..
யாகம் தேவையில்லை
பாகம் பிரிவில்லை
தாகம் தணியும்
சுகம் வரும்
சுபம் தரும்
-சூர்யா-




http://www.facebook.com/photo.php?pid=1377610&id=1313264151&subject=154437608809




முழு நிலவு
மூழ்கிய கனவு
எழும் நினைவு
எழுதாப் புனைவு
அடங்கிய அலை
அலையும் நிலை
அவள் சிலை
வாழுமோ கலை?!
-சூர்யா-




http://www.facebook.com/photo.php?pid=401054&id=1782415579&subject=154437608809



Saturday, 12 June 2010

தமிழா! நீ தமிழனென மீண்டுமெழு

தமிழா! நீ தமிழனென மீண்டுமெழு
தமிழா! உனை ஆரியன் அழித்தான்
தமிழா! உனை திராவிடன் அழித்தான்
தமிழா! உனை சிங்களவன் அழித்தான்
தமிழா! உனை இந்தியன் அழித்தான்
தமிழா! அந்நியர் பலர் அழித்தார்- தோழா
தமிழா! நீ தமிழனென மீண்டும் எழு

--சூர்யா-

திராவிடம் பேசி தீராவிஷம் கக்காதீர்

திராவிடம் பேசி தீராவிஷம் கக்காதீர்
உறைவிடம் இன்றி உன்னினம் தெருவில்
மறைவிடம் இல்லை மானம் காக்க
கழிவிடம் உன் சோதரர் புதைகுழி
அறிவிடம் கூடி விடிவைத் தேடு - தோழா
திராவிடம் பேசி தீராவிஷம் கக்காதீர்

-சூர்யா-

Tuesday, 8 June 2010

வினவின் கனவை உடைப்போம் வாரீர்


பதிவுலக நாட்டாமை; இல்லையில்லை எருமை
வினவுக் குழுமம் கண்டது ஓர் கனவு
வினை செய்தால் திணை விளையுமென்று
பிரிவினை செய்தாய் கபடத்துடன் கனியுமென்று
தாங்கள் உத்தமர்களாம் உதவாக் கரைகள்
கறை படிந்து பரி வேசம் பூணும் நரிகள்
கபடக் கூட்டம் தமிழனைப் பிரித்திடலாமென்று
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடலாமென்று
நரியதை உரித்துக்காட்ட இங்கு பரிகள் கூடும்
பயந்து தூர வெட்கி இனிப் பன்னிகள் ஓடும்
தமிழனைக் கூறுபோட வினவினாய் நீவிர்
சதி இங்கு உடையாதென்றா கனவா உமக்கு
விதி என்று அடங்கிட அடிமைகளல்ல நாம்
மானத் தமிழரடா! ஓட்டாதே உன் பிரிவினையை
ஈனப் பிறவிகளே! அழிந்ததடா உன் முகத்திரையே.

-ஆக்கம்: சூர்யா-

********************************************
வினவு தளம்: எச்சரிக்கை! எச்சரிக்கை!
http://tamilcause.blogspot.com/2010/06/blog-post_7110.html
Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thirukkural திருக்குறள் Holykural



Kural குறள் - 533

பொருட்பால் - பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு.

Translation :
'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Explanation :
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis